Saturday, July 28, 2007
பை பை சின்சி.....
Wednesday, July 25, 2007
சின்சினாட்டியில் என்ன நடந்தது?
சின்சினாட்டியில் நடந்தது என்ன அப்படினு இதற்கு முந்தைய பதிவில் கேட்டதற்கான விடை இதோ.. எல்லாரும் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்த பதில் இதோ... ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாதுதான் என்ன பண்றது..அப்படியே பழகியாச்சு...Monday, July 23, 2007
சின்சினாட்டியில் வலைப் பதிவர்கள் சந்திப்பு

சந்திப்பு ஏற்பாடு செய்த "கிளிவ்லேண்ட் ஹீரோ,வலைஉலகத்தின் காமடி புயல்,மதுரை மாப்பிள்ளே, அருண்..

அரங்கம் தேவையில்லை ,வாயிலே போதும் என்று கூட்டத்தை தொடங்க உத்தேசித்த கட்சிக்குழு!!!! (கார்த்தி,அருண்,நான்)

கரைவேட்டி இல்லை, காலில் விழும் கலாச்சாரம் இல்லை... கொள்கையே முக்கியம்...

சந்திப்புக்கு பின் உறவினை மேம்படுத்த நடந்த சமபோஜன பந்தி... !!!
Thursday, July 19, 2007
சும்மா அதிருதில்ல......

நாளைக்கு சொல்லுகிறேன்.. என்ன நடந்தது என்று...
Thursday, May 17, 2007
எனக்கு இப்பொழுதுதான் தெரியும்

Sunday, April 29, 2007
அசுரனும் அழகுதான்
சத்யபிரியனையும்) எழுத சொல்லிட்டு கடைசியில் இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.அதான் என் மேல ஒரு அதீத நம்பிக்கையில் அசுரனும் அழகுதான் தலைப்பு வைச்சுட்டு நானும் அழகுனு(நீயே சொல்லிகிட்டாத்தான் உண்டுனு நீங்க சொல்றது எல்லாம் கேட்குது கேட்குது) சொல்லி இந்த உரையினை ஆரம்பிக்கிறேன்(இந்த கார்த்தி நம்பள அமைச்சரா அறிவித்ததில் இருந்து இப்படியே ஆயிடுச்சி. ஸ்ஸ்ஸ்ச்ச்ப்பா சோடா பிளீஸ்)
இந்த உலகத்தில் எல்லாமே அழகுதான்.உலகின் எல்லா பகுதிகளிலும்,எங்கேனும், எதோ ஒன்றாய் அழகு ஒளிந்தே உள்ளது. அது அஃறினையோ அல்லது உயர்தினையோ, இயற்கையோ அல்லது செயற்கையோ இல்லை வேறேதேனும் நிகழ்வுகளாகவோ இந்த பிரபஞ்சம் அழகாகத்தான் விரிகிறது.ஆனால் அதனை அனுபவிப்பதும்,அதன் அழகை உணர்வதும் ஒரு வகை கலை.அந்த உணர்வு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.ஆம், அதனால்தான் அசுரனும் என் கண்ணிற்கு அழகாய் தெரிகிறான்.
என் வீட்டு தொட்டிச்செடியினை
கடந்து சென்றபோது
எதிர் வீட்டுக்காரனின்
குரல் சொல்லியது
செடியில் பூத்த மொட்டுகள் அழகாம்..
செடியில் பூ இருந்ததா?
திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்
சன நெரிசலில் கரைந்து போகிறேன்...
இப்படி அழகை தவற விடுபவர்களின் கண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களை என்ன செய்வது?.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது? அவர்கள் சொன்ன அழகினில் சில நானும் அனுபவித்ததுண்டு.இன்னும் சில இனிமேல் அனுபவிக்கும் போது அழகாய் தெரியும்.அவர்கள் விட்டுவிட்ட நான் பார்த்திட்ட,அனுபவித்த அழகினை இங்கு தொட நினைக்கின்றேன்.
