Wednesday, November 01, 2006

மனிதப் பிண்டங்களாய்..
செஞ்சோலை
மனம் பரப்பும் மொட்டுகளின்
உயிர்ச் சோலை
நாளைய பொழுது நமதாய் வேண்டும் என்ற
நேற்றைய போரின் பிரசவங்கள்
இன்றைய நம்பிக்கைகளாய்...
உடற் கழுவி, உளம் பாரட்டி
ஆடை அணிவித்து,அணிகலன் பூட்டி ,
அள்ளி முகர்ந்திட அன்னை இல்லை...
தோள் சுமந்து, உலகம் உணர்த்தி
வேண்டியன கொடுத்து,வீரம் காட்டி,
பண்பு பாராட்டிட தந்தை இல்லை...
பகிர்ந்தோ ,பாசம் உணரவோ
சண்டையிட்டு சமரசமாய்ப் போகவோ
உடன் பிறப்பும் இல்லை...
ஆனாலும் பிறப்பு அறியப்படுகிறது
அகவை மூண்றிற்கு ஆறும்,
ஆறிற்கு பனிரெண்டும்,
தாயாய்,தந்தையாய்,சகோதரியாய்.
கூடித்திரியும் நட்பாய்...
மனதில் போர் வலி கொண்டு
முகம் புன்னகை ஏந்தி
புலருகின்ற புதுப் பொழுதிற்காய்
கல்யாணி பாடுகையில்
ஒரு மூடக் கூட்டம்
முகாரி பாடிவிட்டு முக்காடிடுகிறது
நான் செய்யவில்லை என்று
புத்தரின் சிரிப்பைக் காட்டி
பார் ஏமாற்றும் ஊளை நரி
குழந்தையின் குருதி குடிக்கையில்...
நாமோ இங்கு
உண்டு, களித்து,
உறங்கி, கொழுத்து,
செத்தொழியும்
மனிதப் பிண்டங்களாய்...பி.கு :
ஆகஸ்ட் 14'2006 ம் நாள் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் செஞ்சோலையில் வாழ்க்கை துவங்கப் படாமலே முற்று பெற்றது...

அக்டோபர் 30'2006. ஜெனிவாவில் நடை பெற்ற புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வி.யாழில் மீண்டும் போர்...

மனம் என்னவோ செய்தது
எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?

நாம் என்ன செய்தோம் இதற்காய்...???
குண்டு வைத்து தகர்த்திட முயற்சி செய்தவனக்கு போரட்டமும்
இலவச கலர் டிவி ,நாற்காலி சண்டையிலும்,
காலம் சரியாத்தான் இருக்கு..

21 comments:

Sandai-Kozhi said...

//மனம் என்னவோ செய்தது
எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?//
if at all we know answers for so many questions....yenna vazhlkai?
Beautiful.---SKM

Arunkumar said...

மிக மிக அருமையான கவிதை.

//
நாளைய பொழுது நமதாய் வேண்டும் என்ற
நேற்றைய போரின் பிரசவங்கள்
இன்றைய நம்பிக்கைகளாய்...
//

பாராட்ட சொற்கள் இல்லை !!!

//மனம் என்னவோ செய்தது
எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?//

My all time favourite "Kannathil Muthamittal" climax !!!

வேதா said...

என் பதிவுகளுக்கு வருகை தந்து தங்கள் கருத்துக்களை கூறியதற்கு நன்றி, இங்கே கொஞ்சம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்:)
/நாமோ இங்கு
உண்டு, களித்து,
உறங்கி, கொழுத்து,
செத்தொழியும்
மனிதப் பிண்டங்களாய்.../
உண்மையை உரக்க சொல்லும் வார்த்தைகள்.

/நாம் என்ன செய்தோம் இதற்காய்...???/
என்ன செய்யப் போகிறோம் அமைதி வேண்டுவதை தவிர?

Syam said...

மணி ரொம்ப டச்சிங்கா போச்சு...
//புத்தரின் சிரிப்பைக் காட்டி
பார் ஏமாற்றும் ஊளை நரி
குழந்தையின் குருதி குடிக்கையில்...//

இது கொடுமையிலும் கொடுமை...

Syam said...

//நாம் என்ன செய்தோம் இதற்காய்...???
குண்டு வைத்து தகர்த்திட முயற்சி செய்தவனக்கு போரட்டமும்
இலவச கலர் டிவி ,நாற்காலி சண்டையிலும்,
காலம் சரியாத்தான் இருக்கு..//

நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி நல்ல கேள்வி....

கடல்கணேசன் said...

ஓ.. மணி..
நான் வந்தது மிகவும் தாமதமோ..
இந்த திறமையை வைத்துக் கொண்டு இத்தனை நாளாய் எங்கே இருந்தீர்கள்..

உங்களின் எல்லை தாண்டிய மனிதாபிமானம் கண்டு நெகிழ்கிறேன்..

எந்த வரியை விட, எதைச் சொல்ல..

/எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?/

இந்த நாள் தான் வாராதா.. அவர்கள் வாழ்வில் வசந்தம் மலராதா.. உங்களைப் போலவே ஏக்கத்தில் நானும்..

கடல்கணேசன் said...

மணி, நீங்கள் தமிழில் எழுதுவதால் 'தமிழ்மணத்தில்' பதிவு செய்யுங்கள்.. procedure தெரியும் அல்லவா.. இல்லாவிட்டால் எனக்கு இ-மெயில் அனுப்புங்கள்..(எனக்கு கமெண்ட் எழுதும் போது உங்கள் email தரவும்)

மணி ப்ரகாஷ் said...

@ SKM,

//yenna vazhlkai?//

Yes.சில பொழுதுகள் இப்படித்தான் நிறைய விடை தெரியா கேள்விகளுடன்..

உங்களது பகிர்தலுக்கு நன்றி

மணி ப்ரகாஷ் said...

@Arun

Yes. Arun. Hope to end all this unwanted happenings

"Vellai pookal ulagam engum malarave,
vidum boomi amatikaka vidayave..."

மணி ப்ரகாஷ் said...

@ வேதா,

உங்களது வருகைக்கு நன்றி, உங்களின் கவிதைகளில் கரைந்தவனில் நானும் ஒருவன்..

//என்ன செய்யப் போகிறோம் அமைதி வேண்டுவதை தவிர//

வேண்டுவோம்.
மிக சீக்கிரமாய் நடக்கட்டும் இந்த நிகழ்வு,,,

ஆனாலும் இதையும் அரசியலாக்கும் நபர்கள் என்று திருந்துவார்களோ..

மணி ப்ரகாஷ் said...

@Syam

//நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி நல்ல கேள்வி//

ஆமாம் , தல.. என்ன பன்றது,நம்ம ஊரு அரசியல் வாதிங்க கிட்ட இப்ப இதுவும் மாட்டிகிச்சு... :(

மணி ப்ரகாஷ் said...

@KG,
//இந்த நாள் தான் வாராதா.. அவர்கள் வாழ்வில் வசந்தம் மலராதா.. உங்களைப் போலவே ஏக்கத்தில் நானும்//

இதனை பற்றி நீங்கள் ஏன் ஒரு பதிவு இட கூடாது?

//'தமிழ்மணத்தில்' பதிவு செய்யுங்கள்//

நன்றி.. நீங்களே பதிவு செய்து,நீங்களே இ-மெயில் உருவாக்கி ..

எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை...

மீண்டும் நன்றி...

TheeKunju said...

அருமை...மிக அருமை மணி...

இதை..இதைத்தான், இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னிடமிருந்து...

வாழ்த்துக்கள்.

TheeKunju said...

அருமை...மிக அருமை மணி...

இதை..இதைத்தான், இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னிடமிருந்து...

வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

@ சர்மா/தீக்குஞ்சு

//அருமை...மிக அருமை மணி//

நன்றி...ஆம் நண்பா

சில நிகழ்வுகள் நம்மை காயப்படுத்தும் போது ...

Valavan said...

Keep this good work going!!!

மணி ப்ரகாஷ் said...

@Valavan

நன்றி வளவன். வருகைக்கும் உனது வாழ்த்துக்கும் நன்றி

எல்லா நேரங்களிலும் உனது வருகையினை எதிர்ப்பார்கிறேன்....

Anonymous said...

ANNPULLA AAENNNA

EMAAKUUU ILLAPATHUKKKUU OOOENRUMM ILLAI EEMAATHUU SAVA PEEITTEKKALAI THAAVERRA

UNNKKALLL PAASAATHUKKUU NAAANREE

EELAVAN

மணி ப்ரகாஷ் said...

//ANNPULLA AAENNNA

EMAAKUUU ILLAPATHUKKKUU OOOENRUMM ILLAI EEMAATHUU SAVA PEEITTEKKALAI THAAVERRA

UNNKKALLL PAASAATHUKKUU NAAANREE

EELAVAN //


இழப்பதற்கு ஒன்றும் இல்லை
சவப்பெட்டிகளை தவிர..

சகோதரா, என்ன சொல்வது என்று தெரியவில்லை

No word to express.

என் எழுத்துக்களே என்னை கூனி குறுக வைக்கிறது..

காண்டீபன் said...

புத்தரின் சிரிப்பைக் காட்டி
பார் ஏமாற்றும் ஊளை நரி
குழந்தையின் குருதி குடிக்கையில்...

மனம் என்னவோ செய்தது
எப்போது நல்ல காற்று ஈழத்தில் வீசும்
எப்போது மகரந்தம் பரவும் ?

உங்களின் எல்லை தாண்டிய மனிதாபிமானம் கண்டு நெகிழ்கிறேன்

நன்றி உங்களின் கவிதைக்கு

மணி ப்ரகாஷ் said...

@காண்டீபன்

உங்களின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி..

என்னதான் எல்லை தாண்டி இருந்தாலும்
மனம் என்னோவோ ஒன்றுதான்.

மீண்டும் வாருங்கள்