Tuesday, February 13, 2007

காதல் செய் பிறைக்காலம் முழுமையும்..,


நான் நிலாப்பெண்
நீ பூமியின் பையன்..

நான் உன் பெண்
நீ எந்தன் ஆண்

நான் உன் காதலி
நீ எந்தன் காதலன்.

ஊரே எனைப் பார்க்கையில்
நானோ உனைத் தேடிப் பிடித்து,
சிறுகச் சிறுக காண்பித்து, வெட்கமுற்று,
இரண்டாம்பிறை, மூன்றாம்பிறையென
என் காதலின் நிலை உணர்த்துகிறேன்.
ஆனால், நீயோ பார்க்க மறுத்து
தூங்கிப் பொழுதை கழிக்கிறாய்...

எனக்கு தெரிந்த காதல்
உனக்கு தெரியாமற் போனதெப்படி?

ஆம் நான் இயற்கைப் பெண்,
இயற்கை பெற்றெடுத்தவன்தானே நீ
உனக்கு எப்படி தெரியும் என் காதல்?

எனது வாழ்க்கை அர்த்தமுற
உனது காதல் வேண்டும் எனக்கு ,
பூமிப் பந்தினை எட்டி உதைக்கும் வீரனாய் மாற
எனது காதல் வேண்டும் உனக்கு
ஆதலால் காதல் செய்...

நான் இப்போது தேய்கிறேன்
அமாவாசையாய் என் வெறுமை தெரியும்.
நான் இல்லாது இருத்தல் என் நிலை உணர்த்தும்
என் காதல் உணர்வாய்
நீ சாக ஆரம்பிப்பாய்...

உனை உயிர்ப்பிக்க
மீண்டும் வருவேன்
பெளர்ணமியாய்
என் முழுமை உணர்த்துவேன்
காதலாய் கசிந்துருக என்னவனாய் தயராய் இரு ...
எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்
அன்பெனும் மைகொண்டு நான் ...

நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதாலால் நீ எனைக் காதல் செய்

மீண்டும் மீண்டும் தேய்ந்து,வளர்ந்து
நான் இன்னமும் அதிகமாய் உன்னில் காதலுறுவேன்
உனக்கு காதல்நிலை உணர்த்துவேன்
என் வாழ்நாள் முழுமையும்...

ஆம் நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதலால் நீ எனைக் காதல் செய்
பிறைக் காலம் முழுமையும்...

28 comments:

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், இவ்வளவு நல்ல கவிதையை யாருமே ரசிக்கலையா? ரசனை இல்லாதவங்களோ? அப்படியும் தெரியலை! போகட்டும், வாழ்த்துக்கள், உங்களுக்கும் கவிதைக்கும். போட்டிக்கும் அனுப்பலாமே?

Arunkumar said...

kavithai super.

Happy V'Day wishes to everyone :)

//
எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்
அன்பெனும் மைகொண்டு நான் ...
//

Ultimate Mani. Really liked the flow. Kalakkals of Cincinnati :)

ஜி said...

கவிதை அருமையா இருக்குது...
ஆனா கொஞ்சம் புரியல...

நிலவு மனிதனிடம் காதலை எதிர்பார்க்கிறதா?
வித்தியாசமான கற்பனையாதான் இருக்குது...

ஜி said...

மாதவன் பாட்டில் மணி மாதிரி, உங்கள எல்லாரும் காலெண்டர் மணின்னுதான் கூப்டுறாங்களாமே!!!!
உண்மையா?

ஜி said...

அப்புறம் காதலர் தின வாழ்த்துக்கள்...

ஏதாவது ஸ்பெசலா.. இல்ல இப்பத்தான் வலைய பிண்ணிக்கிட்டு இருக்கீங்களா? ;)))

Priya said...

அருமை மணி. என் standard க்கு ரொம்ப அதிகம். 2,3 தடவை படிக்க வேண்டியதாயிடுச்சு (jetlag வேற இன்னும் போகல).

