Sunday, February 25, 2007

18,குமரன்திரு நகர்,திண்டுக்கல்-624005


"எல்லா இடங்களிலும் எப்படிச் சுற்றித் திரிந்தாலும்,என்னவாகிப் போனாலும் நான் நானகிப் போவது என் வீட்டில் மட்டுமே."

இப்படித்தான் எனது முதற்பதிவினை எழுதி வலைவீட்டினை ஆரம்பித்தேன். உருவமற்ற சுவர்களை கட்டியதற்கே நான் எல்லையில்லா சந்தோசம் அடைந்த போது, உண்மையாகவே சுவர் எழுப்பினால்...


ஆம், எனது நீண்ட நாள் ஆசை கடந்த திங்கள் கிழமை(பிப்ரவரி-26) நிறைவேறியது.
நான் பிறந்து ,அழுது,சிரித்து,தவழ்ந்து,விளையாண்டு,கனவுற்று,கோபமுற்று,களவுற்று
உண்மையறிந்து என எனக்கு எல்லாம்சொல்லிதந்த என் குடிசை வீடு மச்சிவீடாய் ஆகிப் போனது. எனக்கு அந்த செங்கல்லின் ஈரம் தெரியாது,ஜன்னல் கம்பியின் எடைதெரியாது,என் வீட்டுகதவின் வாசம் தெரியாது.சிமெண்ட் மூட்டையின் விலை தெரியாது.குவித்த மணலில் விளையாடி,சரித்துவிட்டு போகும் குட்டிப் பிள்ளைகளை பார்த்திடவும் இல்லை.
வேலையாட்களுக்கு டீ,வடை வாங்கித்தந்ததும் இல்லை.ஆம்,நான் பார்த்து பார்த்து கட்டவில்லை ஆனாலும் சந்தோசமுறுகிறேன் என் ஆசை நிறைவேறிப் போனதில்.


"மணி ஒன்னும் கவல படாத,அம்சமா கட்டிபுடலாம் ".கொத்தனார் அண்ணா மருதமுத்து,முதல் நாள் தொலைபேசிய போது சொன்ன வார்த்தை. செய்தும் முடித்து விட்டார்.இதோ வேலை எல்லாம் முடிந்து ,அப்பாவும்,அம்மாவும் போனவாரம் தொலைபேசும்போது,எல்லா வேலையும் முடிஞ்சுடுப்பா.இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அத பால் காய்ச்சிட்டு பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லிய போது மனசுக்குள் எதோ சின்னதாய் சந்தோசம்.அப்படியே அப்பா சொன்ன வார்த்தைகளும் மனதுக்குள் மத்தாப்புகளை தெளித்துவிட்டு போனது.

ஆம் வெறும் நிலம் மட்டும் வாங்கி அதனை என் விருப்ப படி கட்டி போகும் சாதரண வீடு அல்ல.. புங்கை,வேம்பு,முல்லை,இட வல திண்ணை,மண் தரை, தென்னங் கீற்றுமாய் குளிர்ச்சியாய்த்தானிருந்தது என் சின்னஞ்சிறு வயதுவிடு.காலம் மாற எனது வீடும் உருமாறியது.வீட்டிற்கு வெளிய சாலை போடுகையில் நான் ஊஞ்சலாடிய எங்கள் புங்கை போய் என்வீட்டிற்குள்ளே சிமெண்ட் தரை எட்டிபார்க்கையில் சாணி பூசிய என் அம்மாவின் கைகளுக்கு விடுதலை.என் கடைசி அக்காவோ விதவிதமான கோலத்துடன் சின்னஞ்சிறு தெருவையே வாசல் முற்றமாக்கினாள். அண்ணாவின் தயவினால் ,பிறகு சிறிது சிறிதாய் உருமாறினாலும் என் கனவு என்னுடனே வளர்ந்து கொண்டுதானிருந்தது. நாம சம்பாதித்து இந்த வீட்ட கட்டனும்,அப்பா,அம்மா அதுல சந்தோசமா அவர்களுடைய காலத்த கழிக்கனும் அவங்களுக்கு பிடித்த மாதிரினு என் ஆசைமனதுக்குள் இருந்து கொண்டுதானிருந்தது.இதோ இப்போது,இன்னும் உருமாறி புது பொலிவுடன் சந்தோசம் தருகிறது என் பழைய புதியவீடு.என்ன கொஞ்சம் தாமதாமா பண்ணிட்டேனோனு தோனுது.

