Saturday, December 30, 2006

ஆத்மா -மகாகவி பாரதி


"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - பாரதி


சொல்லிப்போகவில்லை , செய்துகாட்டியவன்

எட்டயபுரத்தில் உதித்து

கவியாய் மூச்சுவிட்டு

தமிழாய் உலகமெலாம் விரிந்த மகாகவி.

என் தமிழுக்கு காரணமானவன்

அச்சம் தவிர்த்து, ரெளத்திரம் சொல்லி தந்தவன்

தேச பக்தி உணர்த்தி ,

பாரத நாடு எங்கள் நாடு என பறையறிந்து

நானும் ஒர் கனவு ,ஞாலமும் பொய் என காண்பித்தான்

நந்தலாலாவின் தீண்டும் இன்பத்தினையும்

காந்தமாய் உருகும் காதலை காண்பித்த

என் மகா புருஷன்,

என் தாயுமானவன்,

எந்தந்தையுமானவன்...

என் கவி ,மகா கவி , முண்டாசுகாரன்...


சின்னஞ்சிறு வயதுமுதல் உனது பாடல்களை கேட்டு, படித்து, உணர்ந்து உருகி இருந்தாலும் என்னமோ மனதிற்குள் உன்னை முழுவதுமாய்அடக்க முடியவில்லை..


அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம்

எதிர்த்துநின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணிநம்மைத்

தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே.. ..

என்ற பத்தே வரிகளை படித்து விட்டு எனக்கு பாரதி பாடல்கள் தெரியும் என்று சொல்லித் திரிந்த டிரவுசர் போட்ட காலத்திலிருந்து இன்று வரை உன் மீதான பிடித்தம் நீண்டு உன் வரிகளைத் தேடிச் சரணைடைந்து கொண்டுதான் இருக்கிறேன் தினமும்...

டிசம்பர் திங்கள் 11ஆம் நாள் உன் பிறந்த தினம். அன்றே உனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்..ஆனால் உன்னை பற்றி ஒரே நாளுக்குள் ஒரே பதிவுக்குள் என்னால் எழுதமுடியாது என்று தோன்றியதும் அன்று எழுத வில்லை. சரி எவ்வாறு எழுதலாம் என்று நினைத்தே சில வாரங்கள் கழிந்துவிட்டது.. இதோ ஆரம்பித்து விட்டேன்.. இனி உனை பற்றி என் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே...


வாழி பாரதி .. வாழி அவன் கவிதை பல்லாயிரத்தாண்டு...

4 comments:

Arunkumar said...

லேட்டா போஸ்டினாலும் லேட்டஸ்டாதான் இருக்கு...

ரசித்தேன் மணி. பாரதியைப் பற்றிய உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

G3 said...

அருமையான பதிவு :-)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

Sandai-Kozhi said...

தாமதம் ஆனாலும் அட்டகாசமான பதிவு.புதுவருடம் வருகிறபடியால் புதுப்புதுப் பதிவுகளா?தொடரட்டும்,மலரட்டும் உங்கள் பதிவுகள்--SKM

கோபிநாத் said...

அன்பு மணி..
தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்.
அருமையான பதிவு...
பாரதியைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக எழுதுங்கள்
வாழ்த்துக்கள்