மணி ப்ரகாஷ் said...

சூறாவளிப்பயணம் சென்று வந்த தலைவி அவர்களே வருக.வருக..

(இனி கட் அவுட் வைக்கும்போது என்னய ஒருவார்த்த கேட்டுவிட்டு வைடானு T.R.C சார் சொல்லியதால்.
சார் கட் அவுட் வைக்கலாமா?)

//இவ்வளவு நல்ல கவிதையை யாருமே ரசிக்கலையா//

தொண்டனின் பெருமை உங்களுக்குத்தான் தெரிகிறது.. மற்றவர்கள் எல்லாம் ரோசாவினை வாங்கி,குடுத்து கலைப்பு அடைந்து விட்டார்களோ??

//வாழ்த்துக்கள், உங்களுக்கும் கவிதைக்கும். //


நன்றி தலைவி அவர்களே,..


//போட்டிக்கும் அனுப்பலாமே?
//

அனுப்பினேன்.. ஆனால் விதிமுறைகளுக்குள் வரவில்லை எனது கவிதை.. :(

அப்புறம் வரைகளுக்குள் எனக்கு எழுத தெரியாதனால் என்னால் பங்கு பெற முடியவில்லை.

மணி ப்ரகாஷ் said...

//Ultimate Mani. Really liked the flow. Kalakkals of Cincinnati ..//
.

நன்றி அருண்
வாப்பா கிளிவ் லேண்டின் காதல் இளவரசா

என்னவாயிற்று உன் மீது எறியபட்ட
காதல் பார்வைகள்.

மணி ப்ரகாஷ் said...

//கவிதை அருமையா இருக்குது...
ஆனா கொஞ்சம் புரியல//

என்ன ஜி, புரியாவிட்டால் தானே கவிதை..

/நிலவு மனிதனிடம் காதலை எதிர்பார்க்கிறதா?
வித்தியாசமான கற்பனையாதான் இருக்குது... //

ஆம் ஜி. நாட் மனிதன்.. மணியிடம்


நாம் பூ கொடுக்க மாட்டோம். நமக்குதான் பூ குடுக்க வேண்டும்..

என்ன கொஞ்சம் ஓவரா இருக்கா..

வேற என்ன பன்றது நம்ம குடுக்கிறததான் யாரும் வாங்க மாட்டேன்கிறாங்களே அதுனாலாதான்...

மணி ப்ரகாஷ் said...

//மாதவன் பாட்டில் மணி மாதிரி, உங்கள எல்லாரும் காலெண்டர் மணின்னுதான் கூப்டுறாங்களாமே!!!!
உண்மையா//

ஆமாம் ஜி

காலண்டரும் காதலி கைகாட்டுதலும்
------------------------------

இராகு,கால,எமகண்ட நேரம்
எல்லாம் நல்ல நேரமாகிப் போனது
என்னவளில் கைகாட்டுதலில்...


ஆமாம் என்ன ஆயிற்று நம் காலண்டர் பிஸினஸ்??

மணி ப்ரகாஷ் said...

//அருமை மணி. என் standard க்கு ரொம்ப அதிகம். 2,3 தடவை படிக்க வேண்டியதாயிடுச்சு (jetlag வேற இன்னும் போகல).//

அய்ய்ய்ய்ய்ய்யா. என் கிறுக்கல்கள் அதிகமாய் வாசிக்கப் படுகிறதே...

எத்தன பேர் வாசிக்கிறாங்கனு முக்கியமில்ல

எத்தன முறை வாசிக்கபடுகிறது என்பதுதான் முக்கியம்...

தாங்க்ஸ்..

அப்புறம் பயணம் வெற்றினு கேள்வி பட்டேன்.

நான் வாழ்த்திய வாழ்த்து பலிச்சுடுச்சு போல(ஊருக்கு போறேனே ல சொன்னது)

//btw, அப்படியே செட் ஆக போகப்போற ஆள நான் கேட்டேனு சொல்லி உங்க பேச்சுகளை ஆரம்பீங்ககககக....

