Saturday, October 28, 2006

மழைச் சிநேகம்...

எனக்கு மிகவும் பிடித்தமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்று மழை பெய்தல். மழை பெய்தலும்,அதில் நனைந்திருத்தலும் எத்துனை சுகமான ஒன்று.. இதோ என் நேற்றைய நனைதலுக்கு பின்..

மழை
இரு எழுத்து கடவுள்...

நீ பெய்யப் படும் போதெல்லாம்...
மண் வாசனையுறும்
பயிர் சிலிர்க்கும்
விவசாயி உயிர் பெறுவான்
மழலை கப்பல் விடும் கட்டாந் தரையில்..

உன் வருதலுக்கான
காத்திருத்தல் என்னமோ கஷ்டமானதுதான்
ஆனால் வந்தபின் உண்டாகும் நனைதலில்
கஷ்டம் கரைந்தோடுகிறது
என்மேற் படிந்த புழுதியோடு சேர்ந்து...

குடை பிடித்து மழை நனையாரை
ஏளனம் செய்கிறது என் மனம் இவ்வாறே
" நீர், சேட்டை செய்யாக் குழந்தையைப் போல்"
மழை நனையத்தான்,
ஆம் நனைக்கத்தான் மழை எனவே நனைவீர்...

முன்நெற்றி மழை நீர் முகம் வழிந்து ,
தொண்டைக் குழி நனைத்து,
உடையும் உடலும் ஒட்டி,
மனமில்லாமல் வீடு சேர..
வீதி பார்த்திருந்த அம்மா
கோபம் காட்டி, தலை துவட்டி ,காபி தந்து
என் மழை நனைதலை அவசியப்படுத்தினாள்...

உனக்கும் எனக்கும் உண்டான முதற் சகவாசம்
எப்பொது நிகழ்ந்து இருக்கும்?
விடை தேடுகிறேன்
என் முந்தைய நனைதலிலிருந்து...

அம்மாவின் கருவறைத் தங்குதலிலா
அப்பாவின் தோள் தூங்குதலின் போதா
நட்புகளுடன் கரைந்த பொழுதுகளிலா
இல்லை நான் மட்டும் தனியாய் திரிந்த வேளையிலா!!!
ஆம் விடை தேடுகிறேன்
என் ஒவ்வொரு நனைதலிலும்...

விடை அறிவோனோ இல்லையோ
ஆனால் நனைதல் மட்டும் தொடரும்
என் கல்லறையிலும்...

ஆம் மழை நனைக்கத்தான்!!!

30 comments:

Arunkumar said...

உங்களுக்கு மழைய நனச்சா கவிதை வருது. எனக்கு ஷ்ரேயா ஞாபகம் தான் ஒஸ்துந்தி ;-)

அருமையான கவிதை !!!

கீதா சாம்பசிவம் said...

மணி ப்ரகாஷ், மழை எனக்குப் பிடிக்காதுங்கிற அர்த்தத்திலே நான் எழுதியது உங்களுக்குப் புரிஞ்சதுன்னா தப்பு என் எழுத்திடம் தான். இன்னொரு முறை கூர்ந்து கவனித்துப் படியுங்கள், நான் சொல்ல வருவது புரியும்.என்னாலே நனைய முடியாதே தவிர, மழையையும், அதன் ஆரவாரத்தையும் ரசிக்கிறவள்தான் நான்..கொஞ்சம் புரியும்படி எழுதி இருக்கணும் நான்.

மணி ப்ரகாஷ் said...

@Arun..

எனக்கும் அப்படித்தான்..ஆனால் கொஞ்சம் லேட்டாய்த்தான் இதுக்கு அப்புறம் வருது...

நன்றி!!!

@கீதா சாம்பசிவம்..

இத்துனை காலமாய் எழுதுகிற உங்கள் எழுத்திடம் தவறா? இல்லை என் வாசித்தலிலும்,புரிதலிலும் தவறாய் இருக்கும்..இன்னும் ஒரு முறை ஆழமாய் படித்து எழுதுகிறேன்..

//என்னாலே நனைய முடியாதே தவிர, மழையையும், அதன் ஆரவாரத்தையும் ரசிக்கிறவள்தான் நான்//

நனைந்து ரசிப்பதை விட நனையாமல் ரசிப்பது இன்னும் ஆனந்தம் தான்..

உங்கள் வருகைக்கும் ,பகிர்தலுக்கும் நன்றி..

