Thursday, January 25, 2007

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!!!

நாட்டு வணக்கம்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?


58வது குடியரசு தினம் மிக சிறப்பாக எல்லா இந்தியனாலும் கொண்டாடப்பட்டு இருக்கும்.ஒரு இந்தியனாய் கொடி பட்டொளி வீசி பறப்பதினை பார்க்க முடியாவிட்டாலும்,பழைய நினைவுகளை அசைபோட்டு ,முண்டாசுப் புலவனுடன் சேர்ந்து என் நாட்டினை வணங்குவதில் பெருமை அடைகிறேன்.

இந்த நாள், நான் இந்தியாவில் இருந்து இருந்தால் குடியரசுதின அணிவகுப்பு விழாவினை பார்க்க தொலைக்காட்சி பெட்டியின் முன் ஆஜர் ஆகி இருந்திருப்பேன்.. கல்லுரிகாலத்தில் இன்னும் சிறப்பாய், நானும் அணிவகுப்பில்... முதல் வருடம் சாதாரன கேடட்டாய் அணிவகுப்பில் கலந்துகொண்டு மூவர்ண கொடியினை பார்த்து ஒரு சல்யூட். இரண்டாவது வருடம் கார்பரலாய் உயர்ந்து, கல்லுரி முதல்வரை அழைத்து வர பைலட்மார்ச். (அந்த கழுத்து பட்டை,வெள்ளை நிற கையுறை,மார்பில் குறுக்காய் ஒரு பட்டை,பூட் என தனி மதிப்பு).முன்றாவது வருடம் CUO வாக தேர்ந்தெடுக்கபட்டு, கார்டு காமண்டாராய் இருந்து , கார்டு ஆப் கார்னரில்(நிறைய வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியவில்லை) துப்பாக்கியினை உயர்த்தி, கொடிக்கு வணக்கம் செலுத்தியதில் ஒரு இந்தியனாய் கர்வம் கொண்டு திரிந்த அந்த காக்கி உடை காலம் திரும்பி பெற முடியாத இனிமை யான காலம்..

எல்லா தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் , ஒவ்வொரு இந்தியனுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
இந்திய அரசியல் சாசன சட்டம் நிறைவேறிய

இந்நாளில் நமது அரசியல் சட்டங்களை மதித்து

இந்தியனாய் அதை பேணி காப்பதில் உறுதி பூனுவேன்!
வெல்க பாரதம் !


வாழ்க தாய்த்திரு நாடு!


ஜெய்ஹிந்த்!!!


இணையத்தில் உலாவும்போது இந்த http://mha.nic.in/nationalflag2002.htm இணையப்பக்க்த்தினை பார்த்திட நேர்ந்தது. தெரியாத விசயங்கள் எத்துனை உள்ளன.

23 comments:

கோபிநாத் said...

அன்பு மணி..

உங்களுக்கும் நம் இந்தியர் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

\\ ஒரு இந்தியனாய் கர்வம் கொண்டு திரிந்த அந்த காக்கி உடை காலம் திரும்பி பெற முடியாத இனிமை யான காலம்.. \\

அந்த காலங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

ramya said...

hai prakash, wish u a happy republic day...

first take this comment moderation ma, yaru phast gamment podara apdinu theriya maatengudhu..

okva ..

Syam said...

குடியரசு தின வாழ்த்துக்கள் மணி.... :-)

கீதா சாம்பசிவம் said...

ஒரு தேசீயப் படை வீரராய் இருந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அதுவும் கார்ப்பொரல் அளவிற்கு. நிஜமாவே ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவை நினைத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களால்ல் இந்தியாவுக்குப் பெருமைதான். வாழ்த்துக்கள் மறுபடியும்

Arunkumar said...

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

கோபிநாத்.

வாழ்த்துகளுக்கு நன்றி..

//அந்த காலங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் அருமையாக இருக்கும்//

பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைதான்.. ஆனால் பின்விளைவுகளை என்னி நிறுத்தி வைத்துள்ளேன்.. சுவராசியமாய் ஒன்றும் இல்லை...

மணி ப்ரகாஷ் said...

ரம்யா,
வாழ்த்துகளுக்கு நன்றி..
//first take this comment moderation ma, yaru phast gamment podara apdinu theriya maatengudhu//
yaa. sure, i ll do that.. tamil manathukaka vachu irunthen.. ippa tamil manathuke pathivugalai anupuvathillai...

மணி ப்ரகாஷ் said...

தலைவி அவர்களுக்கு,

வாழ்த்துகளுக்கு நன்றி...
//வெளிநாட்டில் இருந்து இந்தியாவை நினைத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களால்ல் இந்தியாவுக்குப் பெருமைதான்//

தலைவி, வீட்டின் அருமை வீட்ட விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறம்தான் சட்டென உரைக்கிறது.. ஆனா உண்மை என்னவென்றால் இந்தியாவால் எனக்குத்தான் பெருமை...

