Thursday, January 04, 2007

சனவரி 3 ,நண்பனுக்கு கல்யாணம்...
எனது கல்லூரிகால நட்பு மிகவும் அழகான,ரசிக்கத்தக்க,கிடைத்தற்கரிய,போற்றுதற்
குரியது.. நாங்கள் மட்டுமே பேசி திரியாமல் வீட்டில் ஒருவனாய், சரி தவறு உணர்த்தி,போறாமைபடாமல், நட்பு பாரட்டிய அழகிய நிலாக் காலம் அது...ஒரே பெஞ்சில் அருகருகில் அமர்ந்து ஊர் சுற்றி, எதிர்காலம் பேசி, நட்பாய் திரிந்த என் கல்லூரி காலம் மிக அருமையானது. அந்த நட்புகளில் ஒருவன் "ஜியாவுல் ரஷ்மான்".மதுரையிலிருந்து அவனது அப்பாவின் பணிமாறுதல் காரணமாய் திண்டுக்கல் வந்து நான் படித்த கல்லூரியில் அவனும் சேர்ந்து ,பார்த்து பழகி ,சண்டையிட்டு, சமாதானம் பேசி ,முதுநிலை கல்லூரியிலும் ஒன்று சேர்ந்து ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரே அறையில் தங்கி ,தூங்கி, கொஞ்சமாய் படித்த காலங்கள் பசுமையானது.வேலை நிமித்தம் காரணமாய் அவன் துபாய் சென்ற போது எனை அழைத்து அம்மா அப்பா வந்தா நான் போவேனெ என்று தெரியாது .அதனால்நீ வாடா னு சொல்லி நான் மட்டும் திண்டுக்கல்லிருது கிளம்பி, இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து கையசைத்து வழியணுப்பி வைத்தது..

எனது நண்பர்கள் கூட்டத்தில் முதன் முதலாய் வெளிநாடு சென்றவன் இவனே..அதற்கு பிறகு எப்போதாவது தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் உரையாடி எப்போதடா வருவாய் என்று வினவி, எப்போது இந்தியா வந்தாலும் பார்த்து ,பேசி, என்னுடன் நேரம் கழிப்பான். இதோ ஆண்டுகள் கரைந்து இப்போது நானும் வெளிநாட்டில்,அவனும் வெளிநாட்டில். மூன்று மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு நான் தொலைபேச,நலவிசாரித்தலுக்கு பின்னால் , வீட்ல பொன்னு பார்த்தாச்சுட,அநேகமாய் ஜனவரியில் கல்யாணம் இருக்கும் நீ வந்துடு என்று சொல்ல, நானோ வேகமாய்தலை ஆட்டி கட்டாயம் வந்துடுவேன் என்று சொன்னென்..

இதோ நேற்று அவனுக்கு கல்யாணம்... நானோ விடுப்பு கிடைக்காத காரணத்தினாலும் இன்னும் சில காரணத்தினாலும் போக முடியவில்லை.முன்னமே அழைத்து நான் வரமுடியுமானு தெரியலடானு என்று சொல்ல , அவனோ வருவதற்கு வழியபாருனு சொல்லிவிட்டு உடனே தொலைபேசியினை வைத்துவிட்டான்.

எனது மற்ற நண்பர்கள் அனைவரும் ஆஜராகி ,கேளி பேசி , நட்பு பாரட்ட நானோ இங்கு என் அடைபட்ட சுவரிலிருந்து வாழ்த்து சொல்ல தொலைபேசினேன்..
சாரிடா என்னால வரமுடியலா. WISH YOU A HAPPY MARRIED LIFE DA ணூ சொல்ல, ஒகே டா..ஒன்னும் இல்ல. இன்னும் ரெண்டு நாள் கழித்துபேசு, நாம ஃபிரியா பேசலாம் என்று தன் பெருந்தன்மையை காட்டினான்.
தனது வாழ்க்கைத் துணையை கைபிடித்து, அவனது மற்றுமோரு அழகான வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்ற குறளின் படியும்,
"பாயும் ஒளியாய் உன்னவளும்,
பார்க்கும் விழியாய் நீயும்,
காதலாய் உன்னவளும், காந்தமாய் நீயும்,
வேதமாய் உன்னவளும்,வித்தையாய் நீயும்
பொங்கி வரும் தீஞ்சுவையாய் உன் வாழ்க்கை",
என்ற பாரதியின் வார்த்தைகள் படியும்
உன் வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகிறேன்..
வாழ்க மணமக்கள்!வாழி பல்லாண்டு!!!

