Sunday, December 31, 2006

முடிவும் தொடக்கமும் 2006-2007


பல வண்ணக் கலவைகளை என் மேல் தெளித்துவிட்டு விடை பெறுகிறது - 2006. எல்லாரையும் போலவே எனக்கும் இந்த ஆண்டு பல மகிழ்ச்சிகளையும் என் கனவுகளையும் நிறைவேற்றித் தந்த ஆண்டு.மிகவும் இனிதாய் 2006 ஆம் ஆண்டு என் நண்பர்கள் கூட்டத்துடன் மைசூரில் ஆரம்பித்தது. இதோ மற்றுமொரு புதிய நண்பர்கள் கூட்டத்துடன் இன்று அமெரிக்கா-கிலிவ்லேண்டில் முற்றுப்பெறுகிறது.

சந்தோசமும் துக்கமும்
கனவுகளும் நினைவுகளும்
வெற்றிகளும் தோல்வியுமாய்
காலம் 2006
பல அரிதாரத்துடன்
சுவடாய் நான் ...


இதொ இன்னுமொரு சில மணித்துளிகளில் திரும்பிப் பெறாத அந்நிமிடங்கள் காணாமற்போய் இன்னும் ஒரு புதிய ஆண்டு 2007 வேறு பல கோணத்தில்.
காத்து இருக்கிறேன் சிறகை விரித்து இன்னமும் பறக்க...

புத்தாண்டில்
நான் நானாய்
நீ நீயாய்
நாம் நாமாய் இருப்போம்..

புலருகின்ற பொழுது புதுப் பொழுதாய்
தினம் தோறும்சந்தோச பூக்களுடன் ...


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..


WISH YOU A HAPPY NEW YEAR 2007 !!!

"Then sing, young hearts that are full of cheer,

With never a thought of sorrow;

The old goes out, but the glad young year

Comes merrily in tomorrow"

--Emily Miller


13 comments:

கீதா சாம்பசிவம் said...

அப்பாடா! கடைசியா ஒரு வழியா உங்க பதிவுக்கு வந்துட்டேன். இதுக்கப்புறம் ஒண்ணும் எழுதலியே?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

தலைவி வந்து என்னோட புது வருசத்த துடங்கி வைச்சு இருக்காங்க..

வாழ்த்துகள்..

நானும் எழுதனும்தான் நினைக்கிறேன்..ஆனா இந்த எழுத்துதான் வரமாட்டேன் என்கிறது..
சீக்கிரமாவெ எழுதிடரேன்...

Sandai-Kozhi said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மணி.2007 இன்னும் பலவித வண்ணங்களுடன் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.--SKM

Arunkumar said...

//
புலருகின்ற பொழுது புதுப் பொழுதாய் தினம் தோறும்சந்தோச பூக்களுடன் ...
//

இதத்தான் வைரமுத்துவும் சொல்லியிருக்காரு...

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே...னு


வைரமுத்து மாதிரி சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்க மணி... புத்தாண்டு இனிதே அமைய வாழ்த்துக்கள் :)

வேதா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரகாஷ்:)

Priya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மணி. கலக்கல் கவிதைகள்!

Syam said...

மணி எப்படி போச்சு புதுவருட கொண்டாட்டங்கள்....இனி உங்க பிளாக்குக்கு ஏறு முகம் தான் போங்க...புது வருசத்த தலைவி வந்து துவக்கி வெச்சு இருக்காங்க :-)

மு.கார்த்திகேயன் said...

ஒரு நிலாக்காலம் முடிந்து அடுத்த நிலாக்காலம் தொடங்குகிறது.. அது தான் புது வருஷம்.. எப்போதும் தேய்வதும் வளர்வதும் நிலாக்காலத்தின் இயல்பு. ஆனால் நிலாவுக்கு இல்லை அந்த பாதிப்பு..

மணி, வளர்ச்சியே கொண்ட நிலாக்காலமாக இந்த புதுவருஷம் இருக்க வாழ்த்துக்கள்..

மணி ப்ரகாஷ் said...

@ SKM
//2007 இன்னும் பலவித வண்ணங்களுடன் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.--SKM //

நன்றி மேடம். தாங்களுக்கு அவ்வாறே அமைய வேண்டுகிறேன்..

மணி ப்ரகாஷ் said...

@ arun

//புத்தாண்டு இனிதே அமைய வாழ்த்துக்கள் //


நன்றி அருண்.

மணி ப்ரகாஷ் said...

@ வேதா

நன்றி வேதா.

@ பிரியா

நன்றி பிரியா

மணி ப்ரகாஷ் said...

@Syam

//மணி எப்படி போச்சு புதுவருட கொண்டாட்டங்கள்....இனி உங்க பிளாக்குக்கு ஏறு முகம் தான் போங்க...புது வருசத்த தலைவி வந்து துவக்கி வெச்சு இருக்காங்க //

புது வருசத்த அருணொட cleveland la கொண்டாடினேன்..


நாட்டாமையோட அருள் வாக்கு பலிக்கட்டும்..

தலைவி துவக்கி வைச்சதால தலைவிய பாராட்டி சின்சினாட்டில ஒரு கட் அவுட் வைக்கலாமனு யோசிச்சுகிட்டு இருக்கேன்..

மணி ப்ரகாஷ் said...

@கார்த்தி
//மணி, வளர்ச்சியே கொண்ட நிலாக்காலமாக இந்த புதுவருஷம் இருக்க வாழ்த்துக்கள்//

நன்றி கார்த்தி.