Sunday, February 18, 2007

கற்றது கடலளவு


தலைப்ப பார்த்துட்டு யாரவது கடல் கணேசன் கிட்ட போய் போட்டு குடுத்து எனக்குஅவர் ஆட்டோ அனுப்பற மாதிரி செஞ்சுடாதிங்க. மேட்டர படிச்சுட்டு எதுவா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வாங்க.
"கற்றது கடலளவு - கடைசி அத்தியாயம் 50 "
இப்படித்தான் கடல்கணேசனின் 50 வது பதிவில் தலைப்பு இடம் பெற்றிருந்தது. பார்த்ததும் அட தொடர் முடிஞ்சுபோயிடுச்சானு மனசுக்குள்ள ஒரு சின்ன ஏக்கம். ஆதனால் கற்றது கடல் அளவுனு நம்ம பக்கத்துல தலைப்ப போட்டுகிட்டு சின்னதா சந்தோசப் படுறதுல ஒரு சுகம் மற்றும்ஆனந்தம்தான்.இது ஒரு கடலளவின் முடிவுஅல்ல, ஒரு கடல்துளியின் முடிவுதான் என்று எனது மனதிற்குள் தோன்றியது. ஆம் இன்னும் சில புது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது இது ஒரு துளியின் முடிவுதான் . ஆனந்த விகடன் மூலமாய் கடல் கணேசன் தமிழகம் முழுவதும் அறிந்த ஒரு எழுத்தாளார். அவரின் எழுத்துகளை இதற்கு முன்னால் நான் வாசித்திருக்க வில்லை. நான் ஆனந்தவிகடன் படிக்க ஆரம்பித்த போது அவர் விகடனில் எழுத்து பணியினை நிறுத்துவிட்டு கடல் தண்ணியின் உப்பு காற்றினை சுவாசிக்க சென்றுவிட்டார்.ஆனால் கடவுள் கடவுள்தான்.சில நல்ல எழுத்துகளை வாசிக்கமால் எப்படியாடா உலகில் நீ இருக்க முடியும் என்று என்னி எனக்கொரு வாய்ப்பு அளித்தான். நல்ல எழுத்துகளை வாசிக்க எப்போதும் வாய்ப்புகளை அவன் ஏற்படுத்தியே தருவான்.இதோ அந்த வாய்ப்பினைஎனக்கு அளித்த போது நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றே நினைக்கிறேன்.ஆம்.நிறைய முறை சில வாசிப்புகளைபல புத்தகங்களில்படித்துவிட்டு கருத்து சொல்லலாம் என்று நான் என்னி, அதனை செயல் படுத்தி மடலிட்டு எதுவும் பிரசுரிக்கபடாமல் எழுத்தாளனை சென்றடைந்ததா,இல்லையாஎன்று பல நாள் எண்ணியிருந்தேன். ஆனால் முதல் முறையாக ஒரு எழுத்தாளனின் படைப்புகளைவாசித்துவிட்டு, அதனை பற்றி கருத்து சொல்லி, அதற்கு பதில் கருத்தும் அறிந்து ,அவருடனே உரையாடவும் செய்தபோது நான் பெரு உவகை அடைந்தேன்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாய் 50 பதிவுகளுக்கும் மேல் ஒரு தொடர் எழுதி, தன் அனுபவங்களை சொல்லி ஒவ்வொரு பதிவிலும் ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கிபல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட கடல் கணேசன் அவர்களுக்கு நன்றி. நான் அவர் எழுதின தொடர ஆபரேசன் செஞ்சு இது அப்படி,அது இப்படினு சொல்லப்போறது இல்ல. ஏனேனில் எனக்கு அவ்வளவு தமிழ் அறிவும் கிடையாது.பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்யும் அளவுக்கு மிகப் பெரியவாசகனும் இல்லை. மிகச் சாதரன வாசகனாய் அவர் எழுத்தில் கவரப்பட்டு சில அத்தியாயங்களில் மனது நிறைய சோகங்களுடன்,சிலதில் சந்தோசங்களுடன் வேறு சிலவற்றில் பல கேள்விகளுடன்தூங்கிப் போயுள்ளேன். அதற்காய் , அந்த எழுத்தாளனுக்கு நன்றி சொல்ல ஆசைப் பட்டே இந்த நீண்ட பதிவு.