சுப மங்களம் உண்டாகட்டும்//

வாழ்த்துகள்..


வாழ்க்கை இனிதாய்
சந்தோசமாய்..
என்றும்

veda said...

காலண்டர் கவிஞரே கலக்கிட்டீங்க:)

/நான் இல்லாது இருத்தல் என் நிலை உணர்த்தும்/

/எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்அன்பெனும் மைகொண்டு நான் .../

இவை நான் மிகவும் ரசித்த வரிகள் ப்ரகாஷ்:)

ambi said...

//எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்
அன்பெனும் மைகொண்டு நான் ...
//
super lines....

//புரியாவிட்டால் தானே கவிதை..
//
appidiyaa? :p

en standardukum ithu konjam overu thaan. etho puriyuthu, but konjam velankalai! sari, freeya vudu!

மு.கார்த்திகேயன் said...

//
ஆம் நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதலால் நீ எனைக் காதல் செய்
பிறைக் காலம் முழுமையும்...//

அருமையான கவிதை மணி, காதலர் தினத்திற்கு..

நிலவை வைத்து எப்படி ஒரு பரிமாண காதல..ஹ்ம்ம்.. சும்மாவா சொன்னாங்க காதல் ஒருவனுக்கு கிரீடம் சூட்டும்னு

மணி ப்ரகாஷ் said...

@வேதா

//காலண்டர் கவிஞரே கலக்கிட்டீங்க:)//


நன்றிங்க..
இப்பதான் ஜி காலண்டர் மணினு எல்லாரும் சொல்றாருங்கனு சொன்னார்.நீங்க திரும்பவும் வந்து சொல்லி என்னய திரும்பவும் காலண்டர் பத்தி எழுத வைக்கிறீங்க.. சீக்கிரம் வருக்கிறேன் .. மீண்டும் காலண்டர் கவிதையுடன்

மணி ப்ரகாஷ் said...

ஆகா அம்பி என் பக்கத்திற்கு..

ம்ம்ம்

போன் பேசுதல், பஞ்சாப்பிடம் எஸ்கேப் ஆதல், வீடு தேடி பால் காய்ச்சி, வீட்டை அழகு படுத்த பொருள் வாங்குதல், ஆதாலால் வெள்ளி கிழமை இன்னமும் பிளாக் எழுதுதல்(இனிமேல் இது எதுக்குனுதான் தெரியல),அவ்வப்போது ஆணி பிடுங்குதல் என
என ஏகப்பட்ட வேலைகளுக்கு இடையில்

இங்கு வந்து வரம் கொடுத்த அம்பி அவர்களே வருக வருக..

அப்பா கண்ண கட்டிடுச்சு எனக்கே..

ஆமா அம்பி, கவித எல்லாம் எழுதி அனுப்பலயா..

Belated V.Day wishes to u and tangamani !!!

மணி ப்ரகாஷ் said...

///நிலவை வைத்து எப்படி ஒரு பரிமாண காதல..ஹ்ம்ம்.. சும்மாவா சொன்னாங்க காதல் ஒருவனுக்கு கிரீடம் சூட்டும்னு//

ஆமா கார்த்தி.. உண்மைதான்.. அப்புறம் நேற்று மீண்டும் உனது கவிதையினை கேட்டேன்..

மணி ப்ரகாஷ் said...

@ ஆல்


நிறைய பேர் கவிதை புரியவில்லை என்று சொன்னீர்கள்..

புரியும் படி எழுத இனி முயல்கிறேன்.
(தெரிஞ்சா நான் என்ன எழுத மாட்டேனா)

இந்த கவிதையின் கரு:

நம்மனாலதான் யாருக்கும் லவ் லெட்டரு குடுக்க முடியல. நமக்கும் யாரும் குடுக்கல.. எல்லாரும் காதலர் தினம் கொண்டாடுபோது நான் மட்டும் எவ்வாறு சும்மாய் இருப்பது..

