Monday, February 05, 2007

தலைவியின் புகழ் பாடி

200 பதிவு கண்ட தலைவியின் புகழ் பாடி ஒரு தொண்டனின் குரல்.

கி.பி. 2005,நவம்பர் திங்கள் 5ஆம் நாள் இந்த வலையுலகிற்கு அடியெடுத்து வைத்து, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தமிழ் தொண்டாற்றி வரும் எங்களின் தலைவி(வலி), எண்ணங்களின் அரசி, தானே தலைவி(தலைவி என்று தானே கூறிக்கொள்ளுவதால், இன்று முதல் தானைத்தலைவி இனி தானே தலைவி) கீதா சாம்பசிவம் அம்மா அவர்கள் (அது என்ன உங்களுக்கும் பச்சைகலர் பிடிச்சுருக்கு) 200 பதிவுகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார்கள். அவர்களது கரங்களுக்கு தங்கப் பேனா பரிசு அளிக்கலாம் என்று தான் எண்ணினேன். ஆனா தலைவி இப்ப எல்லாம் தங்கமும் பிடிப்பது இல்லை,பேனாவும் பிடிப்பது(கையில) இல்லை என்று கூறியதால் தலைவிக்காக , இந்த "இருக்கு ஆனா இல்லை கீ போர்டை "(Bluetooth Laser Virtual Keyboard)

உங்களின் பொற்பாதங்களில்..சீ. உங்கள் பொற்கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இனி உங்களின் கரம் பட்டு இந்த கீ போர்டு புனிதம் அடையட்டும்.இனி உங்கள் பதிவை மட்டுமா தேடப்போறீங்க..இந்த கீபோர்டையும் சேர்த்து தேடி முடிந்தால் பதிவுகளை இட்டு எங்கள் head letter ஐ நீங்கள் கேள்விகுறி ஆக்கலாம். அப்புறம் கட் அவுட் வைக்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் நாள் எஸ்கேப் ஆகலாம் என்று நினைத்து தலைவியிடம் சொன்னால் தலைவி அப்ப அப்ப போஸ்ட போட்டு எங்கடா கட்-அவுட்னு மிரட்டல் வேற பன்ன ஆரம்பிச்சுட்டாங்க.. சரினு கட்-அவுட் வைக்கலாம்னு முயற்சி பன்னினா இங்க சின்சினாட்டில இருக்குற மக்களுக்கு கட்-அவுட் கலாசாரம்னா என்னனு தெரியவில்லை. ஒரு பாலாபிசேகம் பண்ண முடியல. சே என்னடா உலகம் இது என்று மனம் வெதும்பி, இந்த கலாசாரம் தெரியாத இடத்தில் வைத்து என்ன புண்ணியம் என்று நினைத்து, கட்-அவுட் கலாசாரம் புரிந்த சிங்கார சென்னையிலோ அல்லது தலைவியினை நமக்கு அளித்த மதுரை மாநகரிலோ வைக்கலாம் என்று முடிவு பண்ணி கட் அவுட் பணியினை தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளேன். இப்போதைக்கு எதோ இந்த தொண்டனால் விடாது பனிமழையிலும் அடாது தலைவியின் புகழ் பரப்ப எனது கரங்களலால் இந்த MS-PAINT பேனரை

பனிமலைக்கு பக்கத்தில் நட்டுவிட்டு வந்துள்ளேன்...தலைவி வாழ்க..அவரது தமிழ்த் தொண்டு வாழ்க வாழ்க..

ஓகே. ஓகே, தலைவிக்கு ரொம்ப புகழ் பிடிக்காது..அதனால் புகழ்ந்தது போதும் என்று இத்துடன் நிறுத்தி கொண்டு விசயத்திற்கு வருகிறேன்..