என் புலன்கள் உணர்ந்த பல அழகில் சில (ஆறு)
1. "ழ":
தமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து. பார்க்க மட்டும் அல்ல சரியாய் பேசும்போதும்,
அதன் உச்சரிப்பை கேட்கும் போதும் "ழ" அழகுதான்."ழ" என்ற ஒற்றெழுத்துவை மட்டும் இந்த வகைக்குள் அடக்க விரும்பவில்லை. "ழ" வை நான் பேச்சுத்தமிழோடு இணைத்தே பார்க்கிறேன்.கரகர குரலில் அழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுதல் அழகு. அது யாராக இருப்பினும்.(உ.ம்) கலைஞர்,வைகோ,பாரதிராஜா,வைரமுத்து,
பட்டிமன்ற பெண் பேச்சாளர் பாரதி(சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் வரும் பெண் பேச்சாளர். பெயர் சரியா? ஒருவர் காந்திமதி.இவர் இன்னொருவர்) வின் பேச்சுகள் அழகு. யாழ் தமிழும் ,பிழை இல்லா கேரள தமிழும் மிக அழகுதான்.
2.கிராமத்து திருவிழா:
சண்டை போட்டவன் சமாதானமாகிப் போவதும், சமாதானமாய் இருந்தவன் சண்டையிட்டுக் கொள்வதும், மாமன், மச்சான்,அத்தை,சித்தப்பு,பெரியப்பு, அண்ணன்,தங்ககைகள்,அக்கா,தம்பிகள்,முறைப் பெண் என உறவுகளே ஊராய் திரியும் கிராமத்தின் திருவிழா அழகு. அந்தத் திருவிழா நாட்களில் கவலை மறந்து,வேலை மறந்து களிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கும் கிராமத்து திருவிழா அழகு.ஊர் முழுவதும் குழாய் மைக்குகள், தெருவெங்கும் தோரணங்கள், பெருசுகளின் அரட்டைகள், பறையாட்டம்,கரகாட்டம்,நாடகம்,கறிச்சோறு,மதுநெடி,மாமன்களின் கேலிப் பேச்சு, தாவனி கட்டிய முறைப் பெண்ணின் மஞ்சள் தண்ணி, என கிராமத்து திருவிழா அழகோ அழகு.
3.தீப ஒளி:
சூரிய ஒளி,நிலவின் ஒளி, மின்சார விளக்கின் ஒளி என எல்லா ஒளிகளும் வெளிச்சத்தினை கொடுத்தாலும்,பிரகாசத்தினை தந்தாலும் மிக அழகாய் தெரிவது தீப ஒளியே. என் தோழியின் மூலமாய் நான் உருவ வழிபாடுகளை விட்டு விலகி இருந்த காலங்களில் ஒளியின் மீது இன்னமும் காதல் பிறந்தது. சிலைகளற்ற இடத்தில் வெறும் விளக்கினை மற்றி ஏற்றி ,அதன் சுடர் பிரகாசம் மனதுக்குள் என்னவோ செய்யும் ஒன்று.கார்த்திகை மாதங்களில் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் விளக்கினை ஏற்றி வைக்கும்போது அது நின்று எரியும் அழகினை நானும் நின்று ரசித்திருக்கிறேன்.அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு. மாதா கோயிலின் மெழுவர்த்தி உருகி கரைந்திடுகையில் அதன் அழகு இன்னமும் கூடும்.
4.போராளிகள்:
தனக்கு பின்னால் தன் சமூகம் நலம் பெற வேண்டும்,தான் அனுபவித்த நச்சுக் காற்று மறைந்து தன் சந்ததியினர் நல்ல காற்று சுவாசிக்க வேண்டும் என்பதற்காக போராடும் எல்லா போராளிகளும் அழகானவர்கள்.தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.
