Thursday, November 16, 2006

இலவசமாய் இன்னமும்

தேன்கூடு-போட்டி க்காக:

கண் உள்வாங்கி
கழுத்து நீண்டு
முடி உதிர்ந்து
எடை வற்றி
பாயின் ஓரத்தில்
ஒட்டியோ, ஒட்டாமலோ
உருவமற்று

உறுதி படுத்தியது
மூச்சுக் காற்று
மோகமாய் கரைந்து
அவசரமாய் பெற்ற
இலவச மரணத்தை

காமப் பசியின்
செரிக்காத கழிவாய்
இழுத்துக் கொண்டு

புவிதனில்
இலவசமாய்
இன்னமும்...

13 comments:

மு.கார்த்திகேயன் said...

மணி..கலாசலான உயிரோட்டமான கவிதை..
தேன்கூடு போட்டியில வெற்றிபெற வாழ்த்துக்கள் மணி..

கடல்கணேசன் said...

வாங்கப்போவது மரணம் தரும் நோய் எனத் தெரிந்தும் இன்னும் மோகம் தேடி அலைந்து கொண்டு தானே இருக்கிறார்கள்..

நல்ல வார்த்தைகள் மணி.. இலவசமாய் மரணம் வாங்கி வரும் இவர்கள் அடுத்தவர்களுக்கும் அல்லவா மரணத்தை இலவசமாக கொடுக்கிறார்கள்..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மணி.

Syam said...

நிதர்சனமான உண்மைய அருமையா கவிதயா வடிச்சு இருக்கீங்க...வெற்றி பெற வாழ்த்துக்கள்....

Arunkumar said...

மணி
எங்கேயோ போயிட்டீங்க !!!
அழுத்தமான வார்த்தைகள் !!!

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வேதா said...

/காமப் பசியின்
செரிக்காத கழிவாய்
இழுத்துக் கொண்டு

புவிதனில்
இலவசமாய்
இன்னமும்.../

மிக அருமையாக வடித்திருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரகாஷ்:)

Sandai-Kozhi said...

அருமையாக அமைந்துள்ளது கவிதை. வெற்றி பெற மனதார வாழ்த்துக்கள்.
--SKM

மணி ப்ரகாஷ் said...

@ கார்த்தி:

நன்றி கார்த்தி...

@ KG:

நன்றி KG..


@ஸ்யாம்:
நன்றி

@ அருண்:

நன்றி

@ வேதா:
நன்றி

@SKM:
நன்றி

like.no.other said...

Read.

Even thru the Cluttered Fonts of mine [grrrrrr @#$%* Damn my win2K PC] Ur letters shine

Where the hell hav u had it locked all these years?

Man - You Rock !!

Divya said...

ஆழமான, அர்த்தமுள்ள கவிதை.........வெற்றி பெற வாழ்த்துக்கள்!

tamilchezhian.m@gmail.com said...

மணி கவிதை எல்லாம் நல்ல இருக்கு.....நீங்க இன்னும் நல்ல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்......

மணி ப்ரகாஷ் said...

@திவ்யா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

திரும்பவும் உங்களது வருகையை எதிர் பார்க்கிறேன்

@ தமிழ்:

நன்றி தமிழ்... வருகைக்கும் நன்றி..

Anonymous said...

அசத்திட்டீங்க மணி!

என்னோட கதைல வெறும் சபலப் படுவத மட்டுமே சொல்லியிருந்தேன். நீங்க எய்ட்ஸோட சுயரூபத்தையே உங்க கவிதைல சொல்லியிருக்கீங்க.

நான் இங்க வந்து 1-2 வாரம்தான் ஆகுது. அதான் உங்கக் கவிதைய அப்ப பாக்க முடியல. பாத்திருந்தேனா கண்டிப்பா உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்.

மணி ப்ரகாஷ் said...

@ஜீ,

//நான் இங்க வந்து 1-2 வாரம்தான் ஆகுது. அதான் உங்கக் கவிதைய அப்ப பாக்க முடியல. பாத்திருந்தேனா கண்டிப்பா உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்//

நன்றி ஜீ, ஆனால் என்ன ஒரு உண்மை என்றால் என்னாலெ ஓட்டு போட முடியவில்லை.. அப்புறம் நான் நினைத்த அளவிற்கு கவிதை வராத தால் இனி போட்டிகளுக்கு எழுத மாட்டேன் என்று அப்போதெ முடிவு எடுத்துவிட்டேன்....