நீங்கள் வேறு ஒரு வலைப்பக்கத்தில் எழுதி இருக்கும்போது உங்களது சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தேன். அதில் சந்துரு என்ற கட்டுரைபடித்து, நான் அழுத போதுதான் உங்களது எழுத்துகளை நேசிக்க ஆரம்பித்தேன். பிறகு நீங்கள் இந்த வலைப்பக்கத்தினை தொடங்கி பல எழுத்துகளை அளித்த போது அதனை வாசித்து, பிறகு உங்களுடன் பேச ஆரம்பித்த போது ,நிஜமாய் சொல்லுகிறேன் என் மனதிற்குள் ஒரு இனம் புரியா சந்தோசம்.. ஒரு எழுத்தாளனுடன் பேசுகிறேன் என்று. பகிர்தல் எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வளவு அழகானது என்பது அதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் அமைகிறது என்பதை உங்களின்எழுத்தில் காணலாம். உங்களின் எழுத்துகள் மிகவும் வலிமையானது. வலைப்பக்கம் ஆரம்பித்த உடனேஎல்லாரையும் வசியம் செய்து எல்லோரையும் திரும்பி பார்க்க செய்தவர் நீங்கள். பாராட்டுகளுக்காக பலர் எழுதிக் கொண்டு இருக்கையில், எழுதுவது என் கடமை. வாசிப்பதும் வாசித்து எண்ணங்களை பகிர்வது உன் விருப்பம் என்று தான் தொடர்ந்த பணியினை தான் இல்லாத போதும் தொடர்ந்து ,பதிவுகளை வரச் செய்து தான் எடுத்த பணியினை சரியாக செய்தவர். ஹாட்ஸ் ஆப் டு யூ கணேசன். ஒரு எழுத்தாளனால் மடடுமே எண்ணி செய்ய முடியும் இவ்வாறு. உங்களது பின்னாளைய சில பதிவுகளை படித்துவிட்டு கருத்து சொல்லாமல் வந்ததற்காய் வருந்துகிறேன்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஒருவேளைநீங்கள் 50 வது பதிவு எழுதி கடற் பயணம் செய்யாமல் ஒருவேளை தரையிலேயே இருந்து இருந்தால் இன்னமும் முதல் பின்னூட்டத்தினை போட்டுவிட்டு நான் முதலா என்று கேட்டு இருந்து சாதரண வாசகனாய் ம்ட்டுமே இருந்திருப்பேன்.
தற்போது கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கீறிர்கள், திரும்பிய பிறகு என்றாவது ஒரு நாள் இந்த பகுதியினை படிக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் வாசகனில் என்னை தனியாக அடையாளம் காண செய்யும் என்ற நம்பிக்கையுடனுமதான் இந்த பதிவினை எழுதுகிறேன் ...
கற்றது கடலளவு
-----------------------------
நானும் கடற் பயணம் செய்தேன்
என் பாதம் நனையாமல்.
கண்களினால் கற்று
கரை தெரிந்தேன்.
கடல் விசித்திரமானது
அது அதிசியமானது.
உப்புத் தண்ணி
என் முகம் அறைந்து சொல்லியது
கடல் பல வரலாறுகளைகொண்டது
தன் ஒவ்வொரு துளியிலும்!
அனுபவிக்க கற்றுக்கொள்
கற்றது கடல் அளவு
எனைக் கொள்ளைக் கொண்டது
உலகளவு.

உங்களது தொடரில் பல அறிய, தெரியவேண்டிய விடயங்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் அதனை விட மிகவேகமாய் நினைவுக்கு வருவார்கள். "நட்ராஜ்,ஜோ,கேத்தரின், வில்லியம்ஸ்,ரோசானா, பட்ரீஷியா..ஆம் பட்ரீஷியா எனை மிகவும் பாதித்த நபர்.
பட்ரிஷியாவுக்கான எனது இந்த கவிதையும் எனக்கு பிடித்த என் எழுத்து..
இழத்தலும்,பெறுதலும்
---------------------
உன் அகம்,புறம் தெரியாது
நாளை உன்விரல் எனைப் பற்றாது
இருந்தும் எனை இழக்கிறென் முழுவதுமாய்..
என் உணவோ, உன் உடலோ
காரணமாய்த்தான் இருக்கிறது
ஒவ்வொரு கணமும்...