//கார்ப்பொரல் அளவிற்கு. நிஜமாவே ரொம்ப சந்தோஷமாய் //
தலைவி அந்த பதவி நான் கல்லூரியில் இரண்டாவது வருடம் வகித்தது.. மூண்றாம் ஆண்டு எல்லா தேசிய மாணவர் படை மாணவனும் விரும்பும்,எதிர்பார்க்கும்,குழுதலைவனாய் (CUO the highest rank in NCC.)ஒரு வருடம்..

என் NCC காலம் எனக்கு நிறைய கத்துகொடுத்தது... Leadership Qualities,Time management,
Patriotism,Dressing , Hard working etc,..

Karthikeyan said...

மணி, குடியரசு தின வாழ்த்துக்கள்..

நன்றாக வண்ணமடித்து பதிவு பார்க்கவே நன்றாக இருக்கிறது

ஜி said...

அருமை நண்பரே...

இந்தியன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

என்று பாட்டையும் மாற்றி அமைக்கலாம் இந்நாளில்

ஜி said...

அப்புறம்..இப்படி ஒவ்வொரு விழாக்கு மட்டும்தான் பதிவு போடுவேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு நின்னா எப்படி... எறங்க்குங்க தல...

ஜி said...

NCC ல இவ்வளவு பெரிய ஆளா நீங்க... என்னோட பள்ளி நண்பன் திருப்பதின்னு ஒருத்தன் அப்பவே தில்லி யெல்லாம் போயிட்டு வந்தான்.

மணி ப்ரகாஷ் said...

@Arun

Thanks Arun.

மணி ப்ரகாஷ் said...

@Arun,
Thnks arun

மணி ப்ரகாஷ் said...

@ஜி,

//இந்தியன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா//

ஆமாம் ஜி, எப்போதும் தலை நிமிர்ந்து இந்தியனாய்..

மணி ப்ரகாஷ் said...

@ஜி,

//அப்புறம்..இப்படி ஒவ்வொரு விழாக்கு மட்டும்தான் பதிவு போடுவேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு நின்னா எப்படி... எறங்க்குங்க தல...//

ஜி நானும் எழுதனும் நினைக்கிறேன் ஆனா இந்த சோம்பேறித்தனம் என்னை ஆட்கொண்டு என்னை முழுங்கிக் கொண்டு இருக்கிறது..
ஆபீசில் வேலையும் கொஞ்சம் அதிகமாகிவிட்டதால் ...
கட்டாயம் நிறைய எழுத வேண்டும்..கூடிய விரைவில்...

அதுக்கு அப்புறம் உண்மையான காரணம் உங்கள மாதிரி எல்லாத்திலயும் பொளந்து கட்ட முடியலப்பா...

//என்னோட பள்ளி நண்பன் திருப்பதின்னு ஒருத்தன் அப்பவே தில்லி யெல்லாம் போயிட்டு வந்தான்//

நானும் டெல்லிக்கு போகனும்தான் NCC la சேர்ந்த்தேன்..ஆனா போகத்தான் முடியல ..அது ஒரு பெரிய சோக கதை... :(

மணி ப்ரகாஷ் said...

நாட்டாமை,

உங்க கமெண்ட் இப்பத்தான் பார்க்கிறேன்... கூகிள் என்னமோ சதி செய்கிறது..

மணி ப்ரகாஷ் said...

@கார்த்தி,

நன்றி கார்த்தி.. உங்க கமெண்ட் அப்படித்தான்..இப்பதான் பார்த்தேன்...

ஆமா என்ன பெயர் ஆங்கிலத்தில் வருகிறது.,

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், வந்து வாழ்த்திட்டுப் போயிருக்கேன், வரலைன்னு சொல்லி இருக்கீங்களே?
அதுக்காகக் கூட இன்னும் ரெண்டு கட்-அவுட் வைங்க, அதான் பனிஷ்மெண்ட் :D

ramya said...

aiyaa saami yaradhu inga post podaradhu....romba naala inga post parkama iruken, so dhayavu senju oru post podunga pa, ungalluku puniyama pogum....

மணி ப்ரகாஷ் said...

okee. talavi .. இன்னும் ரெண்டா.. தலைவி இது எல்லாம் ஒவரா இல்ல..ஒகே,ஒகே வைச்சுடுரேன்.. ஆனா எனக்கு என்ன பதவி தருவிங்க?

மணி ப்ரகாஷ் said...

@rammiiiii,

//aiyaa saami yaradhu inga post podaradhu....romba naala inga post parkama iruken, so dhayavu senju oru post podunga pa, ungalluku puniyama pogum//

அப்ப ,நான் புன்னியத்த தேடி காசிபோக வேண்டாம..

தாங்க்ஸ்.. தாங்க்ஸ்.. ஆனா உங்களுக்கு வர்ற மாதிரி அந்த வார்த்த ,வார்த்த எனக்கு வரமாட்டேன்கிது... என்ன சாப்பிடுங்கிறீங்க? சொல்லுங்கப்பா..

ramya said...

nan enna saapdarengaradhu mukiyamilla, enna solromnu than mukiyam, varta...

"punniyam thedi kasiku povar indha ulagathile"..ippadi pattu padama, tagalnu adutha post podungooooo PP

"Post Prakash"