18,குமரன் திருநகர் திண்டுக்கல்-5
வாசித்து பார்த்தால் முகவரிதான்
வசிக்க போகும் எனக்கோ
என் முகமும்-அரியும் நீதான்.


சேதபடுத்தினாலும்
சிரித்து சந்தோசம் தர
உன்னால் மட்டுமே முடியும்


உன்னால் மட்டும் எப்படி
இத்துனை ஆண்டானாலும்
அதே வாஞ்சனையுடன்
என்னை தழுவ முடிகிறது
ஓ, என் அம்மா கரம் பட்டு
நீயும் கத்துக் கொண்டாயோ...

நான் விட்டுப் போவதற்கு நீ சுவடு அல்ல
என் சந்ததியினை சொல்லும்
வரலாறு நீ...

நன்றி என் இல்லமே
உன் வரலாற்றின் ஒரு பக்கத்தில்
எனையும் இருத்தியமைக்கு...

நீ இன்று போல் என்றும்
வசந்தம் வீசு,
அன்பு காண்பி,
கருணை காட்டு,
இன்னும் புதியதாய் பலவும்
என் வரும் சந்ததிக்கும் ...

அப்பா,அம்மா பெருமை அடைந்தார்கள்.அக்கா-மாமா,அண்ணா -அண்ணி,குட்டிக் குழந்தைகள் சந்தோசமுற்றனர். நான் இங்கே இருந்துகொண்டு என் வலைப் பக்கத்தில் எழுதிப் பார்த்து சின்னதாய் ஆனந்தம் அடைகிறேன்.


"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேனி
பிள்ளைகள் பேனி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவது இல்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவது இல்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும்
விளங்க இடைவிடாது மனம் உருகி
மகிழ்ச்சியில் திளைத்திட...."

ஆசைகளாலும், கனவுகளாலும் ,மகிழ்சியாலும் நிரம்பி எனது வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது என் ஆசை விடு . காத்து இருக்கிறேன் நானும்...

26 comments:

ஜி said...

வாழ்த்துக்கள் மணி....

காலம் கடக்கும்போது
உடல் தளர்ந்தாலும்
கனவு மட்டும் கனமாகிக்
கொண்டே இருக்கிறது....

மெய்ப்படும் போது....

மகிழ்ச்சி...

கோபிநாத் said...

அன்பு மணி...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடன் நானும் உங்கள் வசந்த மாளிகையை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

நீங்கள் கண்ட கனவு இப்போது என்னிடமும் வந்து விட்டது.

கோபிநாத் said...

கவிதையும் அருமை மணி..

அப்புறம் வீட்டுக்கு பேரு என்ன?? மணி விலாஸ் ஆ

கோபிநாத் said...

சரி..சரி....அப்புறம் என்னப்பா.....அதான் பையன் வீட்டை கட்டிப்புட்டான் இல்ல. கையோட கையா அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிருங்க..என்ன நான் சொல்லறது சரிதானுங்களே....

மணி ப்ரகாஷ் said...

நன்றி ஜி. ஆமாம் கனவு மெய்பட்டால் சந்தோசம்தான்..

மணி ப்ரகாஷ் said...

//மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடன் நானும் உங்கள் வசந்த மாளிகையை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.//


கட்டாயம் வாருங்கள் கோபி. எப்போது வேண்டுமானாலும்..

//வசந்த மாளிகையை//

வசந்த மாளிகை? .. :)

நீங்கள் கண்ட கனவு இப்போது என்னிடமும் வந்து விட்டது.

சீக்கிரம் பலிக்கட்டும் உங்கள் கனவு..

மணி ப்ரகாஷ் said...

//
அப்புறம் வீட்டுக்கு பேரு என்ன?? மணி விலாஸ் ஆ//

இல்ல கோபி. பேரு எல்லாம் வைக்கல.

மு.கார்த்திகேயன் said...

அருமையான நினைவலைகள் மணி..

இதெல்லாம் நாங்கள் வீடு கட்டியபோது ஏற்பட்ட உணர்ச்சிகள் மறுபடியும் தருகிறது..

