Wednesday, January 31, 2007

இன்னுமோர் காலண்டர் கவிதை


என் மடிக்கணினியின் வலது ஒரத்தில்
மறைந்து இருக்கும் காலண்டர் நினைவுறுத்தியது எனது பழைய
தேதி கிழித்தலை..

எனக்கு முன்னமே யாரோ
கிழித்துவிட்டுப் போனகாலண்டரில்
நானும் தேதி கிழித்து,கிழமைபார்த்து
தவறாய் அட்டவணைபடுத்திய
என் புத்தக சுமையில், இல்லாது போன
என் வரைய முடியா ஓவியநோட்டிற்காக
வாங்கிய பிரம்படியும்,
அந்த குட்டை மீசை வாத்தியாரும்...

கிழித்தும் தூக்கி எறியாமல் அலமாரிக்குள்
பத்திரப் படுத்திய எனது தேதிகளுக்கு பின்னால்
என்னவளின் பார்வையோ,சிரிப்போ இருக்கத்தான் செய்தன...

இப்போதோ எனது நாட்காட்டி
லோட்டஸ் மின்னஞ்சலின் உதிரிப்பாகமாய்
அடுத்த டீம் மீட்டிங்கை அலர்ட்டாய் சொல்லிப்போனது...

என் மடிக் கணினியின் வலது ஓரத்திலும்,மின்னஞ்சலிலும்
கிழிக்கமுடியாமல் இருக்கத்தான் செய்கின்றது
நினைவுகளற்ற எனது இப்போதைய நாட்காட்டி...

20 comments:

மணி ப்ரகாஷ் said...

//nan enna saapdarengaradhu mukiyamilla, enna solromnu than mukiyam, varta... "punniyam thedi kasiku povar indha ulagathile"..ippadi pattu padama, tagalnu adutha post podungooooo PP "Post Prakash//


ரம்யாவின் ஆனை நிறைவேற்றப் பட்டது..
ஆபீஸ்ல காலங்காத்தால வேலை பார்க்காம டாகால்னு போட்ட போஸ்ட்..

ரம்ஸ் ..தாங்க்ஸ்..அப்பாட இன்னிக்கு வேலை பார்க்கல....உன்னாலா விடுதலை..விடுதலை....

Syam said...

மணி,

காலெண்டர் வெச்சு சூப்பர் சூப்பரா கவித எழுதறீங்க... :-)

Syam said...

first comment நீங்களே போட்டுட்டதால கணக்குல வராது...நான் தான first? :-)

Syam said...

//இல்லாது போன என் வரைய முடியா ஓவியநோட்டிற்காகவாங்கிய பிரம்படியும்//

இதுல எனக்கு தெரிஞ்சது எல்லாம் பிரம்படி மட்டும் தான்....ஏங்க கிளாஸ் எக்ஸாம்ல பெயில் ஆகுறது ஒரு பெரிய குத்தமா...தேடி தேடி அடிச்சானுக :-)

ஜி said...

ஆமால்ல.. இத நான் யோசிக்கவே இல்லையே...

சூப்பர்... அல்டிமேட் கவிதை... ஒரே நேரத்துல மென் பொறியாளனாகவும், கவிஞனாகவும் உருவெடுத்துட்டீங்க மணி....

ஜி said...

காலெண்டர் கவிதைகள்னு ஒரு புக்கே போடலாம் போலிருக்குதே...

எதாவது ஒரு காலண்டர் காண்ட்ராக்ட் புடிச்சு கவிதைய காலண்டர்ல பிரசுரித்து பயங்கரமா சம்பாதிச்சிடலாம்... ஆளுக்குப் பாதி ஓகேவா?

SKM said...

//என் மடிக் கணினியின் வலது ஓரத்திலும்,மின்னஞ்சலிலும்
கிழிக்கமுடியாமல் இருக்கத்தான் செய்கின்றது
நினைவுகளற்ற எனது இப்போதைய நாட்காட்டி...//
absolutely true.I still make sure to get one "dhinam kizhikum" Calander from India.Adhu illanna sari varadhilla.
asusual dagaalnu potta post aanalum superb.

கோபிநாத் said...

அன்பு மணி..

அருமை மணி..எப்படி தான் இந்த மாதிரி எல்லாம் கலக்கறீங்க???

மு.கார்த்திகேயன் said...

//என் மடிக் கணினியின் வலது ஓரத்திலும்,மின்னஞ்சலிலும்
கிழிக்கமுடியாமல் இருக்கத்தான் செய்கின்றது நினைவுகளற்ற எனது இப்போதைய நாட்காட்டி...//

மணி, இயந்திரங்கள் வந்துவிட்டதால் இழந்துவிட்ட சிலதில் இதுவும் ஒன்று.. கட்டைவண்டிகள் போய் பேருந்துகள் வந்துவிட்ட.. வசதிகள் வந்ததில் இது போன்ற வாசங்கள் மறையத்தான் போய்விடும் :-)

மணி ப்ரகாஷ் said...