அவரது நன்றி அறிவிப்பு இவ்வாறுதான் இருக்கிறது
"எனக்கு கடலை அறிமுகம் செய்த திரு. 'கடலோடி' நரசய்யாவுக்கும், என்னைப் பத்திரிக்கையாளனாக உருவாக்கிய ஆனந்த விகடனுக்கும் (ஜூனியர் விகடனுக்கும்), என் வாழ்க்கைப் பாதையில் என் மீது நிஜமான நேசம் காட்டிய எல்லோரின் அன்பிற்கும் எனது நன்றி.
கற்றது கடலளவு தொடரை வலைஉலகத்தில் பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் இனிய அனுபவம். இத்தொடர் நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தி மன நிறைவை அளித்துள்ளது. வலையுலக நண்பர்கள் கடிதங்களின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் அளித்த ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் என் வாழ்வில் எல்லாக் கட்டங்களிலும் துணை நின்று என்னை வழி நடத்தியவர்கள். இந்தத் தொடர் இணையத்தில் வெளியான போதும் நான் இல்லாதபோது தொடரைத் தொடர்ந்து தவறாமல் பதிவிட்டவர்கள் என் அன்பு நண்பர்கள்தான்.. அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியமற்றது.. அவர்கள் என் வாழ்வில் எப்போதும் துணை நின்று வழி நடத்துபவர்கள்.. இருந்தாலும் என் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் விரைவில் புதிய அனுபவங்களுடன் இன்னொரு தொடர் வழியாக உங்களை சந்திக்கும் வரை..
என்றும் அன்புடன்கடல்கணேசன்.
ஆகவே, தங்களது கடற்பயணம் நன்றாய் அமைந்து, இன்னும் வேறு சில அனுபவங்களை மீண்டும் ஒரு தொடராய்எழுதும் போது அதனை வாசிக்கும் வாசகனாய் காத்து இருக்கிறேன்.
வலைப்பக்கம் : http://kadalganesan.blogspot.com/
நன்றி கணேசன்..,

27 comments:

Syam said...

Mani, its a great tribute to Ganesan's writing...அவருடைய தொடர் பத்தி அழகா ஒரு போஸ்ட் போட்டு இருக்கீங்க...hats off to you too :-)

Syam said...

//தரையிலேயே இருந்து இருந்தால் இன்னமும் முதல் பின்னூட்டத்தினை போட்டுவிட்டு நான் முதலா என்று கேட்டு இருந்து சாதரண வாசகனாய் ம்ட்டுமே இருந்திருப்பேன்//

கரெக்ட்டா சொன்னீங்க...இப்போல்லாம படிச்சிட்டு பின்னூட்டம் கூட போடாம போய்டுறேன்னு எனக்குள்ளயும் ஒரு உறுத்தல் இருந்திட்டே இருக்கு...சரி அவரு வந்த அப்புறம் ஸ்டார்ட் மீஜிக் பண்ணிடலாம்... :-)

Syam said...

//தலைப்ப பார்த்துட்டு யாரவது கடல் கணேசன் கிட்ட போய் போட்டு குடுத்து எனக்குஅவர் ஆட்டோ அனுப்பற மாதிரி செஞ்சுடாதிங்க//

ஆட்டோவா என்ன மணி சொல்றீங்க...அவர் கப்பல் தான் அனுப்புவார்.... :-)

Arunkumar said...

முதலில் கணேசன் சாருக்கு கோடி நன்றிகள். அவர் கொடுத்த உற்சாகம் தான் எனக்கு இந்த தமிழ் வலையுலகமும் அதில் கிடைத்த அழகிய நண்பர்களும்.

கற்றது கடலளவு பத்தி நான் என்ன சொல்ல.. ஒரு அத்யாயமும் விடாமல் வாசித்து,ரசித்து,முதல் கமெண்டிற்கு சண்டை போட்டு..

மணி,கற்றது கடலளவு நிறைவுத் தொடரைப் பார்த்துவிட்டு நானும் சின்னதா ஒரு பதிவு எழுதனும்னு நினைத்தேன். நீங்க முந்தீட்டீங்க. அதுனால என்ன , சொல்ல வந்த விஷயம் ஒன்னு தானே..

//
ஒரு எழுத்தாளனுடன் பேசுகிறேன் என்று.
//
சரியா சொன்னீங்க மணி.

//
நானும் கடற் பயணம் செய்தேன்
என் பாதம் நனையாமல்.
//
அருமை.


நன்றி நன்றி நன்றி கணேசன் சார்.

மணி ப்ரகாஷ் said...