உங்களின் பக்கங்களை சில மாதங்களுக்கு முன்னால்தான் வாசிக்க ஆரம்பித்தேன். 200 பதிவுகள் முழுவதும் படித்தது இல்லை(அப்பாட நீ தப்பிச்சனு நாட்டாமை சொல்வது காதுல கேட்குது) ஆனால் படித்த சிலதில் தெரியாத பல கண்டு ,உங்களின் எழுத்தின் ரசிகனாய் ,படித்து சந்தோசபடும் ஒருவனாய் இந்த சில காலங்களில் மாறிவிட்டேன்...

மனதின் வெளிப்பாடுகளாய்
தெளித்து விட்ட உங்களின்
எண்ணங்கள்
காலத்தின் குறியீடுகளாய்
நுற்றாண்டுகளுக்கு அப்பாலும்!!!


இன்னும் நிறைய எழுதுங்கள், வாசிக்க காத்து இருக்கிறோம் இக்காலத்தில் நானும்,
இன்னுமொரு காலத்தில் யாரொ ஒருவனும்..

வலைப்பக்கம்:
எண்ணங்கள்

24 comments:

Mathuraiampathi said...

தங்க தலைவிக்கு உங்களுடன் சேர்ந்து நானும் ஒரு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.....

அத்துடன், பெங்களூர் கட் அவுட் எல்லாம் காவிரி பிரச்சனை தீரும்வரையில் பாதுகாக்க ஸ்பெஸல் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....

கீதா சாம்பசிவம் said...

என்னோட புகழ் பாடினாலும் பாடினீங்க, வழக்கமா வந்து துப்பிட்டுப் போறவங்க கூட வரலை போல் இருக்கு! :D இன்னிக்கு எனக்கு நானே புகழ் பாடினதை மெச்சிக்கணும் போல் இருக்கு, எல்லாம் HEAD LETTER, :D அப்புறம்., ஹிஹிஹி, கட்-அவுட் இப்போ அவுட் ஆஃப் ஃபாஷன் ஆகிப் போச்சு, விளம்பர பானர்தான் ஃபாஷன். அதனாலே விளம்பர பானரே வச்சுடுங்க. தவிர, எனக்குத் தான் புகழேஏஏஏஏஏஏஏஏஎ பிடிக்காதேஏஏஏஏஏஏஏஏ! அப்பாடா, ஒரு தொண்டர் செலவிலே ட்ரீட், ஒருத்தர் செலவிலே விளம்பரம். நல்லாவே இருக்கு தலைவியா இருக்கிறது. கொஞ்சம் பெரிய பின்னூட்டமாப் போச்சோ? :D

மு.கார்த்திகேயன் said...

தலைவிக்கு இப்படி ஒரு பாராட்டு பதிவா.. முந்திகிட்டியே மணி.. இருந்தாலும் நானும் போடுவேன்

ஜி said...

என்னங்கப்பா நடக்குது இங்க... எங்க பாத்தாலும் பேனரும் போஸ்டரும் இருக்குது... அவ்வளவு பெரிய தலைவியா?

பதிவுலகுக்கு புதுசா வந்ததுனால எனக்கு தெரியாம போயிடுச்சே....

நானும் ஒரு கோஷம் போட்டுக்கிறேன்..

தானையத் தலைவி வாழ்க வாழ்க!!

வாழ்த்துக்கள சொல்லிடுங்க...

ramya said...

hey unga thanga thalaivikku, en saarbagavum paaratugalai therivithu kolgiren mani ...

avangala pathi therinjuka indha post onney podum pola...

Syam said...

மணி தலைவிக்கு பாராட்து தெரிவித்து இங்க ஒரு மாநாடு போட்டு கட் அவுட் வெச்சு உங்க பாசத்த காட்டிட்டீங்க :-)

Syam said...

பணி மலைனு சொன்னீங்க ஆனா கட்-அவுட் பாலைவனத்துல இருக்க மாதிரி இருக்கு...வேற எங்கயும் வைக்க யாரும் விடலயா :-)

கோபிநாத் said...

மணி..
உங்களுடன் சேர்ந்து தலைவியை மீண்டும், மீண்டும், மீண்டும் என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்...

SKM said...

