Wednesday, December 20, 2006

திரு.கஸ்தூரிரங்கனும் ரோம் நகரமும்...ரோம் நகரில் உள்ள புகழ் பெற்ற அறிவியல் கழகத்தின்(Pontifical Acadamy of Science) உறுப்பினராக , இந்திய வானியல் விஞ்ஞானியும் , நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்சுடு சயின்ஸின்(NIAS) இயக்குனரும், இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச்சின்(ISRO) முன்னாள்
சேர்மேனுமான திரு டாக்டர் , கஸ்தூரிரங்கன் அவர்களை போப் 16ஆம் பெனிடிக்ட் நியமித்துள்ளார்.


அறிவியல் கழகம்(Pontifical Acadamy of Science):

ரோம் நகரில் 1603ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 17ஆம் தேதி அறிவியல் கழகம் உருவாக்கப்பட்டு கணிதம்,இயற்பியல்,இயற்கை அறிவியல் ஆகியவற்றில் நடந்து வரும் ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறது.மேற்கண்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை அறிவியல் கழகத்தின் உறுப்பினர்களாக வாடிகன் நிர்வாகம் இன, மத வேறு பாடுஇன்றி, அவர்களது அறிவியல் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு நியமித்து வருகிறது. இக் கழகத்தில் 90 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் 29 பேர் நோபல் பரிசு பெற்ற அறிவியலார்கள்.உறுப்பினர்களாக நியமிக்க படுபவர்கள் இந்த ஆய்வுகழகத்தின் செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வார்கள்.அத்தோடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் மாநாட்டிலும் பங்கு பெறுவார்கள். மேலும் தனது ஆயுட்காலம் வரை உறுப்பினர்களாக நீடிக்கவும் செய்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கஸ்தூரிரங்கன்:

தற்போது இந்த கழகத்தில் பிரபல வானியல் விஞ்ஞானியும்,இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கஸ்தூரிரங்கன் நியமிக்க பட்டுள்ளார்கள்.இந்த கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப் படும் நான்காவது இந்தியர் கஸ்தூரிரங்கன்.இதற்கு முன்பு சர் சி.வி ராமன்,

பேராசியர் எம்.ஜி.கே.மேனன்,பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

கஸ்தூரிரங்கனை பற்றி:
கேரளா-எர்னாகுளத்தில், 1940 ஆம் ஆண்டு பிறந்து 1961-ஆம் ஆண்டு இளங்கலை இயற்பியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்று,1963,முதுகலை இயற்பியலில் பட்டம் பெற்று, வானியலில் ஆராய்ச்சி பட்டத்தினை 1971 ஆம் ஆண்டு பெற்றார்.இந்திய அரசின் பத்ம விபூசன்,பத்ம பூஷன்,பத்ம ஷிரி பட்டங்களை பெற்றுள்ளார்.


என்னடா கஸ்தூரிரங்கன் பத்தி இந்த காட்டு பயன் எழுதுறானெனுதானெ நீங்க நினைக்கிறீங்க.

ஒரு இயற்பியல் மாணவன் என்ற முறையில் நான் சந்தோசம் அடையாம வேற யாரு சந்தோசம் அடைவாங்க? ஆகையால் நான் மிகவும் மகிழ்ந்து எழுதிய பதிவு.


கஸ்தூரிரங்கன் நீடுடி வாழவும் இன்னும் பல சிகரங்களை அடையவும் இறைவனை வேண்டுவோம்.


நன்றி - thatstamil.oneindia.in/news

மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்:
-----------------------------------------------------------

(வேறு சில பதிவுகளுடன் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக என் முண்டாசுகவிஞனை பற்றி அடுத்த பதிவில் )


22 comments:

Anonymous said...

வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்....வேற எப்படி வாழ்த்துவது அவரை.....

Syam said...

இது நமக்கும் நம்ம நாட்டுக்கும் மேலும் ஒரு பெருமை...நல்ல தகவல் மணி :-)

Syam said...

//வேறு சில பதிவுகளுடன் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக என் முண்டாசுகவிஞனை பற்றி அடுத்த பதிவில்//

அதுதான எங்க கவிஞர கானோமேனு பாத்தேன் :-)

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகளுக்கு நன்றி, ஆனா வந்து வாழ்த்தினது யாருனு தெரியலியே..

மு.கார்த்திகேயன் said...

முதல்ல வருகை பதிவு மணி.. மெல்ல படிச்சிட்டு அடுத்த பின்னூட்டம் மணி

Arunkumar said...

