Sunday, January 07, 2007

எனது நேற்றைய கிழமை...


நாட்காட்டியில்
ரசித்து சந்தோசித்த
எனது நேற்றைய கிழமை
கிழிக்கப் படுகிறது
என் விரல்களால்...


ஏதேனும் ஒன்றை மிழுங்கிக் கொண்டு
அதிகமாகிப் போன அகவையும்
இன்னும் ஓர் நேற்றைய நினைவுகளுமாய்
புத்தம் புது நாள்...

உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?

22 comments:

Syam said...

தேதிய கிளிக்க சொல்லோ ஒரு கவித எழுதறீங்களே...என்ன ஒரு திறமை போங்க... :-)

Syam said...

ரொம்ப நாள் ஆச்சு மணி இந்த முருகன் படம் போட்ட காலண்டர பார்த்து...இத பாத்த உடனே பழனி பஞ்சாமிர்தம் தான் ஞாபகம் வருது :-)

Arunkumar said...

//
உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?
//
கமெண்ட வார்த்தை தெரியவில்லை !!!

வேதா said...

/உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?/
அற்புதமான வரிகள்:)

கீதா சாம்பசிவம் said...

கவிதை நல்லா இருக்கு, அதுவும் தேதி கிழிக்க ஒரு கவிதை என்னும்போது உங்களோட கவித்துவமான எண்ணம் புலப்படுது.

அப்புறம் சின்சினாட்டியிலே ஏற்கெனவே எனக்கு ஒரு நண்பர் இருக்கார். "வேந்தர்" என்ற பெயரிலே முத்தமிழிலே எழுதுவார். இயற்பெயர் "ராஜேந்திரன்"ன்னு நினைக்கிறேன். உங்க சங்க யோசனை வெற்றி பெற வாழ்த்துக்கள். எனக்காகச் சங்கம்னு சொல்லும்போது இது கூடச் செய்ய மாட்டேனா என்ன?

மு.கார்த்திகேயன் said...

//நாட்காட்டியில்
ரசித்து சந்தோசித்த
எனது நேற்றைய கிழமை
கிழிக்கப் படுகிறது
என் விரல்களால்...//

என்னே ஒரு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் மணி.. அதுவும் ரசித்த நாட்களை கிழிக்கும் போது, அங்கு அந்த பேப்பர்கள் மட்டுமே கிழிக்கப்படுகின்றன.. அங்கு கிழிக்கப்பட்டவை நமக்கே தெரியாமல் இதயத்தில் ஓட்டப்படுவதென்னவோ உண்மை தான்

மு.கார்த்திகேயன் said...

//ஏதேனும் ஒன்றை மிழுங்கிக் கொண்டு
அதிகமாகிப் போன அகவையும்இன்னும் ஓர் நேற்றைய நினைவுகளுமாய்
புத்தம் புது நாள்...
//

நமது வாழ்க்கையில், நாட்கள் என்பது கும்பகர்ணன் முன்னே படைக்கப்பட்ட சுவையான பதார்த்தங்கள் போல.. சிலவற்றை சுவையென நாம் நினைத்திருக்கிறோம். பலவற்றை மறக்கவே பழகியிருக்கிறோம்.. தினமும் காலையில் நாள் தொடங்கும் போதும் நேற்றைய மிச்சங்கள் கண்களில் வாழ்வதென்னவோ உண்மை தான்

மு.கார்த்திகேயன் said...

//உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?
//

கொஞ்சம் தத்துவம்.. மிதமான புலம்பல்.. சின்ன சின்ன விஷயங்களில் கூட மனிதன் கொண்ட பற்றுதல் என எல்லாவற்றையும் சரிவிகதமாய் கலந்த ஒரு உன்னத வரிகள் மணி..

கவிதையும், கருத்திற்கேற்ப ஒரு சாமி காலண்டர் கொண்ட படமும் இந்த போட்டை தாங்கி பிடிகின்றன..

ஜி said...

கிழித்தெறியப் படுகிறது தேதி...
கிழியாமல் கிடக்குது சாதி...
சதை பிம்பங்களோடு மோதி
பிரிவனை மட்டுமே மீதி

இதெப்படி... :)

கோபிநாத் said...

வணக்கம் மணி
அருமையான கவிதை...
\\உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?\\

யோசிக்க வைக்கின்ற வரிகள்....கலக்கிட்டீங்க...

மணி ப்ரகாஷ் said...

@ஸ்யாம்:
ஆம் ஸ்யாம் சின்ன வயசு நியாபகம் இங்க அது எல்லாம் முடியல அதுனாலதான் ...

//இத பாத்த உடனே பழனி பஞ்சாமிர்தம் தான் ஞாபகம் வருது :-)//
பழனிக்கு போனவுடனெ வாங்கி அனுப்புறேன். நானும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.

நீங்க வந்து இருக்கீங்களா.

மணி ப்ரகாஷ் said...

@அருண்

என்னப்பா உனக்கு வார்த்தை தெரியலீயா, கொஞ்சம் யோசியுங்க..

மணி ப்ரகாஷ் said...

@வேதா
//எனது நேற்றைய கிழமையை?/
அற்புதமான வரிகள்:)
//

நன்றி வேதா.

மணி ப்ரகாஷ் said...

வணக்கம் தலைவி அவர்களே,
//உங்க சங்க யோசனை வெற்றி பெற வாழ்த்துக்கள்//

உங்கள் ஆசிகளுக்கு நன்றி. கூடிய விரைவில் கட்சியினை பலப்படுத்த சூறாவளியாய் இந்த மணி...

//அப்புறம் சின்சினாட்டியிலே ஏற்கெனவே எனக்கு ஒரு நண்பர் இருக்கார்.என்ற பெயரிலே முத்தமிழிலே எழுதுவார். இயற்பெயர் "ராஜேந்திரன்"ன்னு நினைக்கிறேன்.//

அப்படியா, அவரது வலைமுகவரி?

மணி ப்ரகாஷ் said...

கார்த்தி,

நான் உனது திறமை கண்டு வியக்கிறேன், கவிதையினை இன்னும் பொருள் பல கண்டு , விளக்கம் அளித்து வாவ்...

//நாட்கள் என்பது கும்பகர்ணன் முன்னே படைக்கப்பட்ட சுவையான பதார்த்தங்கள் போல//

எவ்வளவு உண்மையான உண்மை..

மணி ப்ரகாஷ் said...

////கொஞ்சம் தத்துவம்.. மிதமான புலம்பல்.. சின்ன சின்ன விஷயங்களில் கூட மனிதன் கொண்ட பற்றுதல் என எல்லாவற்றையும் சரிவிகதமாய் கலந்த ஒரு உன்னத வரிகள் மணி..

கவிதையும், கருத்திற்கேற்ப ஒரு சாமி காலண்டர் கொண்ட படமும் இந்த போட்டை தாங்கி பிடிகின்றன////

என் கிறுக்கல்கள் அர்த்தமுறுகிறது
உன் வாசித்தலினால்
நன்றி என் தோழா...

மணி ப்ரகாஷ் said...

ஜி,

//கிழித்தெறியப் படுகிறது தேதி...
கிழியாமல் கிடக்குது சாதி...
சதை பிம்பங்களோடு மோதி
பிரிவனை மட்டுமே மீதி

//

வாவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

நான்கு வரிகளுக்குள் நாம் நாடு.
ஜி அசத்தல்.. சூப்பர் பஞ்ச்

மணி ப்ரகாஷ் said...

வணக்கம் கோபி,

முதன் முறையாய் வந்து இருக்கீறீர்கள். வருகைகு நன்றி..

//யோசிக்க வைக்கின்ற வரிகள்....கலக்கிட்டீங்க/

வாழ்த்துகளுக்கும் நன்றி.... திரும்பவும் வாருங்கள், நானும் வருகிறேன் உங்களின் வலைப்பக்கத்திற்கு....

Sandai-Kozhi said...

//உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?//

அழகான உணர்ச்சிகள் நிரம்பிய வரிகள்.நமக்கு பின் நம் தேதிகள் கிழிக்கப் படாமலே போய் விடும்.ஒரு முடிவு மற்றொன்றின் ஆரம்பம்.நாம் என்னக் கொண்டு வந்தோம்,கொண்டு போவதற்கு?இதற்கு ஈடாக "ஜி"எழுதிய கவிதையும் அருமை. இதை புரிந்து நடந்தால் வாழ்க்கையில் ஏது ஏக்கம்,ஏது ஆசை,ஏது சண்டை,பின் ஏது பிரிவு?
Wonderful Mani.--SKM

மணி ப்ரகாஷ் said...

skm,
/ஒரு முடிவு மற்றொன்றின் ஆரம்பம்.நாம் என்னக் கொண்டு வந்தோம்,கொண்டு போவதற்கு/

ஆம் skm.. எனது கவிதைக்கு அர்த்தம் தந்ததற்கு மிகவும் நன்றி....

Priya said...

கவிதை கலக்கல்.

//உலகினில் இருந்து
நான் கிழித்தெறியப் படும்போது
யார் கிழிப்பார்கள்
எனது நேற்றைய கிழமையை?//

அருமையான வரிகள். மனசு கனமாயிடுச்சு.

மணி ப்ரகாஷ் said...

@பிரியா?
//அருமையான வரிகள்//

நன்றி..பிரியா எப்ப போஸ்டிங் போட போறீங்க?