@Geetha Maami:
//ஹிஹிஹி, கட்-அவுட் இப்போ அவுட் ஆஃப் ஃபாஷன் ஆகிப் போச்சு, விளம்பர பானர் தான் ஃபாஷன். அதனாலே விளம்பர பானரே வச்சுடுங்க. தவிர, எனக்குத் தான் புகழேஏஏஏஏஏஏஏஏஎ பிடிக்காதேஏஏஏஏஏஏஏஏ! அப்பாடா, ஒரு தொண்டர் செலவிலே ட்ரீட், ஒருத்தர் செலவிலே விளம்பரம். நல்லாவே இருக்கு தலைவியா இருக்கிறது. கொஞ்சம் பெரிய பின்னூட்டமாப் போச்சோ? :D //

idhula ungalai thorkadikka yaralum mudiyadhu.ROFL!

SKM said...

WOW! Maamiku thonadar padai yevalo mariyadhai pannrangapa. Sandhosham.
ungaludan serndhu nangalum avargalai vazthugirom.Avanga Thalaivali illama enakku yellam pozhudhae poga mattengudhu.

மணி ப்ரகாஷ் said...

@ மதுரையம்பதி

வாழ்த்துகளுக்கு நன்றி.உங்கள் வலைப்பக்கத்திற்கு வர முடியவில்லையே. செக்யூரிட்டி பலமாய் இருக்கிறெதே...

@ தலைவி,

விளம்பர பானர் எப்படி இருந்ததுனு சொல்லவே இல்லையே. தொண்டனாய் ஏக்கம்தான்..
/கொஞ்சம் பெரிய பின்னூட்டமாப் போச்சோ? :D
//
சே சே. அப்படி நாங்க எல்லாம் உங்க முன்னாடி சொல்லுவோமா.. நீங்க போனதுக்கு அப்புறம் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் அதை ஆழந்து விசாரித்துதுதுது... ஒகே.ஒகே. நான் எதுவும் இனி சொல்லல..

மணி ப்ரகாஷ் said...

@ kaarthi..

//முந்திகிட்டியே மணி.. இருந்தாலும் நானும் போடுவேன் //

கார்த்தி வேற ஒன்னும் இல்லப்ப எல்லாம் பதவி ஆசைதான்ன்ன்

மணி ப்ரகாஷ் said...

@ ஜி

//எங்க பாத்தாலும் பேனரும் போஸ்டரும் இருக்குது... அவ்வளவு பெரிய தலைவியா?
//

என்ன ஜி இப்படி கேட்டு புட்டீங்க. அவங்க எவ்வளவு பெரிய தலைவினு நான் எப்படி சொல்றது..
ம் ம்ம், எடுத்துகாட்டாய் சில :
அவங்க நடந்தா ஊர்வலம்
பேசுனா பொதுக்கூட்டம்
"அ" னு எழுதனா ஒரு காவியம்
அப்படினு இன்னும் எவ்வளவோ இருக்கு...


@ தலைவி நீங்க சொல்லிகுடுத்த மாதிரியே சொல்லிட்டேனா. இல்ல எதாவது விட்டு போய்டுச்சா

மணி ப்ரகாஷ் said...

@ ரம்யா,

//hey unga thanga thalaivikku, en saarbagavum paaratugalai therivithu kolgiren mani ...

avangala pathi therinjuka indha post onney podum pola...//

ம்ம் தலைவியின் புகழ் படித்து வாழ்த்து சொல்லியதற்காக நன்றி.நன்றி.நன்றி..

அப்புறம் என்னோட முந்தைய பதிவ படிக்க வரேனு சொல்லிட்டு இன்னும் வரல......

மணி ப்ரகாஷ் said...

@ Dr.நாட்டாமை,

//பாலைவனத்துல இருக்க மாதிரி இருக்கு...வேற எங்கயும் வைக்க யாரும் விடலயா :-)
//

இப்படி எல்லாத்துக்கு முன்னாடி கேட்டுபுட்டீங்களே..