அதனால் தான் .. இது


வளர்பிறை தேய்பிறை என எல்லா காலமும்(பிறைக் காலம் முழுமையும் காதல் செய் என ஆணையிட்டு, காதலிக்க அவளால் மட்டுமே முடியும்..)


என்னையும் காதலிக்க ஒரு பெண்.
என்னையையும் காதல் செய்யும் அவள் வேறு யாருமல்ல

தென்றலாய் எனைத்தழுவும் நிலாதான்...

சிம்பிளா சொல்லனும்னா நிலவு என் தேய்கிறது என்ற கேள்விக்கு விடையளிக்க முன் வந்தேன்.

காதல் எல்லாம் நமக்கு வராதுப்பா...

கோபிநாத் said...

அன்பு மணி..

அருமையான கவிதை

\\உனை உயிர்ப்பிக்க
மீண்டும் வருவேன்
பெளர்ணமியாய் என் முழுமை உணர்த்துவேன்
காதலாய் கசிந்துருக என்னவனாய் தயராய் இரு ...
எழுதபடாத புத்தகமாய் நம் வாழ்வியல்
உன் மேசைக்கருகில்அன்பெனும் மைகொண்டு நான் ...

நான் காதலுற பிறந்தவள்
நீ காதல் செய்ய பிறந்தவன்
ஆதாலால் நீ எனைக் காதல் செய்\\

இது கட்டளையா? இல்லை தண்டனையா?...எதுவாக இருந்தாலும் காதல் முன் எல்லாம் சுகமே...

Syam said...

அருமை அருமை...மணி என்னமா கவிதை எழுதறீங்க...சமையல்ல மட்டும் இல்ல நீங்க கவிதைலயும் சூர புலினு காட்டிட்டீங்க... :-)

Syam said...

ஆமா இது நிஜமாவே ஆகாயத்துல இருக்கற நிலாவா இல்ல S.J.சூர்யா படத்துல வர நிலாவா :-)

Syam said...

//உங்கள எல்லாரும் காலெண்டர் மணின்னுதான் கூப்டுறாங்களாமே!!!!//

LOL...ஜி நல்ல கொஸ்டின் :-)

david santos said...

Helo!
Very, very nice
Tank you

மணி ப்ரகாஷ் said...

//இது கட்டளையா? இல்லை தண்டனையா?...எதுவாக இருந்தாலும் காதல் முன் எல்லாம் சுகமே//

கோபி, நன்றி .

நமக்கு இப்படி கட்டளை போடுற பொண்ணுங்களதான் பிடிக்கும்...


அதுதான்./..

மணி ப்ரகாஷ் said...

நாட்டமை , எப்படி இருக்கீங்க..
இன்ன ஆளவே காணோம்... வேலை அதிகமா. இல்லை காதலர் தின அளுப்பா?

அப்புறம் வாழ்த்துகளுக்கு நன்றி

//அருமை அருமை...மணி என்னமா கவிதை எழுதறீங்க...சமையல்ல மட்டும் இல்ல நீங்க கவிதைலயும் சூர புலினு காட்டிட்டீங்க... //

சமையல்லா..நானா என்னங்க நாட்டாமை சொல்ரீக??

மணி ப்ரகாஷ் said...

//நிலாவா இல்ல S.J.சூர்யா படத்துல வர நிலாவா //

S.J.சூர்யா படத்துல வர நிலா எங்க இந்த மணிய தேடுது..

முகில் இல்லைனா முகிலோட அப்பதான் வேணுமாம்.. :((

மணி ப்ரகாஷ் said...

//Helo!
Very, very nice
Tank you //


யாருப்பா இது...?

கோபிநாத் said...

\\//Helo!
Very, very nice
Tank you //


யாருப்பா இது...?\\

மணி அதுதான் எனக்கும் தெரியல ஆனா ரொம்ப நல்லவரு....
எல்லா பதிவுலையும் இவர் பின்னூட்டம் பின்னுது...வாழ்க...