Thursday, October 26, 2006

மணி விலாஸ்

எல்லா இடங்களிலும் எப்படிச் சுற்றித் திரிந்தாலும்,என்னவாகிப் போனாலும் நான் நானகிப் போவது என் வீட்டில் மட்டுமே. ஆம் நான் இங்கு மட்டுமே மிகச் சுதந்திரமாய் , எனது கனவு,காதல்,ஆசை,சந்தோசம்,விருப்பம், வெருப்பு,உண்மை,கோபம்,துக்கம்,எதார்த்தம் என எல்லாவற்றையும் வெளிக்காட்ட முடியும். எனவெ,கனவுகளும் உண்மைகளுமாய் ஆன எனது வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்ய நான் கட்டிய வலை(ப் பக்கம்)வீடு தான் இந்த மணி-விலாஸ்....

நான் கட்டிய இவ் வரைகளற்ற நான்கு சுவர்கள் எனக்கு சுகம்தான்.ஆனால் அதே வேளையில், யாரேனும் ஒருவராவது,எப்போதாவது, ஒரு வேளையாவது இம் மணி-விலாஸில் தங்கி இளைப்பாரிட நேர்ந்தால் நான் மனிதமாகிப் போவேன் என்ற எதிபார்ப்புகளும், நம்பிக்கைகளுமாய் உங்களுக்காக என் வாசற் கதவுகளை திறந்தெ வைத்து வரவேற்பரையில் காத்து கொண்டு இருக்கிறேன் வணக்கங்களுடன்.-மணி ப்ரகாஷ் மு


17 comments:

Syam said...

ஐயன் வள்ளுவன் சொல்படி அகரமுதல எழுத்தெல்லாம் ஆண்டவன் பாத்துக்குவான்னு பிளாக் ஆரம்பிச்சுட்டீங்க...வாழ்த்துக்கள் தொடரருங்கள் யாகத்தை :-)

கடல்கணேசன் said...

ஆகா நாட்டாம முந்தியாச்சா.. நானும் வாழ்த்துகிறேன்..ஏழு கடல் உள்ள வரை உங்களின் ப்ளாக் பணி தொடரட்டும்.. ஜாலியா எழுத ஆரம்பிங்க.. உங்களுக்கு சொல்லவா வேணும்..

கடல்கணேசன் said...

'கற்றது கடலளவு-8' ல் நீங்கள் கொடுத்திருந்த லிங்க்கை க்ளிக் செய்தால் உங்களின் புது வீட்டுக்கு கொண்டு வரும்படி, மாற்றிவிட்டேன்.
எதற்கும் அடுத்த கமெண்ட்டிலும் புது முகவரி எழுதுங்கள். நான் லிங்க்காக மாற்றி விடுகிறேன்.

மணி ப்ரகாஷ் said...

@Syam
வாழ்த்துகளுக்கு நன்றி... தவறாமல் வாரந்தோறும் வந்து விடுங்கள்...

@KG.
நன்றி.. உங்களின் வாழ்த்துகளே எனது உந்து சக்தி... வாரம் தோறும் தவறாமல் வந்து விடுங்கள்..

இலவசக்கொத்தனார் said...

மணி விலாஸ் ஹோட்டலுக்கு வந்தாச்சு, சூடா எதனா குடுங்கப்பா!

புது விலாசத்திற்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

Thozhaa..... Kalakkureenga.......!!
Vazhuthukkal........!!!!!!!

Mazhai Sneham...Marukka Mudiyadha Nijam...!!!! Nammil Palarukkum...!!


ippadikku Koolam saarbaaga
Vanitha(a)Surya

மணி ப்ரகாஷ் said...

@ இலவசக் கொத்தனார்
//மணி விலாஸ் ஹோட்டலுக்கு வந்தாச்சு, சூடா எதனா குடுங்கப்பா//


மணி -விலாஸ் ங்கிறத வீடுங்கிற அர்த்தத்தில கட்டினேன்..நீங்க ஹோட்டலா மாத்திட்டீங்க,

எனக்கு தேவை உங்க வருகைதான்.. வீடா இருந்தா என்ன ஹோட்டலா இருந்தா என்ன

முதல்ல இந்தாங்க தம்ளர் நிறைய தண்ணி..

இதோ சூடா பால் வருது...

மணியன் said...

புதிய வீட்டில் காலடி எடுத்து வைக்கும் சக மணிக்கு மணிமலர் சார்பாக வாழ்த்துக்கள்!!
சூரியர் சந்திரர் இருக்கும் வரை உங்கள் பதிவு தொடர்ந்திருக்க வாழ்த்துக்கள் !!

மணி ப்ரகாஷ் said...

@இலவசக்கொத்தனார்.
வாழ்த்துகளுக்கும்,வருகைக்கும் நன்றி.
எனது மற்ற பதிவுகளையும் பார்த்து,கருத்து சொல்வீர்கள் என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறேன்...

மணி ப்ரகாஷ் said...

@வனிதா

வருக்கைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி.
//Mazhai Sneham...Marukka Mudiyadha Nijam...!!!! Nammil Palarukkum...!!/

ஆமாம். அதில் நானும் ஒருவனாய்..

வேண்டுகோள்:
அனானியாக வராமல் ,உங்களது பிளாக் ,அல்லது Others options ல் வந்தால் நன்றாய் இருக்கும்..

மணி ப்ரகாஷ் said...

@திரு.மணியன்.

//சூரியர் சந்திரர் இருக்கும் வரை உங்கள் பதிவு தொடர்ந்திருக்க வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி....

உங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி..

தவறாமல் வரவும்.பிற பதிவுகளையும் பார்த்து கருத்து தெரிவித்து எனை வழிப் படுத்தவும்..

G3 said...

இதோ உங்கள் விருந்தோம்பலை ஏற்க வந்துவிட்டேன். மழை பத்தின கவிதை சூப்பர். :)

மணி ப்ரகாஷ் said...

//இதோ உங்கள் விருந்தோம்பலை ஏற்க வந்துவிட்டேன்.//
வாங்க G3..

இந்தாங்க பால்..

இருந்து சாப்பிட்டு சின்னஞ்சிறு கதை பேசி,மகிழ்ந்துட்டு போங்க

//மழை பத்தின கவிதை சூப்பர்.//

நன்றி..

எப்போ மற்றதை வாசீப்பீர்கள்?

Anonymous said...

All things[items] are very good da. Keep it up.

All the best.
\Arumugam M

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு !!!! ஆதுவும் திண்டுக்கல்ல இப்படி ஒரு விலாசமா? ஆச்சரியம் தான் :)
me too from DGL.
- 'karthick sundar' @ orkut

மணி ப்ரகாஷ் said...

@ Arumugam..

Thnks da,., appa appa vanthu paru.. weekly once update pannuven

மணி ப்ரகாஷ் said...

@'karthick sundar'

vannakkam karthick.. dgla.. romba sonthosam.

dgla enga?

ithu en kanavu veedu karthik...