நீங்க தான் நாட்டாமை முதல்..உங்களுக்கு பகார்டியா பார்சல் பன்னிடுரேன்..

//ஏங்க கிளாஸ் எக்ஸாம்ல பெயில் ஆகுறது ஒரு பெரிய குத்தமா...தேடி தேடி அடிச்சானுக //

ஆமாங்க ..அதபோய் குத்தம்னு..எப்பதான் இவங்க திருந்துவாங்களோ.. நான் தெரியாமத்தான் கேட்கிறென்.அவங்க ஒழுங்கா சொல்லிகுடுத்தா நாம என் பெயில் ஆவுரோம்ம்ம்ம்..??

மணி ப்ரகாஷ் said...

//சூப்பர்... அல்டிமேட் கவிதை... ஒரே நேரத்துல மென் பொறியாளனாகவும், கவிஞனாகவும் உருவெடுத்துட்டீங்க மணி///

தாங்கஸ்..தாங்க்ஸ்ஸ்...

//புடிச்சு கவிதைய காலண்டர்ல பிரசுரித்து பயங்கரமா சம்பாதிச்சிடலாம்... ஆளுக்குப் பாதி ஓகேவா//

எனக்கு ஓகே.. அப்பவாவது நம்ம கவிதை அச்சுல ஏறுதே...

மணி ப்ரகாஷ் said...

@skm,

//absolutely true.I still make sure to get one "dhinam kizhikum" Calander from India.Adhu illanna sari varadhilla//

aama eppdi varavalikireenga.. poona varsuma kalandara pathathu..nan innum parakve illa

anguvilaas kaalandara veetla irukku?

மணி ப்ரகாஷ் said...

//அருமை மணி..எப்படி தான் இந்த மாதிரி எல்லாம் கலக்கறீங்க//

கோபி.. நன்றி..
கலக்கறனு சொன்ன வாய்க்கு சக்கரதான்...

என்ன நீங்க எதுவும் போடவில்லையா. எனக்கு சரியான போட்டியா நீங்கதான் இருப்பீங்க போல..

பதிவ லேட்ட போடுறீங்க..

மணி ப்ரகாஷ் said...

//வசதிகள் வந்ததில் இது போன்ற வாசங்கள் மறையத்தான் போய்விடும் //

ஆம் கார்த்தி.. நினைத்து பார்க்கையிலேயே மனது ரெக்கை கட்டும்போது அனுபவித்து இருந்தா.

எனக்கு ரொம்ம நாளா மாட்டுவண்டில போகனும்னு ஆசை...

நிறைவேறுமானுதான் தெரியல..

கோபிநாத் said...

\\
என்ன நீங்க எதுவும் போடவில்லையா. எனக்கு சரியான போட்டியா நீங்கதான் இருப்பீங்க போல..

பதிவ லேட்ட போடுறீங்க..\\

மணி..
நமக்கு சரக்கு எதுவும் இல்லப்பா :(((
அதனால தான் லேட்டு...
இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்...

சரி இப்ப..ஒரு நன்றி பதிவு போட்டாச்சு வாங்க...

Syam said...

மணி,

இன்னைக்கு மெயில் ஓப்பன் பண்ணா...நீங்க சந்தோச பட ஒரு கமெண்ட் :-)

வேதா said...

நாட்காட்டியின் கிழிக்கப்பட்ட
தாள்களில்
ஒட்டிக்கொண்டு தான் விழுகிறது
அன்றைய கிழிக்கப்படாத நிகழ்வுகள்:)
அருமையான கவிதை மணி:) அடுத்த வருடம் உங்களுக்கு நம்ம ஊரு காலண்டர் ஒன்று கொரியரில் அனுப்பிடறேன் நல்லா கிழிச்சு கிழிச்சு சந்தோஷப்படுங்க:)

Arunkumar said...

காலெண்டர் தேதியக்கிழிச்சி பல நாள் ஆச்சு :(

கவிதை வழக்கம் போல் பிரமாதம் :P

SKM said...

//aama eppdi varavalikireenga..//

Mani, Iam living in CA-Bay Area pa.Ingae thadukki vizhundha Indian stores.Niraya Indians.yaro oruthar povanga India ku.ippo yellam sila Indian tamil real estate agents here give this kind.so yeppdiyo vandhudum.

சேதுக்கரசி said...

இது நல்லா இருக்கு மணி ப்ரகாஷ்...