Syam said...

எனக்கு ஷ்ரேயா மட்டும் இல்ல..எல்லா ஹீரோயின்சும் நியாபகத்துல வராங்க... :-)

சூப்பரா கவிதை எழுதி இருக்கீங்க..

தாரிணி said...

அடாடா மணிப்ரகாஷ், என்னை மழையில் நனைய வைத்து விட்டீர்கள்.(கூட டூயட் பாடலாம்னு கற்பனை பண்ணீராதீங்க.. நான் பொண்ணு இல்லை தம்பி..)

அழகா கவிதை எழுதியுள்ளீர்கள்.. தொடருங்கள்..(யாருன்னு யோசிக்கிறீங்களா?- இந்த அருண்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்- என்னோட இன்னொரு முகத்தை தாரிணியின் பக்கத்தில் வந்து பாருங்கள்.. நானே தான்.. கடல்கணேசன்)

இது கவிதை பதிவு என்பதால் கடல்கணேசனுக்கு பதில், தாரிணி வந்தாள் இங்கே கமெண்ட் எழுத..

TheeKunju said...

கவிதை சுமார் ரகம்தான்...வார்த்தை ஜாலம் நன்றாக உள்ளது...
இன்னும் சிறப்பாக உன்னால் எழுத இயலும்...
பிழை இல்லாமல் இருப்பது மகிழ்சி...

இப்படிக்கு,
சரவணா சக்கரவேல்

Anonymous said...

நீ பெய்யப் படும் போதெல்லாம்...
மழலை கப்பல் விடும் கட்டாந் தரையில்..
நனைதலில்
கஷ்டம் கரைந்தோடுகிறது
என்மேற் படிந்த புழுதியோடு சேர்ந்து...
மழை நனையத்தான்,
ஆம் நனைக்கத்தான் மழை எனவே நனைவீர்...

நன்றி நன்றி. கவிதைக்கு வாழ்த்துக்கள்.

Arunkumar said...

@tharini,

//இந்த அருண்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்-//

edo, maniprakash enakku nalla samachi podraaru, adu vungalukku pidikkaliya?
:)

@mani,
inda line-a chumma free vitrunga :)

மணி ப்ரகாஷ் said...

@Syam

//எனக்கு ஷ்ரேயா மட்டும் இல்ல..எல்லா ஹீரோயின்சும் நியாபகத்துல வராங்க... :-)//

தொண்டன் அருண் ஷ்ரேயாவ நினைச்சா தலைவர் ஷ்யாம் எல்லா ஹீரோயின்சும்.. இதுதான் தலங்கிறது..

good captaincy!!!

//சூப்பரா கவிதை எழுதி இருக்கீங்க..//

நன்றி..

மணி ப்ரகாஷ் said...

@தாரிணி
//யாருன்னு யோசிக்கிறீங்களா?- // அதான பாத்தேன் நம்ம வீட்டுக்கு சங்க தலைவிய தவிர வேற எந்த தைரிய லக்குமி வரப்போறாங்க னு கொஞ்சம் யோசிச்சு புட்டேன்...


//அழகா கவிதை எழுதியுள்ளீர்கள்..///

ஒரு கவிதை
கவிதை சொல்லுகிறதே...
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கவிதை!!
(பார்த்திபன் வாழ்க..)

நன்றி கவிதாயினி....

அப்புறம் ஒரு பெர்சனல் வேண்டுகோள்.
கடல்கணேசன் அப்படிங்கிற பெயரிலும் வந்துட்டு தாரிணியாய் யும் வந்துடுங்க
நமக்கும் இரு இலக்கத்தில ஆசைதாங்க

மணி ப்ரகாஷ் said...

@அனானி.

//நன்றி நன்றி. கவிதைக்கு வாழ்த்துக்கள்//

வாழ்த்துகளுக்கு நன்றி..

என் வீட்டுக்கு வருவதே மிகச் சிலர்தான்.. அதிலும் இப்படி பெயர் சொல்லாமல் போனால் எப்படி?
மீண்டும் வந்து பெயர் சொல்லிவிட்டு போங்கள். அப்போதுதான் நான் திரும்ப அழைக்க முடியும்.....

மணி ப்ரகாஷ் said...

@tharini,

//இந்த அருண்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்//

கொஞ்சம் விளக்கமாக கூறினீர்கள் என்றால் நன்றாய் இருக்கும்..