வாழ்க்கையில் ஒரே முறை நடக்கும் ஒரு நண்பனோட கல்யாணத்திற்கு வந்து , நேரில் பார்த்து , வாழ்த்து தெரிவிக்கா முடியாமல் அப்படி வேலை பார்த்து, பணம் சேர்த்து என்ன செய்ய போற என்று கேட்ட எனது மற்றுமொரு நண்பனின் கேள்விக்கு விடைதெரியாமல் ,வெட்க படாமல் நானும் சொல்லுகிறேன் எல்லாரிடமும்
நான் அமெரிக்காவில இருக்கேன்.!!!

21 comments:

Arunkumar said...

உங்கள் நண்பனுக்கு என்னுடைய வாழ்த்தைக் கூறி விடுங்கள் மணி

//
வாழ்க்கையில் ஒரே முறை நடக்கும் ஒரு நண்பனோட கல்யாணத்திற்கு வந்து , நேரில் பார்த்து , வாழ்த்து தெரிவிக்கா முடியாமல் அப்படி வேலை பார்த்து, பணம் சேர்த்து என்ன செய்ய போற என்று கேட்ட எனது மற்றுமொரு நண்பனின் கேள்விக்கு விடைதெரியாமல் ,வெட்க படாமல் நானும் சொல்லுகிறேன் எல்லாரிடமும்நான் அமெரிக்காவில இருக்கேன்.!!!
//

பலபேரோட நிலைமை
இப்பிடித்தான்...

வாழ்க்கைல சிலத அடையனும்னா பலத இழக்க வேண்டியிருக்கே... :(

Arunkumar said...

உங்க எழுத்து நடை கூட கவிதை மாதிரி தான் இருக்கு !!!!

வேதா said...

முகம் அறியா உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்:)
வாழ்க்கையில் சில நேரங்களில் சில கணங்களை இப்படி தான் இழக்க வேண்டியிருக்கிறது என்ன செய்ய?

மு.கார்த்திகேயன் said...

முகம் தெரியாத, எங்களுக்கு அவன் அகம் சொல்லி வாழ்த்து சொன்ன உன்னுடன் என் வாழ்த்தையும் அந்த நண்பனுக்கு சொல்லிவிடு மணி

மணி ப்ரகாஷ் said...

//வாழ்க்கைல சிலத அடையனும்னா பலத இழக்க வேண்டியிருக்கே//

ஆமா அருண். இழந்த பின்னாடிதான் தெரியுது அதோட மதிப்பு...

மணி ப்ரகாஷ் said...

//உங்க எழுத்து நடை கூட கவிதை மாதிரி தான் இருக்கு //

நன்றி அருண்.. னெக்ஸ்ட் பதிவு கவிதைதான். வருசத்தோட முதல் பதிவ கவிதையொடதான் துவக்கலாம்னு இருந்தேன்..ஆனா நண்பனின் கல்யாணம் வந்தது னால அவனுக்கு வாழ்த்து..

உன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடுகிறேன்...

அவன் சார்பாய் நன்றிகள்

மணி ப்ரகாஷ் said...

@வேதா

//சில கணங்களை இப்படி தான் இழக்க வேண்டியிருக்கிறது என்ன செய்ய//

இழந்த பிறகே தெரிகிறது அதன் அருமை..

அவனின் சார்பாய் நன்றி வேதா...

களப் பணியிலிருந்து மீண்டு வந்தாச்சு .அதனை பற்றி எதேனும் பதிவு உண்டா??

மணி ப்ரகாஷ் said...

//முகம் தெரியாத, எங்களுக்கு அவன் அகம் சொல்லி வாழ்த்து சொன்ன உன்னுடன் என் வாழ்த்தையும் அந்த நண்பனுக்கு சொல்லிவிடு மணி//

அவனின் சார்பாய் நன்றி கார்த்தி .
அனேகமாய் நாளை நான் தொலை பேசும் போது இந்த எல்லா நிகழ்வுகளையும் சொல்லிவிடுகிறேன்..

Syam said...

உங்களுடைய நண்பருக்கு எனது வாழ்த்தயும் சொல்லிடுங்க....அருண் சொல்றது தான் நானும் சொல்றேன்...என்ன பொழப்பு இது... :-)

Syam said...

புது வருசத்துல இப்படி ஒரு சோதனயா உங்க பிரண்டுக்கு...எல்லாம் அனுபவத்துல சொல்றேன்... :-)

ஜி said...

//நாம ஃபிரியா பேசலாம் என்று தன் பெருந்தன்மையை காட்டினான்.//

ஜியா'ன்னு பேரு வச்சவங்க எல்லாருமே பெருந்தன்மை உடையவங்கதான் மணி :)..