5.வெள்ளை வேட்டி/சட்டை/மீசை:
அது என்னமோ தமிழனுக்கு ஒரு கர்வத்தினையும்,அழகினையும் தருவதில் இவைகளே முதலிடம் என்று சின்ன வயதிலிருந்தே ஒரு அழமான நம்பிக்கை.எனக்கு வேட்டி கட்ட சரியாக தெரியாவிட்டாலும் ஒவ்வோரு பண்டிகையின் போதும் நானும் விடா முயற்சியாய் வேட்டி அணிந்துகொள்வேன்.எஜமான்,நாட்டாமை(சியாம் நீங்களும் இப்படித்தான் முறுக்கு மீசை வச்சு,வெள்ளை வேட்டி எல்லாம் கட்டி இருப்பீங்களா?),கிழக்கு சீமையிலே மாதிரியான படங்களை பலமுற நான் பார்த்ததுக்கு இந்த வேட்டி சட்டையும் மீசையும்தான் காரணம். அப்புறம் மீசை. என் அரும்பு மீசை வளரத்தொடங்கியதில் இருந்தே என்னில் அழகாய் நான் கானுவது என் மீசையினைத்தான். பாரதியின் மீசை, எனது அப்பாவின் மீசை என அழகாய் தெரியும் மீசைகள் ஏராளம்.அதே மாதிரி உல்லாசம் படத்தில் விக்ரமின் மீசைக்காகவே "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா "பாடலை பலமுறை பார்த்துள்ளேன். காதல் மன்னன்,உயிரோடு உயிராக படக் காலத்தில் வரும் அஜித்தின் மீசை அழகானது.
6.
அதிகாலை காபி,
அந்திமச் சூரியன்,
அம்மாவின் புண்ணகையினில் மறையும் அவள் கண்ணத்து கோடு,
சாய்வு நாற்காலியில் செய்திகளுடன் உறங்கும் அப்பா,
பழசாகிப் போன பைக்,
இரைச்சலாய் இயங்கும் நகரம்,
டிராஃபிக் சிக்னலில் காணும்
சேலை கட்டிய தேவதைகள்,
எதிர்பாரமல் சந்திக்கும் பள்ளிக் கால நண்பன்,
சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா,
காதில் கரையும் இனியே மெல்லிசை,
உறங்குவதற்கு முன் ஒருமுறையேனும்
நினைத்துவிடும் முதற்காதல்
என இவற்றில் ஏதேனும் ஒன்று
கூடியோ அல்லது குறைந்தோ
அழகாய்த்தான் இருக்கிறது
என் அன்றாடப் பொழுது
சாலையோரக் குழந்தையின்
புண்ணகையினை சுமந்து கொண்டு....
பிரியா, எதோ எனக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு பட்ட ,அனுபவித்த, நம் நண்பர்கள் எழுதாத அழகினை எழுதியுள்ளேன். அதுவும் மிகவும் தாமதமாக.இதற்கு அப்பாலும் இதைப் பத்தி எழுத நம்ப நட்பில யாரும் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியாரவது இருந்தீங்க அப்படினா நான் டேக் பண்ணினதா நினைச்சு எழுதிடுங்க.
'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்"னு நான் எங்கேயோ கேட்டது. அது அப்படியே எல்லாருக்கும் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...
Thursday, March 29, 2007
இங்கேயும் வியர்டு (படிக்க)கிடைக்கும்
புயலாய் பி.மு.க கட்சியில் நுழைந்த கோபி எனக்கு ஒரு வலை(வீட்டு)வேலை குடுத்தார். உன்கிட்ட இருக்கிற வியர்டான விசயம் என்னனு கொஞ்சம் தமிழ் கூறும் நல்உலகத்துக்கு எடுத்துசொல்லுப்பா அப்படினு. ஆனா நாம வழக்கம்போல ஆணிய பிடுங்கிட்டு(இல்ல அப்படி பிடுங்கின மாதிரி நடிச்சிட்டு) இருந்ததுல எழுதறததுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு. தாமதத்திற்கு வருந்துகிறேன் கோபி.சரி விசயத்துக்கு வருவோம். வியர்டுனா என்ன அது நமக்கிட்ட இருக்குதானு தேடிப் பார்த்து சொல்லுவோம்னு பார்த்தா, நான எங்க வீட்டுல பிறந்ததே வியர்டுதான் அப்படிங்கிறத தவிர வேற ஒன்னும் தேறமாட்டேன் என்கிறது... ஆனாலும் விடுவோமா ... தெரியாதத தெரியும்னு சொல்லி வேலை பார்க்கிற நமக்கு இது என்ன புதுசா என்ன. தேடிக் கண்டு பிடித்து இதோ....