@arun
//edo, maniprakash enakku nalla samachi podraaru, adu vungalukku pidikkaliya?//

ஏதோவா?? நான் என்னமோ உண்மை யாவே feel panrenu nenaichen pa...


//inda line-a chumma free vitrunga :) //

nee than manivilasku vantha mutha aalu.. so Frrrrrreeeeeeeeeeee ya vituten..
irunthalum Mr.KG solranua ethoo irukumla.. ena avarthan pala karaiyaik kandavar.

Sandai-Kozhi said...

kavithai azhagaga varugiradhu.keep continue.
When I was young yenna rasiyo theriyadhu..
kudai eduthu pona andru mazhai varadhu..
kudai vaithu pona andru mazhai
kottum...
adhu ninaivukku vandhadhu ungal kavithai padikkum bodhu.
oru azhgana veedu padam potturukeengalae.Nijamalum unga veeda.yen kanavu veedu pola ulladhu.romba romba azhagu.--SKM

மணி ப்ரகாஷ் said...

@தீக்குஞ்சு

//கவிதை சுமார் ரகம்தான்...//

இக்கவிதை நான் என்ன அனுபவித்தேனோ ,என்னெ நினைத்தேனோ அதன் வெளிப்பாடுதான்..

முயற்சி செய்கிறேன் இன்னும் நன்றாக வருவதற்கு..

//பிழை இல்லாமல் இருப்பது மகிழ்சி...//

நன்றி... என்னதான் கவனமாய் இருந்தாலும் சில நேரங்களில் ..

தமிழ் படிக்க வேண்டும்..

Shuba said...

englishla elutharuthukku romba sorry!!!

Romba nalla kavithai...ethavathu oru para va pik [panni ithu romba nalla irunthathunnu sollanumnu nenachen ...but full poemume romba nalla irukku ennaala specificaa oru paaraava pik panna mudilai...excellent!!!!!

மணி ப்ரகாஷ் said...

@SKM,
//kavithai azhagaga varugiradhu.
keep continue//

நன்றி. கண்டிப்பாய்..

உங்களின் இளமை கால வாழ்க்கை ரீவைண்ட் ஆனதுக்கு எனது கவிதை காரணமாய் இருந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்...


//Nijamalum unga veeda.yen kanavu veedu pola ulladhu//

எனக்கும் கனவு வீடுதான்..ஆனால் இது உண்மையிலே காரைக்குடி பக்கம் உள்ளது.. இங்கு உபயம் by google..

அப்புறம், நீங்கதான் நான் பத்திரிக்கை வைக்காம என்னோட மணி-விலாஸிற்கு வந்த முதல் ஆள்..

ஸொ, மிகவும் நன்றி..அடிக்கடி வாங்க..

மணி ப்ரகாஷ் said...

@Subha
Thanks Subha.. enna munnaidye vanthu solliirukkalam..

கடல்கணேசன் said...

வந்துட்டேன்..
ஸாரி மணி(யா, ப்ரகாஷா?.. எப்படி அன்புடன் அழைப்பது?).. அங்கே ரெண்டு பக்கத்துக்கும் பதில் எழுத நேரமில்லை.. அதனால் தான் திரும்ப வரவில்லை..
நான் உங்கள் பக்கம் வந்து புதிய பதிவு இருக்கிறதா என்று மட்டும் பார்த்து விட்டு அப்படியே போய் விட்டதால் இங்கே கமெண்ட் பார்க்காமல் விட்டு விட்டேன்.

/edo, maniprakash enakku nalla samachi podraaru, adu vungalukku pidikkaliya?/

இதைத் தான் சொன்னேன்.. உங்களை அவர் சமைக்க வச்சிட்டு, அந்தப் பக்கம் 'தலை' கூட ரகசியமா கள்ளத்தோணியில பிரேஸில் போகலாமான்னு திட்டம் போடறார்.

/நமக்கும் இரு இலக்கத்தில ஆசைதாங்க /

ஆசை கண்டிப்பா இருக்கணும்.. அத்தனைக்கும் ஆசைப்படுன்னு 'சத்குரு ஜக்கி வசுதேவ்' விகடனில் எழுதினார்.. நீங்களும் ஆசைப்படுங்கள்- மூன்று இலக்கம் வரட்டும்.

மணி ப்ரகாஷ் said...

