Thursday, October 26, 2006

"அ"னா


"அ" னா... இது என்ன பதிவு, என்ன தலைப்பு, என்று வினவுகிறவர்களுக்கு காரணம் இதுவே. நான் புதியதாய் வலைப்பக்கம் ஆரம்பித்தபின் எழுதும் முதற் பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று எண்ணியபோது வான் புகழ் கொண்ட வள்ளுவன் நினைவுக்கு வந்தான். (அவரா ஏன்டா வம்புக்கு இழுக்குற அப்படினு உங்களுக்கு தோனித்துனா அதுதாங்க உங்க உண்மையான தமிழ் பாசம் அப்படின்கிறது)1330 குறள் தந்து பொது மறை சொன்ன வள்ளுவன் எழுதிய முதல் எழுத்தும் "அ" தான். நான் முதன் முதலாய் எழுதுகோல் பிடித்து எழுதிய எழுத்தும் "அ".ஆதாலாலே, எனது முதல் பதிவுக்கும் இதுவே தலைப்பு. ( ஆகா "என்னமா திங்க் பன்றாண்டா இவன்" அப்படிங்கற உங்க நினைப்ப அப்படியெ பின்னுட்டத்துல போட்டீர்கள் என்றால் எதோ நானும் ஒரு ட்புள் ட்ஜிட்ல பின்னூட்டம் வாங்கி அடுத்த பதிவுக்கு வேலைய ஆரம்பிப்பேன்...)

இந்த "அ" பக்கம்,எனக்கு வலை உலகத்தை அறிமுகப் படுத்தி,எனை எழுதச் செய்த,மீண்டும் எனை எழுத தூண்டிய எனது நண்பர்களுக்கு நன்றி கூறிடவும், அதே வேளையில் நான் எதற்காக, என்ன வெல்லாம் மற்றும் எப்போழுதெல்லாம் எழுதப் போகிறேன் என்று சொல்லிவிடவும் கிடைத்த முதல் பக்கம்.
சரவணா சக்கரவேல், வலைப் பக்கத்தை அறிமுகப் படுத்தி எனை எழுதச் செய்த என் கல்லூரித் தோழன். தோழர் அப்பு (எ) ரபீக் முஹம்மது, தோழி சூர்யா(எ) வனிதா கண்ணன் ஆகிய எனது மற்ற இரு நண்பர்களையும்,எனையையும் சேர்த்து சரவணாவால் ஆரம்பிக்கப் பட்ட கூளம் வலைப் பக்கமே எனது முதல் எழுத்தை வெளிக் காட்டியது..எனதுமுதல் வணக்கங்களும்,நன்றிகளும் கூளம் வலை நண்பர்களுக்கு .ஆனால் பல்வேறு காரணங்களால் என்னால் கூளம் வலை பக்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகவே என் ஒரு பதிவுடன் நின்றுவிட்டது எனது வலைச் சகவாசம்... அந்த நிமிடமே முடிவு செய்யப் பட்டதுதான் எனக்கு விரும்பியதை கால அவகாசம் இன்றி எழுத, நானெ ஒரு தனியாய் ஒரு வலைப் பக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று. ஆனால், எனது போற்றுதற்குரிய " நாளை செய்வோம்" என்ற நற்பண்பு தலை விரித்து தாண்டவம் ஆடி இன்றுடன் ஓராண்டு வரை தள்ளி விட்டது.
இப்போது எப்படி எழுதுகிறென் என்று நினைக்கத்தானெ செய்கீறீர்கள்.அதற்கும் காரணம் உண்டு.திரைகடல் ஓடி திரவியம் தேட அமெரிக்கா வந்த பிறகு,எல்லா தமிழனையும் போல் எனக்கும் தமிழின் பெருமை உரைக்க ஆரம்பித்தது.தமிழோ,அம்மாவின் சமையலொ அது கிடைக்காத போதுதான் அதன் அருமை புரியும்.(என்னடா அம்மா சமையல்னு சொல்றானே னு நீங்க முனகுவது கேட்கத்தான் செய்கிறது.. என்ன பண்ற்து இன்னும் Bachelor life.. அப்படியே கல்யாணம் ஆனாலும் "அம்மா சமையல் அம்மா சமையல்தான்"னு கல்யாணம் செய்த நம் முன்னோர்கள் சொல்றதும் கேட்கத் தான் செய்கிறது).உடனே திரும்பவும் ப்ளாக் தேடி, படித்து, தமிழ் பாராட்டிய போது புதிதாய் வலை நட்பு கிடைத்திட, அவர்களும் நீங்க ஏன் எழுத கூடாது என்று சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் கேட்க , இதோ ஆரம்பிச்சாச்சு நம்ப எழுத்துலக பயணத்தை...இவனப்போய் எழுத சொல்லிய அந்த உயர்ந்த உள்ளங்கள்,புண்ணிய மகாத்மாக்கள் யாருனு கேக்குறீங்களா... வெற யாரும் இல்லங்க , வலைத் தோழி "மழைத்துளி"சுபாவும்,"என் மனம் அலைபாயுதே" திரு.கடல் கணெசன் அவர்களும்தான்...
நன்றிங்கோ....

