Sunday, November 12, 2006

தேடித் தொலைந்து...

சிறுத்து பெருத்து
வளைந்து நிமிர்ந்து
வழிந்து ஓடுகிறது -வாழ்க்கை
எதனையோ தேடி...

மக்கியோ சாம்பலாகியோ போவேன்
என்று தெரிந்தும்
ஆரம்பிக்கத்தான் செய்கிறது
என் தேடித் திரியும் வாழ்க்கை
பிறந்தமேனிப் பொழுதுகளிலிருந்து...

புன்னகை இழந்து,
உறக்கமற்று,
பிரபஞ்சத்தின் விலாசம் மறந்து,
தன்னந்தனியாய்
எதையோ தேடியதில்
கரைந்தே காணாமற் போய்விட்டது
என் ஒவ்வொரு மணித்துளியும்...

தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்...

இன்னும் பல தேடுதல்களை
முழுங்கிக் கொண்டு
காத்துக் கொண்டு இருக்கிறது
என் நரையெய்திய கிழப் பருவம்.


தேடித் தொலைகிறேன் நிதமும்...

17 comments:

கடல்கணேசன் said...

அழகு கவிதை மணி..

/தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்.../

வாழ்க்கையின் உண்மை சுடுகிறது.

வாழ்த்துக்கள் மணி

ஜீவா (Jeeva Venkataraman) said...

//இன்னும் பல தேடுதல்களை
முழுங்கிக் கொண்டு
காத்துக் கொண்டு இருக்கிறது
//
தேடுதல்களை படிக்க காத்திருக்கிறோம்.
அரசியல் சாயங்களால் வர்ணமடிக்கப்படாத எழுத்துக்கள் தேவை!

Sandai-Kozhi said...

//தன்னந்தனியாய்
எதையோ தேடியதில்
கரைந்தே காணாமற் போய்விட்டது
என் ஒவ்வொரு மணித்துளியும்...

தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்...//

உண்மை.வாழ்வில் எதைத் தேடுகிறோம் என்பதே கடைசி வரை தெரியாமலே தேடுகிறோம். நல்ல முயற்சி.அழகாக எழுதியுள்ளீர்கள்.புது பதிவு போட்டாயிற்று. :)--SKM

Syam said...

மணி கவிதை மிக அருமை...தேடுதல்களே வாழ்க்கை ஆகி போனதை அருமையா சொல்லி இருக்கீங்க...

Arunkumar said...

மணி,
கவிதை சூப்பர்.

"தேடும் முன்னே வந்த பொருள் என்றும் நிலைப்பதில்லை.
தேடித்தேடி கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை"

-அருண்

மணி ப்ரகாஷ் said...

@KG

//வாழ்க்கையின் உண்மை சுடுகிறது//

ஆம் KG. இதில் நானும் இருக்கிறேன்..

மணி ப்ரகாஷ் said...

@Jeeva

//தேடுதல்களை படிக்க காத்திருக்கிறோம்//

நன்றி ஜீவா, கட்டாயம் தேடித் தருகிறேன்

மணி ப்ரகாஷ் said...

@SKM,

//வாழ்வில் எதைத் தேடுகிறோம் என்பதே கடைசி வரை தெரியாமலே தேடுகிறோம்//

ஆம்.. அதனின் விளைவுதான் இது..இந்த வார பதிவுக்கு எழுத நினைத்த பதிவு ஒன்று ஆனால் அதை எழுத நினைத்து உட்கார்ந்தால் இக் கவிதை வந்தது,
எதனையோ தேடி எதோ கிடைத்து...


//புது பதிவு போட்டாயிற்று.//

இதோ வந்துட்டேன்

மணி ப்ரகாஷ் said...

@ஷ்யாம்

தல நன்றி.. உங்க பிளாக்லயும் தேடித் தேடி படித்து சத்தம் போட்டு சிரித்து
இந்த மானேஜர்கிட்ட மாட்டிகிட்டேன்...

மு.கார்த்திகேயன் said...

அழகான கவிதை மணி..

மணி, எனது பதிவுக்கு வந்தமைக்கு நன்றி..

நான் பத்தாம் நம்பர் பஸ் போகும் அ.வெள்ளோடு.. நீங்க திண்டுக்கலில் எங்கே, மணி..

வேதா said...

/தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்../
ரொம்ப உண்மையான வரிகள்.

/தேடித் தொலைகிறேன் நிதமும்... /

தேடல் ஒரு முடிவிலி என்று
அறிந்த பிறகும்,
தேடித் தேடித் தொலைவதில் தான்
எத்தனை சுகம்:)

Deekshanya said...

nice!

மணி ப்ரகாஷ் said...

@அருண்

ஆமாம் அருண்.

//தேடித்தேடி கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை//

ஆனால் அதற்காய் இழக்கும் நேரங்கள்தான் கொடியது..

நன்றி அருண்.. உனது ஆதரவு என்றும் தேவை...

மணி ப்ரகாஷ் said...

@வேதா

//தேடல் ஒரு முடிவிலி என்று
அறிந்த பிறகும்,
தேடித் தேடித் தொலைவதில் தான்
எத்தனை சுகம்//

ஆம் வேதா,சுகமான சுமைகள்....

பார்திபன் கோவிச்சுக்காதிங்கா..

கவிதையே கவிதை சொல்லிச்சா அதான் நான் உங்கள கூப்பிட்டேன்ன்ன்ன்ன்

Shuba said...

தேடிக்கிடைத்ததில் திருப்தியுறாமல்,
தட்டி பறித்து எட்டி உதைத்து
பொறாமை யுறுகிறது நெஞ்சம்
பக்கத்து தேடுதலில்.../

this is the highlight

மணி ப்ரகாஷ் said...

@Subha
//this is the highlight //

ஆம். உண்மையான பொய்யாக வேண்டிய விசயம்..

எப்ப அடுத்த பதிவு..

abi said...

"எதையோ தேடியதில்
கரைந்தே காணாமற் போய்விட்டது
என் ஒவ்வொரு மணித்துளியும்..."

அழகான வரிகள்.

வாழ்வு என்பதே தேடல் தானே........

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் சுவை/சுமை இருக்கும்.

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு......