Sunday, January 14, 2007

தைத் திருநாள் வாழ்த்து!!!







பழையன கழிந்து
புதியன புகுந்து
மழையின் கருணையும்
சூரியனின் பார்வையும் பட்டு
பசுமைநிலம் முன்னே



அலங்கரித்த கோலமும்
மஞ்சள் கொத்துகளுடன்
மண்பானையில் பொங்குகிறது பொங்கல்!!!
மாடுகள் கொம்புதிருத்தி
வீரம் காட்டி, மீசை முறுக்கி
எம் தமிழனின் வாழ்வு
செங்கரும்பின் தீஞ்சுவையாய்
எல்லா காலமும்!!!



என் உழவனே வாழி நீ!
வாழி உன் நிலம்!
வாழி உன் கால்நடை!
வாழி நீ பல்லாண்டு!

உன் மண்ணில் விழும் வியர்வைதுளிகளுக்கு நன்றி!!!






27 comments:

மு.கார்த்திகேயன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் மணி..

அருமையான மண் வாசனை கமழும் கவிதை

Arunkumar said...

//
உன் மண்ணில் விழும் வியர்வைதுளிகளுக்கு நன்றி!!!
//
அருமை.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)

வேதா said...

அருமையான கவிதையை எங்களுக்கு பொங்கல் விருந்தாக்கி விட்டீர்கள்:)
பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரகாஷ்:)

கோபிநாத் said...

அன்பு மணி

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....

அருமையான நன்றி உணர்த்தும் கவிதை..
நன்றிகளுடன்...

Priya said...

அழகான கவிதை.
பொங்கல் நல்லா கொண்டாடி இருப்பிங்கனு நினைக்கறேன்.

Anonymous said...

@Mani,

Arumaiyaana kavithai.Manvaasanai ulla tamiz ungaludayathu...keep going.

- Hayagriva Dasan

Syam said...

belated பொங்கல் வாழ்த்துக்கள் மணி, என்ன ஒரு அருமையான கவிதை...

//உன் மண்ணில் விழும் வியர்வைதுளிகளுக்கு நன்றி//

சூப்பர்... :-)

Syam said...

ஆமா இந்தியாலயா இருக்கீங்க...சொல்லவே இல்ல...எப்போ போனீங்க :-)

ஜி said...

அருமையான கவிதை....

பொங்கல் எப்டி போச்சு? ஒரே பட்டாசா?

மணி ப்ரகாஷ் said...

@ கார்த்தி,

நன்றி கார்த்தி...

//அருமையான மண் வாசனை கமழும் கவிதை //

கார்த்தி உன்னோட மனத்துக்கு ஈடாகுமா. ??

எப்படி போனது பொங்கல்?

மணி ப்ரகாஷ் said...

@arun,
நன்றி அருண், எப்படி வந்தது பொங்கல். சாப்பிடற மாதிரி வந்துச்சா??

மணி ப்ரகாஷ் said...

@கோபிநாத்,

நன்றி கோபிநாத். எப்படி போனது உங்கள் பொங்கல் கொண்டாட்டங்கள்?

மணி ப்ரகாஷ் said...

@வேதா,

நன்றி வேதா, எப்படி போனது உங்களின் பொங்கல் கொண்டாட்டங்கள்?

மணி ப்ரகாஷ் said...

@பிரியா,

இல்லங்க பிரியா, இங்க பர்கர் வாங்கி சாப்பிட்டு ரொம்ப சோகமா போச்சு..

உங்களுக்கு எப்படி போனது?

மணி ப்ரகாஷ் said...

@ தாசன்,

உங்களின் முதல் வருகைக்கு நன்றி...

வாழ்த்துகளுக்கும் நன்றி...

மணி ப்ரகாஷ் said...

வணக்கம் நாட்டமை,

என்ன ஆணி எல்லாம் பிடுங்கிட்டீங்களா?

வாழ்த்துகளுக்கு நன்றி நாட்டாமை. பொங்கல் எப்படி கொண்டாடினிங்க?

//ஆமா இந்தியாலயா இருக்கீங்க...சொல்லவே இல்ல...எப்போ போனீங்க /

நாட்டாமை நான் எப்படி உங்க கிட்ட எல்லாம் சொல்லாம ஊருக்கு போவேன்..

இங்கதான் Mcla பர்கர் சாப்பிட்டு ரொம்ப சோகமாதான் போச்சு...