@Syam,

yes syam,நாம எல்லாம் எதேதோ எழுதிகிட்டு இருக்கிறப்ப, கணேசன் ஒரு அனுபவ தொடர் தந்த போது, அத படிச்சு பாராட்டிட்டு,திடிர்னு நான் அத செய்யாம இருந்தபோது எனோ எனக்கு உறுத்துச்சு..சோ.அட்லீஸ்ட் அத பத்தி எழுதினம்னு தோனுச்சு.. அதுனாலதான் ..

//...சரி அவரு வந்த அப்புறம் ஸ்டார்ட் மீஜிக் பண்ணிடலாம்... :-)
//

ஆமா சியாம், ரெண்டு கைதட்டுனாதான் ஓசையே.. அவரு வரட்டும். பட்டைய கிளப்பிடலாம்...


//அவர் கப்பல் தான் அனுப்புவார்.... //

ஆட்டோ வந்தாலே தாங்காது இந்த உடம்பு..


கப்பலா.....

நம்ப மக்கள் எல்லாம் பாசகார மக்கள்

போட்டு எல்லாம் குடுக்க மாட்டாங்கனு நம்புறேன்....

மணி ப்ரகாஷ் said...

ஆம் அருண்.

//முதலில் கணேசன் சாருக்கு கோடி நன்றிகள். அவர் கொடுத்த உற்சாகம் தான் எனக்கு இந்த தமிழ் வலையுலகமும் அதில் கிடைத்த அழகிய நண்பர்களும்.

//

அவர்தான் எனக்கும் எழுத சொல்லி,ஏன் எனக்கு வலைப்பக்கத்த தமிழ் மணத்தில சேர்த்தும் வைச்சார்.

அவர் நமக்கு நண்பரா கிடைச்சது நமக்கு பெருமைதான்..

யெஸ்... நன்றிகள் கணேசன்...

ஜி said...

அருமையானதொரு நன்றியுரை....

அவரது தொடரின் கடைசிப் பகுதியை மட்டும்தான் நான் படித்தேன். உங்களது கட்டுரையைப் படித்தப் பிறகு, ஒரு பெரிய காவியத்தை தொலைத்ததுபோல் ஒரு உணர்வு. அவரது தொடரினை கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க முயல்கிறேன்....

Syam said...

நான் தான் பர்ஸ்ட்டா அட்றா சக்க அட்றா சக்க... :-)

கோபிநாத் said...

முதலில் கணேசன் அவர்களுக்கு நன்றிகள்
அவருடைய 40 அத்யாயமும் ரசித்தவன்.
கடைசி 10 அத்யாங்கள் இன்னும் ரசிக்கவில்லை நேரம் கிடைக்கும் போது ரசிக்க வேண்டும்.

உங்களுக்கு மேல நான் என்னத்த சொல்ல மணி...அவரது அடுத்த புதிய அனுபவத்திற்கு வரிசையில் காத்திருக்கும் சக பயணி..

\\.சரி அவரு வந்த அப்புறம் ஸ்டார்ட் மீஜிக் பண்ணிடலாம்... :-)\\

நம்ம நாட்டாமை சொன்னாது போல கலக்கிடலாம்...

கோபிநாத் said...

மணி
ரொம்ப அருமையான வரிகள், கவிதைகள்...
கலக்கிட்டிங்க மணி..

சக நண்பருக்கு நன்றியை மிகவும் அழகாக சொன்னா என் நண்பர் மணிக்கும் என் நன்றிகள்..

SKM said...

well done Mani. திரு.கணேசன் பயணம் மேற்கொண்ட பின் வெறுமனே கமெண்ட்ஸ் கொடுக்க மனமின்றி படித்து விட்டு வந்து விடுவேன்.நம் சந்தேகங்களை அவர் தீர்க்கும் அழகே அழகு.அவர் நல்ல படி பயணம் முடிந்து வந்து புது அநுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென வாழ்த்துவோம்.

மு.கார்த்திகேயன் said...

உண்மையிலே.. வெறும் மணல் மேடுகளையும் புழுதிகளையும் பாரதிராஜா காலம் தொட்டு பார்த்து வந்த நமக்கு இது பெரும் தீனி தான் மணி.

அவரே அறியாது, அவருக்கு அருமையான நன்றியுரை.

கீதா சாம்பசிவம் said...