உங்கள் நண்பனுக்கு என்னுடைய திருமண வாழ்த்தைத் தெரியப்படுத்தவும்

இப்படிக்கு,
ஜி(யா)

Priya said...

உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்!

எனக்கும் இதே நிலமை தான். இப்ப தான் ஒவ்வொரு தோழியா கல்யாணம் பண்ணிக்கறாங்க. போக முடியலங்கரது ரொம்ப வருத்தமா இருக்கு..
நீங்க எழுதியிருக்கற விதம் ரொம்ப touching கா இருக்கு.

//சிலத அடையனும்னா பலத இழக்க வேண்டியிருக்கே... //
ரொம்ப சரி..

வேதா said...

களப்பணியின் நிகழ்வுகள் உயர் மட்ட ரகசியமாக பாதுகாக்க படவேண்டும் என்று உளவுத்துறையின் ஆணை. எனவே இப்போதைக்கு அதைப் பற்றிய பதிவு கிடையாது:)

மு.கார்த்திகேயன் said...

கல்யாண வீட்டு பந்தியிலே, நமது இலையில் ஏதாவது ஐயிட்டம் தீர்ந்து போய்விட்டால், பக்கத்து இலைக்கு வேண்டும் என்று கேட்பது போல, சுருக்காமக பக்கத்து இலை பாயசாமாய், உங்கள் நண்பரின் கல்யாணம் பத்தி சொல்லிட்ட மணி..

எப்போ உனக்கு.. திண்டுக்கலில் உனக்காக வலை போட்டுகொண்டிருப்பதாக சொன்னாங்க உண்மையா?

மணி ப்ரகாஷ் said...

@Syam

//உங்களுடைய நண்பருக்கு எனது வாழ்த்தயும் சொல்லிடுங்க....அருண் சொல்றது தான் நானும் சொல்றேன்...என்ன பொழப்பு இது//

அவனின் சார்பாய் நன்றிங்க நாட்டாமை..


அதான் நானும் கேட்கிறேன் என்ன பொழப்பு இது..?

ஆனாலும் இந்தியா போன எப்படி இருக்கிறது,. இந்ந மெக்சிகன் ரெஸ்டாரண்ட் எங்க போய் தேடுவேன்...?

மணி ப்ரகாஷ் said...

//புது வருசத்துல இப்படி ஒரு சோதனயா உங்க பிரண்டுக்கு...எல்லாம் அனுபவத்துல சொல்றேன்//

என்னங்க நாட்டமை .. பதினெட்டுபட்டிய காட்டிக்காக்கிற உங்களிக்கே இப்படி சோதனையா?..
ம்ம்ம் ..உங்க டெக்னிக எல்லாம் சொல்லிகுடுங்க..அவனகிட்ட சொல்லிடுரேன் எப்படி எஸ்கேப் ஆகாலாம்கிறத..

மணி ப்ரகாஷ் said...

ஜி,
வாங்க பெருந்தகையாளரே வாங்க.. வாழ்த்த சொல்லிபுடுரேன்..


//ஜியா'ன்னு பேரு வச்சவங்க எல்லாருமே பெருந்தன்மை உடையவங்கதான் மணி//

நன்றி ஜி.

மணி ப்ரகாஷ் said...

@பிரியா,

//போக முடியலங்கரது ரொம்ப வருத்தமா இருக்கு//

ஆமா பிரியா. வாழ்க்கைல ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு கூட போக முடியரது இல்ல. என்ன பன்றது.

இழந்துதான் ஆகனும் :(

மணி ப்ரகாஷ் said...

//எனவே இப்போதைக்கு அதைப் பற்றிய பதிவு கிடையாது:)
//

இந்த அரசியல் வாழ்க்கைக்கு வந்த இந்த சோதனைதானப்பா..

:(

மணி ப்ரகாஷ் said...

//திண்டுக்கலில் உனக்காக வலை போட்டுகொண்டிருப்பதாக சொன்னாங்க உண்மையா//

ஆமா கார்த்தி வலை போட்டு கிட்டு இருக்காங்க..ஆனா நம்ப கட்சியோட கடந்த பொது குழு கூட்டத்தின் தீர்மானத்தின் படி தலைவருக்கு பின்னாடிதான் தொண்டர்கள் அப்படிங்கிறதுனால உனக்காக வெயிட்டிங்ங்ங்ங்ங்ங்ங்.

யாரப்பா பொதுகுழு கூட்டத்துல கடைசியா தலைவருக்கு தெரியாம போட்ட தீர்மானத்த சொல்லவே இல்லையா??

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள், உங்கள் நண்பருக்கு. என் சார்பிலும் தெரிவிக்கவும். சிலதை இழந்துதான் சிலதைப் பெற முடியும்.