வியர்டு 1 : வாசித்தல்:எவன்டா இவன் இதப் போய் வியர்டு சொல்ரானேனு நீங்க சொல்றது கேட்குது..ஆனா, வாசித்தல் அப்படினு நாம சொன்னது கதை புத்தகத்த எப்படி வாசிக்கிறது அப்படிங்கிறதுதான். சின்னபுள்ளையா இருக்கிறப்ப வீட்ல கதைபுத்தகம் படிக்க விடமாட்டங்க. ஆனா நமக்கு அத படிக்காம இருக்க முடியாது.. என்ன பன்றது எப்படியாவது படிச்சே ஆகனும் இல்லைனா சோறு தண்ணி இறங்காதே.நான் எங்க வீட்ல மத்தவங்க யாரும் பண்ணாத நான் செய்ய ஆரம்பித்தேன்.பாட புத்தகத்த எடுத்து வைச்சுகிட்டு அதுக்குள்ள மறைச்சு வைச்சு காமிக்ஸ புத்தகம் படிக்க ஆரம்பித்ததேன். இன்ன வரைக்கும் அவங்கனால அத கண்டு பிடிக்க முடியல. அப்படி தொடர்ந்த அந்த வாசிப்பு அப்புறம் அப்படியே மற்ற எல்லாவகையான கதைபுத்தகத்திலையும் கொண்டு போய் விட்டுடுச்சு.அதுல முக்கியமானது இந்த ஆனந்த விகடன் படிக்கிறது. ஆவி படிக்கிறதுல நான் ஒரு பைத்தியமாகவே மாறிப் போனேன். புத்தகம் வாங்கியதும் அதனை திறத்து, அந்த புத்தகத்தின் வாசத்தினை முகர்ந்த பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். படிக்கிறது எப்படி ,கடைசிப் பக்கத்தில் இருந்து முந்தைய பக்கத்திற்கு வருமாறுதான். அது அப்படியே இன்னமும் தொடர்ந்து இப்ப எல்லா புத்தகத்தையும் பின்னாடி இருந்துதான் படித்து வருகிறேன்.
வியர்டு 2:இருளும் தனிமையும்:அது என்னமோ தெரியல ,எனக்கு இந்த இருள் ரொம்ப பிடிக்கும் . ஒரு வேளை கருமைதான் எனக்கு பிடித்த கலர் என்பதாலாவோ என்னவோ இருளில் தனியாய் இருக்க பிடிக்கும். மின்சாரம் போனதுனா ஊரே வருத்தபடுவாங்க..ஆனா நான் மட்டும் சந்தோச படுவேன். மெழுகுவர்த்தியோ, விளக்கோ எல்லாரும் தேடிகிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் தனியா என் அறையில் படுத்து கொண்டு சத்தமாய் பாட்டு பாடிக் கொண்டு இருப்பேன்.(குரல் நல்லா இருக்குமா அப்படினு எல்லாம் நீங்க சாதரணமாய் யோசிக்க கூடாது.ஏன்னா நான் தான் வியர்டாச்சே.)இப்பவெல்லாம் பாட்டு பாடுறத விட பாட்டு கேட்கத்தான் பிடிக்குது..இந்த மாதிரி சூழ்நிலைக்குனே என்கிட்ட ஒரு பாட்டு பட்டியலே இருக்கு.உ.ம் : காக்கை சிறகினிலே..., ஏழாவது மனிதன் படத்திலிருந்து மற்ற எல்லா பாடல்களும், பூவே செம்பூவே..., தேவதை இளம் தேவதை,பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய் ன்னு.....நீண்டு கொண்டே போகும் .எனவே தனியாய், இருளில் பாட்டு பாடிக்கொண்டே(பக்கத்துல இருக்கறவங்கள பத்தி கவலை படாம),அல்லது கேட்டுக்கொண்டே இருக்க பிடிக்கும். மொட்டை மாடில படுத்துகிட்டு வானத்த பார்த்துகிட்டு இருக்கிறப்ப அந்த இருள் அழகு.