சர்.சி.வி.ராமன் லிஸ்டில்
கஸ்தூரிரங்கனும் சேர்ந்தது நமக்கு பெருமையே... இவர்களை எல்லாம் இந்தியா சரியாக அங்கீகரிக்கவில்லை என்ற கருத்து எப்போதும் என்னுள் உண்டு. பயனுள்ள தகவல் மணி

Sandai-Kozhi said...

இது நமக்கும் நம்ம நாட்டுக்கும் மேலும் ஒரு பெருமை.நல்லப் பதிவு. கவிதைகளை மட்டும் எதிர்பார்க்கிறோம் நாங்கள் சொன்னதில்லையே.--SKM

மணி ப்ரகாஷ் said...

@Syam


//இது நமக்கும் நம்ம நாட்டுக்கும் மேலும் ஒரு பெருமை//

ஆமாம் சியாம்,இவர மாதிரி சில பேர் இருக்கறது நமக்கு பெருமைதான்...

மணி ப்ரகாஷ் said...

@Syam
அதுதான எங்க கவிஞர கானோமேனு பாத்தேன் //


இதோ சீக்கிரம்ம்ம்ம்ம் வந்துட்டேன்ன்ன்ன்..

@கார்த்தி

ப்ரசண்ட் போட்டாச்சு/

மு.கார்த்திகேயன் said...

நமது நாட்டுக்கும் உன்னையும் என்னையும் போன்ற இயற்பியல் மாணவர்களுக்கும் ரொம்ப சந்தோசமான சேதி தன் மணி..

அடுத்த முண்டாசு கவி பதிவிற்காக வெயிடிங் மணி

Priya said...

ஆஹா நல்ல அங்கீகாரம்.

இந்த மாதிரி விஷயங்களுக்கு நம்ப media முக்கியத்துவம் குடுக்க மாட்டேங்கறாங்களே.. நீங்க பதிவு போட்டதுக்கு சந்தோஷம்.

//கஸ்தூரிரங்கன் நீடுடி வாழவும் இன்னும் பல சிகரங்களை அடையவும் இறைவனை வேண்டுவோம்.//
நானும் சேர்ந்து வேண்டிக் கொள்கிறேன்.

மணிப்ரகாஷ் மு said...

@அருண்
//இவர்களை எல்லாம் இந்தியா சரியாக அங்கீகரிக்கவில்லை என்ற கருத்து எப்போதும் என்னுள் உண்டு. //

இந்தியா என்ன அருண் தினசரிகளும், தொலைகாட்சிகளுக்கும் கூட..

tooo bad..

மணி ப்ரகாஷ் said...

//நமது நாட்டுக்கும் உன்னையும் என்னையும் போன்ற இயற்பியல் மாணவர்களுக்கும் ரொம்ப சந்தோசமான சேதி தன் மணி//

ஆம் கார்த்தி..

பாரதிய பத்தி கூடிய சீக்கிரம்

மணி ப்ரகாஷ் said...

//நம்ப media முக்கியத்துவம் குடுக்க மாட்டேங்கறாங்களே.. நீங்க பதிவு போட்டதுக்கு சந்தோஷம்//

என்ன பன்றது பிரியா. மீடியாவுக்கு இவர்னால என்ன ஆக போகுது.. அதற்கு சஞ்சய் தத் பத்தி கவர் ஸ்டோரி எழுதினா நாலு காசாவது கிடைக்கும்...

Abi said...

This is a great honour for the wright person.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Sandai-Kozhi said...

வாழ்க்கையில் புத்தொளியும், மகிழ்ச்சியும்,வெற்றிகளும் அமைய புது வருட வாழ்த்துக்கள்.Happy2007 Mani.
--SKM

Syam said...

mani,

Wish You a Wonderful New Year!!!

மணி ப்ரகாஷ் said...

@abi

Yes.Abi.

@SKM
//வாழ்க்கையில் புத்தொளியும், மகிழ்ச்சியும்,வெற்றிகளும் அமைய புது வருட வாழ்த்துக்கள்.Happy2007 mani//

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் அவ்வாறே அமைய வாழ்த்துகிறென்

@Syam

//mani,

Wish You a Wonderful New Year!!! //

thanks syam.Wish you the same ..

மு.கார்த்திகேயன் said...

இந்த வருஷத்திலாவது சந்திப்போம் மணி :-)

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

ஜி said...

இந்தியன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா...

ரொம்ப சந்தோஷமா இருக்குது.. நல்லப் பதிவு.

மணி ப்ரகாஷ் said...

கார்த்தி,ஜீ

நன்றி..