வாழ்த்துக்கள் மணி, புது வீடு கிரகபிரவேசத்திற்கு

மணி ப்ரகாஷ் said...

//வாழ்த்துக்கள் மணி, புது வீடு கிரகபிரவேசத்திற்கு
//

நன்றி தல..

இங்கயும் முந்திட்டியா நீ.. எல்லாம் மண் வாசனைப்பா....

Arunkumar said...

அப்பா, கடசிய கமெண்ட்ஸ் எனேபில் பண்ணிட்டீங்க போல :-)

வாழ்த்துக்கள் மணி.

வழக்கம் போல ரொம்ப கவிதையா எழுதியிருக்கீங்க... ரசிச்சேன் மணி

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, நிச்சயம் உங்கள் சாதனை போற்றுதலுக்கு உரியது, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அந்த வீட்டில் நீங்கள் கழிக்கப் போகும் நிமிஷங்களும், மணித்துளிகளும் மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கட்டும். இது தான் இந்த மண்ணின் பெருமை. இதை நம்மால் விடவே முடியாது, விடவும் கூடாது. என்ன சொல்றதுன்னே புரியலை.

Syam said...

வாழ்த்துக்கள் மணி....அருமையா எழுதி இருக்கீங்க கடந்த கால நினைவுகள...கனவு மெய்படும் போது அந்த சந்தோசத்த வர்ணிக்க வார்த்தைகள் இல்ல.....உங்கள் குடும்பத்தார்க்கும் வாழ்த்துகள சொல்லிடுங்க....:-)

Syam said...

நான் தான் பர்ஸ்டு...ஏன்னா நீங்க போஸ்ட் போட்ட உடனே நான் தான் படிச்சேன்...ஆனா அப்போ கமெண்ட் போட முடியல...இப்பவும் மனசு கேக்காம உங்க பழைய போஸ்ட்லயாவது போய் வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன் :-)

Syam said...

குமரன் தெரு எங்க இருக்கு...நான் +1 அங்க சோலை நாடார்ல ஒரு வாரம்,st.marry's ஒரு வாரம் படிச்சேன்...அப்புறம் கிளம்பிட்டேன்...:-)

ambi said...

//நாம சம்பாதித்து இந்த வீட்ட கட்டனும்,அப்பா,அம்மா அதுல சந்தோசமா அவர்களுடைய காலத்த கழிக்கனும் அவங்களுக்கு பிடித்த மாதிரினு என் ஆசைமனதுக்குள் இருந்து கொண்டுதானிருந்தது.இதோ இப்போது,இன்னும் உருமாறி புது பொலிவுடன் சந்தோசம் தருகிறது //

well said. வாழ்த்துக்கள் மணி....

//பையன் வீட்டை கட்டிப்புட்டான் இல்ல. கையோட கையா அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிருங்க..என்ன நான் சொல்லறது சரிதானுங்களே....
//
yes your honor! :)

கீதா சாம்பசிவம் said...

mmmmஇன்னும் பார்க்கலை போல் இருக்கு என்னோட பின்னூட்டத்தை, வேலை அதிகமோ? சரி, நாளை வந்து பார்க்கிறேன்.

Syam said...

என்னோட மத்த கமெண்ட்ஸ் எங்கங்க மணி :-)

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் சொல்லிய அனைவருக்கும்

என் நன்றி. தனியாய் நாளை பின்னுட்டம் இடுகிறேன்

தொடர் கவித எடுத்து ஒடுனேன்.

. டயர்டாய் போச்சு...

சோ டுமாரோ...

முதல்வரே கண்டிப்பா நாளைக்கு..தூக்கம் வருது,,,,,,,,,,,,,,

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் சொல்லிய அனைவருக்கும்

என் நன்றி. தனியாய் நாளை பின்னுட்டம் இடுகிறேன்

தொடர் கவித எடுத்து ஒடுனேன்.

. டயர்டாய் போச்சு...

சோ டுமாரோ...

முதல்வரே கண்டிப்பா நாளைக்கு..தூக்கம் வருது,,,,,,,,,,,,,,

மணி ப்ரகாஷ் said...

//ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, நிச்சயம் உங்கள் சாதனை போற்றுதலுக்கு உரியது, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். //

முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும்.. வேலை அதிகம்னு சொல்லலாம் .அதைவிட டயர்டு அதிகமாயிடுச்சு..