வி.டு 3: மழையில் நனைதல்:ச்சோ என்று பெய்யும் மழையானாலும் சரி, சிறு சாரலாய் இருந்தாலும் சரி மழையில நனைய சந்தோசம். எப்படா மழை வரும் அப்படினு காத்து கிட்டு இருப்பேன். மழை வந்தது அப்படினா விடு ஜீட்.. அப்படியே மழையில போய் நனைஞ்சுகிட்டு ஊரெல்லாம் சுத்தி, தொப்பல் தொப்பல வீட்டுக்கு வந்து நின்னு அம்மா கிட்ட திட்டு வாங்கினோம் அப்படினா அது வாழ்க்கை.இப்பத்தாண்ட நீ இயற்கையின் காதலன் அப்படினு எனக்கு நானே சொல்லிக்கிட்டு திரிவேன். நனைதல் கொஞ்சம் கொஞ்சமாய் வேறு படத் தொடங்கியது . முதலில் மழையில் நனைந்து நடக்க பிடித்தது.பிறகு நனைந்து கொண்டு அப்படியே வந்து அம்மா கிட்ட காபி கேட்டா அவங்க இல்லைனு சொன்னதுக்கு அப்புறம் திரும்பவும் பக்கத்தில இருக்கிற டீக் கடைக்கு போயி சுடச்சுட காபி குடிக்கிறது. மழையில நனைஞ்சிட்டு அப்படியே ஐஸ்கீரிம் பார்லர் போய் ஐஸ்கீரிம் சாப்பிடுறதுனு மாறிகிகிட்டே இருக்கு
வி.டு 4: குலைச்சு அடிக்கிறது.
சாப்பிடறதுல எனக்கு நிகர் நானே தான் . அதுவும் எங்க வீட்ல கொஞ்சம் மக்கள்தொகை அதிகம்(இத பத்தி ஒரு தனிப் பதிவு விரைவில்ல்ல்ல்).அதுனால முன்னே யாரு வராங்களோ அவங்க அதிர்ஷ்டசாலி .ஆனா என் அண்ணாவுக்கு மட்டும் அம்மா தனியா எடுத்துவைச்சுடுவாங்க.. நம்மள மட்டும் எனோ மதிக்க மாட்டாங்க..சரி சரி விசயத்துக்கு வரேன். நாம எப்பவுமே தனியா சாம்பார் ஊத்தி சாதம் சாப்பிட்டாலும் இந்த சாம்பரோட தயிர் சேர்த்து சாப்பிடுறது தனி ருசி.இட்லி அப்படினா தேங்காய் சட்னியும் தக்காளி குருமாவையும் ஒன்னா குலப்பி அடிக்கிறது, கறி குழம்போட ரசம் சேர்த்து சாப்பிடுவது, தேனீரோடா பருப்புவடை(இத எங்க ஊர்ல ஆமை வடைனு சொல்லுவாங்க. ஏன் இப்படி பேர் வந்துச்சுனு நிறைய நாள் யோசிச்சு யோசிச்சு .... என்ன நடந்தது ஒன்னும் நடக்கல இன்னும் யோசிக்கிறேன்) சாப்பிடுறது தேனீர் ஒரு வாய், வடை ஒரு வாய்னு இப்படி ஒன்னோட ஒன்னு இணைத்து சாப்பிடறது நம்மகிட்ட இருக்கிற இன்னொரு வியர்டு விசயம். ஆனா இது நம்ம வீட்ல மட்டுமே செயல் படும்கிறதுனால நடைமுறை சிக்கல் இருக்கு..