ம்ம் இல்ல நாட்டாமை தலைவியின் புகழ் இங்க இருக்கிற எல்லாத்துக்கும் தெரியறதுனால தெரியாத இடத்த தேடி கண்டுபிடிச்சு எல்லா ஜீவ ராசிகளும் தெரிஞ்சுக்கதான் அங்க வைச்சேன்..


தலைவி வாழ்க,தலைவி வாழ்க...


அப்பாடி எஸ்கேப்..

மணி ப்ரகாஷ் said...

@கோபி,

//உங்களுடன் சேர்ந்து தலைவியை மீண்டும், மீண்டும், மீண்டும் என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்//

வாழ்த்துகளுக்கு தலைவியின் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் நன்றிகள்

தி. ரா. ச.(T.R.C.) said...

அப்பா மணி தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மேடம் கட்சிலே பதவி உனக்கு கிடைக்காது.அங்கே தலைவி தொண்டன் எல்லாமே அவுங்கதான்.

குறுகியகாலத்தில் 200 பதிவு என்பது அரிய சாதனை வாழ்த்துக்கள்.தலைவி தான்
அதை கொண்டாட சூறவளி சுற்றுப் பயனம் போயிட்டாங்களே

மணி ப்ரகாஷ் said...

வணக்கம் தி.ரா.ச சார்.

முதல் முறையா வந்து இருக்கீங்க.. அதற்கு முதலில் இந்தாருங்கள் சொம்பு நிறைய தண்ணி, இதோ காபி வருகிறது பின்னால்...

மணி ப்ரகாஷ் said...

//அப்பா மணி தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மேடம் கட்சிலே பதவி உனக்கு கிடைக்காது.அங்கே தலைவி தொண்டன் எல்லாமே அவுங்கதான்.

//

ஆகா இத தெரியாமா நான் வேற சொந்த காசுல பானர் எல்லாம் வைச்சு, கூட்டத்த கூட்டி... சே.. எல்லாம் வெட்டியா போயிடுமா....?

கட்சியில பதவி கிடைக்காதா?

சார் ,நீங்க முன்னமே வந்து அறிவுறுத்தியிருக்க கூடாதா...

:(

மாற்றுவழி தேடுகிறேன்...


ஆனாலும் தலைவியின் சூறாவளி பயணத்துக்கு வாழ்த்து சொல்லலாமா இல்லை வேண்டாமா?????????

Syam said...

மணி அது எல்லாம் போக மறுபடியும் ஒரு கமெண்ட் போட்டனே அது எங்க கானோம் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

மணி ஆயிரம் சொன்னாலும் தலவி தலவி தான்.கலிகால மார்கண்டயணி
இத்தனை சின்ன வயசிலே 200 பதிவுன்னா நிச்சியம் பேனட் வைக்கனும்.செலவு முழுவதும் கொடுதுடுவாங்க கவலைப் படாதீங்க

மணி ப்ரகாஷ் said...

//மணி அது எல்லாம் போக மறுபடியும் ஒரு கமெண்ட் போட்டனே அது எங்க கானோம் //


nattamai, varaliye.. thedi parthen kanomm.. :(

enakku erkanave coment commiyee..ithula nan podama iruppena..

மணி ப்ரகாஷ் said...

//செலவு முழுவதும் கொடுதுடுவாங்க கவலைப் படாதீங்க
//

appada..ippathan nimmathiya irukken.

thalaviku periya manasu..avanga anthntha country currency yave kuduthuduvanga....

ok i m preparing the expenses sheet.

கீதா சாம்பசிவம் said...

இது என்ன நான் அந்தப் பக்கம் போனதும் ஒரு பெரிய சூழ்ச்சியே நடந்திருக்கு தி.ரா.ச. சார் தலைமயா அதுக்கு? அதெல்லாம் ஒரு பைசா கிடைக்காது. எல்லாம் சொந்தச் செலவிலே தான் வைக்கணும். அதான் சொல்லாமல் கொள்ளாமல் வந்து வந்து பார்த்துட்டுப் போவேன், நீங்க புதுசு,. ஏமாத்தறாங்க!!!! :D