ரொம்ம ரொம்ப நன்றி மேடம்.


//அந்த வீட்டில் நீங்கள் கழிக்கப் போகும் நிமிஷங்களும், மணித்துளிகளும் மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கட்டும்.//

உங்களின் அசிர்வாதமும்,உங்களின் வாழ்த்துகளும் என்னை இன்னமும் உயர்த்தும் .

// இது தான் இந்த மண்ணின் பெருமை. இதை நம்மால் விடவே முடியாது, விடவும் கூடாது. என்ன சொல்றதுன்னே புரியலை//

யெஸ்.உண்மையான உண்மை..

மணி ப்ரகாஷ் said...

//மணி....அருமையா எழுதி இருக்கீங்க கடந்த கால நினைவுகள...கனவு மெய்படும் போது அந்த சந்தோசத்த வர்ணிக்க வார்த்தைகள் இல்ல.....உங்கள் குடும்பத்தார்க்கும் வாழ்த்துகள சொல்லிடுங்க....:-) //

நன்றி முதல்வரே. கண்டிப்பா சொல்லிடுரேன்..

மணி ப்ரகாஷ் said...

//நான் தான் பர்ஸ்டு...ஏன்னா நீங்க போஸ்ட் போட்ட உடனே நான் தான் படிச்சேன்...ஆனா அப்போ கமெண்ட் போட முடியல...இப்பவும் மனசு கேக்காம உங்க பழைய போஸ்ட்லயாவது போய் வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன் :-) //

நீங்கதான் முதல்வர் ஆச்சே. ஆமா கமெண்ட் எனெபில் செய்யல.. (உள்ளாட்சித் துறை) உள்ஸ் சின் கட்டளைப் படி தான் திற்ந்தேன்..

நீங்க தான் முதல்வர்..

மணி ப்ரகாஷ் said...

/குமரன் தெரு எங்க இருக்கு...நான் +1 அங்க சோலை நாடார்ல ஒரு வாரம்,st.marry's ஒரு வாரம் படிச்சேன்...அப்புறம் கிளம்பிட்டேன்...:-) //

சோலை நாடாரா? நானும் அங்க தான் 6ஆப்புல இருந்து 12ஆப்பு வரைக்கும் படிச்சேன்..சீ சீ ஆப்பு வாங்கினேன்..

ஸ்கூலுக்கு பின்னாடி அண்ணா நகர் அதுக்கும் பின்னாடி வந்தீங்கன குமரன் திரு நகர் தான்..

இன்னும் கரேக்டா சொல்லனும்னா

ஆர்த்தியேட்டரிலிருந்து நாகா-லஷ்மி தியேட்டருக்கு போற வழி...


//சோலை நாடார்ல ஒரு வாரம்,st.marry's ஒரு வாரம் படிச்சேன்...///

ஏன் நாட்டாமை 1வாரம்.? பொன்னுங்களே இல்லைனு ஓடி போயிட்டிங்களா...

மணி ப்ரகாஷ் said...

//well said. வாழ்த்துக்கள் மணி//

danks.danks.

//yes your honor! :) //

இதை நான் எதிர்கிறேன் யுவர் ஆனர்.

எனது கட்சிகாராரகிய நான் இன்னும் பல விசயங்களை அறிய வேண்டியதுள்ளதால் இப்போதைக்கு கிடையாது யுவர் ஆனர்..

மணி ப்ரகாஷ் said...

//என்னோட பின்னூட்டத்தை, வேலை அதிகமோ? சரி, நாளை வந்து பார்க்கிறேன்.//

ஆமாம் மேடம்.பதில் அளித்துவிட்டேன்.

மணி ப்ரகாஷ் said...

//என்னோட மத்த கமெண்ட்ஸ் எங்கங்க மணி :-)//

நாட்டாமை தூக்கத்தில உங்களது ஒரே ஒரு கமெண்ட மட்டும் மயிலில் பார்த்தேனா. அதான் ..

பன்னிட்டேன்.

நீங்க எல்லா கமேண்டுக்கும் ஸ்மைலி போட்டு இருக்கீங்க..

அதான் இங்க மொத்தமா ஸ்மைலி

:):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)