என்னாடா இவன் சரி கடுப்பேத்தறானெனு நினைச்சீங்கனா...ஆம் நீங்கள் என்ன நானெ அப்படித்தான் நினைக்கிறென்.. ஆகையால்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'" என்று கூறிக்கொண்டு
என்ன வெல்லாம் , எப்போழுதெல்லாம் மற்றும் எதற்காக எழுதப் போகிறேன் என்பதை நேரிடையாய் (வலைவீட்டில்) களத்தில் பார்ப்போம் என எனது நீண்ட பதிவை இத்துடன் முடித்து கொள்கிறேன்...

7 comments:

Arunkumar said...

First...

mathabadi, comment inda blog-ku already potachu :)

மணி ப்ரகாஷ் said...

@ Arun
Thanks pa.

கடல்கணேசன் said...

ஆமா, நானும் நீளமா கமெண்ட் போட்டுட்டேன்.. புது வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க.. தைரியமா பயம் இல்லாம இருங்க. போற இடத்தில எல்லாம் எதுக்கும் ஒரு வார்த்தை சொல்லி பத்திரிக்கையும் வச்சிட்டு வந்திருங்க.

அப்புறம் பாருங்க, வீடு களை கட்டறதை..

மணி ப்ரகாஷ் said...

@ KG

உங்களின் நீள கமெண்ட்டும்,வருகையுமே எனது "காக்க காக்க" நன்றிKG...

Arvind Valliappan said...

A good start. All the Best

TheeKunju said...

மிக்க மகிழ்சி நண்பா...உனது புதிய வலை தளம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
நீ தமிழை கையாளும் விதத்தை முன்னமே நான் அறியப்பெற்றிருந்தாலும் கூட வலைப்பூவில் உன் தனிக்குடித்தனத்தை காண்கையில் பெரும் உவகை அடைந்தேன்...

அதே சமயம் மனதில் பட்ட சிலவற்றை சுட்டிக்காட்ட விழைகிறேன்.
1. சில பிழைகள் ஆங்காங்கே தென் படுகின்றன...கருத்து பிழைகள் அல்ல, எழுத்து பிழைகள். ஆகவே பதிப்பதற்கு முன் ஒரு முறை நன்றாக பிழை திருத்தங்கள் செய்யவும்.
2. எழுதுருவை சற்று பெரிது படுத்தினால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்.
3. உன் எண்ண ஓட்டங்களை முடிந்தவரை எழுத்திலேயே தெரிவிக்க முயல்க. அதாவது அடைப்பு குறிக்குள் தனித்தனியாக எடுத்து எழுதுவதை குறைத்துக்கொள்ளவும்.
4. தகுந்த இடைவெளியில் பதிவுகள் வந்துகொண்டே இருக்குமாறு பார்த்துக்கொள்.
இப்போதைக்கு இவ்வளவே...
மீண்டும் சந்திப்போம்...

இப்படிக்கு,
சரவணா சக்கரவேல்.

மணி ப்ரகாஷ் said...

@ Arvind

Thanks Arvind. keep on visiting

@சரவணா,
Thanks For Your presence and comments