வி.டு 5: 5.1,5.2,5.3..,,,,???###ஹி..ஹி .இன்னும் நிறைய விசயம் இருக்கு மக்கா. நீ பாட்டுக்கு 5 மட்டும் எழுதுனு சொன்னா நான் என்ன பன்றது. அதுனால இது கீழ்கண்டவாறு வகைபடுத்தப் பட்டுள்ளது
5.1 ரெளத்திரம்:
அதாங்க கோபம் .நமக்கு இது கொஞ்சம் அல்ல நிறையவே .இந்த முன் கோபம் ,பின் கோபம், நடு கோபம்னு எல்லா கோபமும் சரியான நேரத்தில வந்திடும். அம்மா கிட்ட இருந்து அடுத்த மனிதன் வரைக்கும் கோபம் கொந்தளிக்கிறது.என்னால கட்டுபடுத்த முடியாத விசயம் இது மட்டுமே. வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கொண்டு வரைவோலை வாங்கும்போது அந்த அலுவக நண்பர்(???) வீட்டுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ சம்பந்தமற்ற விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் போது கோபம் பொத்துகொண்டு வருகிறது அவரின் மேல்.அலுவலகத்தில் குழுமனப்பான்மை இல்லாத சக ஊழியனிடம் கோபம்,எப்போதெல்லாம் இலங்கையில் ஒரு தமிழ் குழந்தை அனாதையாகிறதோ அப்போது எல்லாம் புத்தரின் மேல் கோபம்,மிகைபடுத்தப் பட்ட செய்திகளை தரும் நாளிதழ்களின் மீது , என எல்லாரிடமும் சீக்கிரம் வரும் கோபம் என்னை விட்டு மெதுவாகவே செல்லுகிறது. எப்ப மாறுமோ?5.2 நேர்த்தி:
நானாய் எடுத்துகொண்ட வேலையோ அல்லது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையோ அது நேர்த்தியாய் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் உழைப்பது. இதுவே எனக்கு சங்கடமாய் அமைந்த நேரங்கள் பல. ஆனாலும் நேர்த்தியாய் சிறப்பாய் குடுப்பதில் மெனக்கெடுவேன்.5.3 பாசம்:
நான் ஒவர் செண்டினு என் எல்லாம் தெரிந்த தோழி திட்டிகிட்டே இருப்பா.நான் அதிகமாய் பாசமாய் இருந்து அதே மாதிரி அனைவரும் இருக்க வேண்டும் என எண்ணி அறிவால் முடிவெடுக்க வேண்டிய விசயங்களை மணத்தால் முடிவெடுத்து வருத்தமே உற்றாலும் பாசம் மட்டும் குறைய மறுக்கிறது எல்லாரிடமும்.
5.4 கடைசி நிமிட வேலை:முன்னமே திட்டமிட்டு வேலைகளை வரைமுறை படுத்தினாலும் என் சோம்பல் காரணமாய் நாளை செய்வோம் என்று எனது நிறைய வேலைகள் கடைசி நிமிடத்திலெயே முடிக்கப் படுகிறது. இது மட்டும் மாறிட்டா......
5.5.தனித்து இருத்தல்:
வெள்ளையாய் உலகம் இருப்பின்
அதனில் கரும் புள்ளியாய்
நான்.
சரியோ தவறோ
தனித்து இருக்கவே அசைபடுகிறென்
!!!@@@@@###.இப்படி எதாச்சும் கிறுக்கி மத்தவங்கள குழப்பறது....இதுக்கு பேருதான் வியர்டானா நீங்க தான் சொல்லனும்.. கோபி வேலைய முடிச்சாச்சு. எதாச்சும் ஒரு செண்ட் பாட்டில பார்சல் செஞ்சுடு.. இப்பதைக்கு இது அவுட் ஆப் வலை உலகம் ஆயிடுச்சு. அப்படியே பார்த்தாலும நமக்கு தெரிஞ்ச மக்கள் எல்லாரும் அல்ரெடி எழுதியாச்சு.அருண் நீ மட்டும்தான் பாக்கினு நினைக்கிறேன்.எனவே உன்ன மட்டும் இப்ப கூப்பிடுறேன்.....