கரும்பு மிஸ்ஸிங்.. அம்மா மிஸ்ஸிங்... பொங்கல் மிஸ்ஸிங்... ஊர்ல நம்பள எதிர்பார்த்து இருந்த figuresum missinggggggggg

Kannan said...

Pongal Valthukal .....

ramya said...

blated pongal vaazthukal prakash. mudhal visit n mudhal comment for ur post....also danx for ur arrival at my blog..

கீதா சாம்பசிவம் said...

பொங்கல் கொண்டாடினதுக்கு அப்புறம் ஒண்ணும் எழுதலியா? எனக்குத் தான் தெரியலியா? எல்லாப் பதிவிலேயும் போய்ப் பார்க்கறேன். என்னமோ ரகசியா வேலை சீச்சீ, ரகசிய வேலை செய்யறீங்க, தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து.

SKM said...

very very sorry Mani.Nan romba romba late.Belated Pongal wishes.
Asusual azhagana kavidhai.azhagana photos.

ramya said...

adapaavigala...enga en comment..kanama poiduchu nethu potadhu....wats happening mani..

seri seri..nan feel pannuvenu neenga feel pannadheenga..again blated pongal wishes..

மணி ப்ரகாஷ் said...

@ரம்யா,

//blated pongal vaazthukal prakash. mudhal visit n mudhal comment for ur post....also danx for ur arrival at my blog.. //

thanks for ur wishes and presence ..

Ella postiyum padichu comment ezhunga..yarumve ippa ellam varametenkiranga..

மணி ப்ரகாஷ் said...

@ தலைவி கீதா மேடம்,

//பொங்கல் கொண்டாடினதுக்கு அப்புறம் ஒண்ணும் எழுதலியா? எனக்குத் தான் தெரியலியா? எல்லாப் பதிவிலேயும் போய்ப் பார்க்கறேன். என்னமோ ரகசியா வேலை சீச்சீ, ரகசிய வேலை செய்யறீங்க, தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து.

//

தலைவி அவர்களே நான் இன்னும் எழுதவில்லை.. நான் எப்பவுமெ கொஞ்சம் மெதுவாதான் பதிவ போடுவேன்..ஆன அதுல இப்ப வேலைய வேற செய்ய சொல்லிட்டாங்க.. சோ நான் இன்னமும் பதவ போடவில்லை...

ஆமா ரகசியா னு வாய் தவறி சொல்லி இருக்கீங்களே.. அப்படினா என்ன? எனக்கு தெரியாம இருக்கே ,தெரிஞ்சுக்கலாம்னுதான்...

இப்படிக்கு

"கட்-அவுட் தொண்டன்" மணி

மணி ப்ரகாஷ் said...

@ஸ்KM

//very very sorry Mani.Nan romba romba late.Belated Pongal wishes.
Asusual azhagana kavidhai.azhagana photos//

என்ன, மறந்துட்டீங்களா என்னைய... நீங்க எப்படி பொங்கல் கொண்டாடினீங்க?

என்னோட பொங்கல் சோகமா போனது.. அதுனாலதான் போட்டவிலாவது பார்த்து திருப்தி அடையாலாம்னு போட்டேன்..

மணி ப்ரகாஷ் said...

@ரம்யா,

அப்பாட முதல் முறையா ஒரே ஆள் இரண்டு முறை ஒரே பதிவிற்கு கமேண்ட்..

//adapaavigala...enga en comment..kanama poiduchu nethu potadhu....wats happening mani..

seri seri..nan feel pannuvenu neenga feel pannadheenga..again blated pongal wishes.. //

சாரிப்பா. நான் நேற்று படித்துவிட்டு publish பன்னினேன்..ஆனா வரல... கொஞ்சம் பிஸியா(உண்மைபா) இருந்ததுனாலா நான் பார்க்காம விட்டுட்டேன்..சாரி...

//seri seri..nan feel pannuvenu neenga feel pannadheenga//

சே, என்ன ஒரு பெருந்தன்மை...

பொங்கல் வாழ்த்துதலுக்கு நன்றி.. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்..

ramya said...

//Ella postiyum padichu comment ezhunga..yarumve ippa ellam varametenkiranga.. //

ada neenga vera boss, ellorum varangale unga postku commentify panitum poranga, then yen kavalai..

inimey nan regular attendance okva..

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, ரகசியான்னா நிஜமாவே தெரியாதா? :D