அன்புடன் ப்ரகாஷ் என்றே அழைங்கள். நீங்களாவது அப்படி அழையுங்கள்...
//அங்கே ரெண்டு பக்கத்துக்கும் பதில் எழுத நேரமில்லை.. அதனால் தான் திரும்ப வரவில்லை.. //

நீங்கள் மெதுவாகவே ஆனால் கண்டிப்பாக வாருங்கள்...

//'தலை' கூட ரகசியமா கள்ளத்தோணியில பிரேஸில் போகலாமான்னு திட்டம் போடறார்//

தல நல்லவரு,வல்லவருன்னு சொல்லி இருக்கேன் , சொ அவரு கைவிட மாட்டருனு நம்பரேன்..

அவருக்கு மன்ற பெயர் கூட நான் முடிவு பன்னிட்டேன்.. தல என்ன சொல்ரீங்க?

//நீங்களும் ஆசைப்படுங்கள்- மூன்று இலக்கம் வரட்டும்//
ஆசை யுறுகிறேன்.. உங்களின் வாக்கு பலிக்கட்டும்...

மணி ப்ரகாஷ் said...
This comment has been removed by a blog administrator.
மணி ப்ரகாஷ் said...

எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்...

//அங்கே ரெண்டு பக்கத்துக்கும் பதில் எழுத நேரமில்லை.. அதனால் தான் திரும்ப வரவில்லை.. //

நீங்கள் மெதுவாகவே, ஆனால் கண்டிப்பாக வாருங்கள்...

//'தலை' கூட ரகசியமா கள்ளத்தோணியில பிரேஸில் போகலாமான்னு திட்டம் போடறார்//

தல நல்லவரு,வல்லவருன்னு சொல்லி இருக்கேன் , சொ அவரு அப்படி செய்ய மாட்டருனு நினைக்கிறேன்..

அவருக்கு மன்ற பெயர் கூட நான் முடிவு பன்னிட்டேன்.. தல என்ன சொல்றீங்க?

//நீங்களும் ஆசைப்படுங்கள்- மூன்று இலக்கம் வரட்டும்//
ஆசை யுறுகிறேன்.. உங்களின் வாக்கு பலிக்கட்டும்...

Anonymous said...

hi prakash,

unga kavithai chooo sweeet....
Mazhai enakkum romba pidikkum...

Gayu

Anonymous said...

oru doubt.."Mazhai sneham"-naduvil thunai yezhuthu mihuma...

Gayu

மணி ப்ரகாஷ் said...

Hi Gayu,
வருகைக்கு நன்றி.. வாரம் வாரம் வந்துட்டு போங்க..

//"Mazhai sneham"-naduvil thunai yezhuthu mihuma//

எனக்கும் சந்தேகம் தான்.. ஆனால் இது வரை யாரும் சுட்டி காட்ட வில்லை.. தவறாய் இருப்பின் சொல்லவும்..

சிறில் அலெக்ஸ் said...

கவிதை ரெம்ப நல்லா இருக்குதுங்க.
வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

@ சிறில்

//கவிதை ரெம்ப நல்லா இருக்குதுங்க.
வாழ்த்துக்கள்//
வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி...

மீண்டும் மீண்டும் வருக

தமிழ்ப்பிரியன் said...

கவிதை அருமை!! மனமார்ந்த வாழ்த்துக்கள்..

எனக்கு பிடித்த வரிகள்...
//நனைக்கத்தான் மழை எனவே நனைவீர்...//

//ஆனால் நனைதல் மட்டும் தொடரும்
என் கல்லறையிலும்...
ஆம் மழை நனைக்கத்தான்!!!//

Anonymous said...

nee roomla kulikave maata. nee mazhaila nanaicha kavithai elzhutharatha paakum pothu santhosama irukku kaipulla
-raju

மணி ப்ரகாஷ் said...

@தமிழ் பிரியன்

//கவிதை அருமை!! மனமார்ந்த வாழ்த்துக்கள்//
வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி...
மீண்டும் வாருங்கள்...

மணி ப்ரகாஷ் said...

//nee roomla kulikave maata. nee mazhaila nanaicha kavithai elzhutharatha paakum pothu santhosama irukku//

dai,, ellam neramda.. rednu velai kulichu suthamai iruntha ennai unga roomla vanthu kulicha paththum enna ni kulika kooda seiviya nu athisiyama partha janthu nee..

ok.ok.. thnks da.. comment pottathukku..ippadiye podu..en peru,pugal ellam paravum...

Nalla nanban da...