மனதைத் தொடும் விமரிசனம். உங்களுக்குள் உள்ள கவிதை உணர்வையும் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தொடர் முடிந்தது வருத்தம் தான். சமீப காலங்களில் பின்னூட்டம் கொடுக்காவிட்டாலும் படித்துக் கொண்டு தான் இருந்தேன். இருந்தாலும் இவ்வளவு அழகிய விமரிசன்ம் என்னால் எழுத முடியுமா சந்தேகம் தான். "கடல் கணேசன்" இதை விடப் பெரிய கெளரவத்தை எதிர்பார்க்க மாட்டார். இருவருக்கும் என்னோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

//நான் தான் பர்ஸ்ட்டா அட்றா சக்க அட்றா சக்க... :-) //

ஆமாம் நாட்டாமை நீங்க தான் first..

கடலுக்கே தண்ணி காட்ட முடியுமா?
அதாங்க,உங்களுக்கு பகார்டினு சொன்னா அது கடலுக்கு தண்ணிய காட்டின மாதிரி..அதுனால உங்களுக்கு பிடிச்ச பழனி பஞ்சாமிர்தத்த நான் ஊருக்கு போயி வாங்கி யனுப்பறேன்...

மணி ப்ரகாஷ் said...

//ஒரு பெரிய காவியத்தை தொலைத்ததுபோல் ஒரு உணர்வு. அவரது தொடரினை கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க முயல்கிறேன்.... //

ஆமாம் ஜி.அவரின் எழுத்து அப்படி...

கண்டிப்பா படியுங்க. அவர் இத புக்காவே வைச்சு இருக்காராம்..அவர் வந்த உடனெ உங்களுக்கும் சேர்த்து புத்தகத்த வரவைச்சிடலாம்...

மணி ப்ரகாஷ் said...

//அவரது அடுத்த புதிய அனுபவத்திற்கு வரிசையில் காத்திருக்கும் சக பயணி//

நானும்..ஆனா எனக்கு என்னமோ அவர் கடல் மட்டுமல்லாது வேறு தொடரும் எழுதனும்னு தோனுது..பார்க்கலாம்..


///நம்ம நாட்டாமை சொன்னாது போல கலக்கிடலாம்//

நாட்டாமை சொன்னா அதுக்கு அப்பீலேது...


அவர் வாக்கு நம் செயல்...

மணி ப்ரகாஷ் said...

//திரு.கணேசன் பயணம் மேற்கொண்ட பின் வெறுமனே கமெண்ட்ஸ் கொடுக்க மனமின்றி படித்து விட்டு வந்து விடுவேன்.நம் சந்தேகங்களை அவர் தீர்க்கும் அழகே அழகு.அவர் நல்ல படி பயணம் முடிந்து வந்து புது அநுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென வாழ்த்துவோம்//


நானும் அப்படியே. நாம கமெண்ட் போட்ட உடன் அதுக்கு அவர் பதில் குடுத்து , திருப்பி ஊரே ஒன்னு கூடி ..

அது ஒரு இனிய அனுபவம் ...

உங்களுடன் சேர்ந்து நானும்...

மணி ப்ரகாஷ் said...

//உண்மையிலே.. வெறும் மணல் மேடுகளையும் புழுதிகளையும் பாரதிராஜா காலம் தொட்டு பார்த்து வந்த நமக்கு இது பெரும் தீனி தான் மணி.//

ஆமாம் கார்த்தி, உண்மையாகவே. எனக்கும் வித்தியாசமான அனுபவம்.

அப்புறம் சிட்டு குருவிய படிச்சேன்..ஆனா கமெண்ட் எதுவும் எழுதலா..

மணி ப்ரகாஷ் said...

//இருந்தாலும் இவ்வளவு அழகிய விமரிசனம் என்னால் எழுத முடியுமா சந்தேகம் தான்//


தலைவி என்ன சொல்றீங்க.. நான் என்ன எழுதிட்டேன்... அப்படியே இருந்தாலும் அது உங்க ஆசியாலதான்...

உங்க வாழ்த்துக்கு நன்றி...

Anonymous said...

திடீர்னு இன்னைக்கு எனக்கு கணேசன் பதிவு நண்பர்கள் தேடி சும்மா அங்க போய் பாத்தேன். ஏதோ பழைய கல்லூரி நண்பர்களை தேடி போற மாதிரி. நீங்க எதோ சும்மா லிங்க் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன், எதோ ஒரு ஆர்வத்தில வந்து பாத்தேன் இங்க.

அருமையான ரசிப்பு கட்டுரை மணி. கலக்கிட்டீங்க.
ஒவ்வொரு வரியும் நான் முழுமையா ஒத்துக்கிறேன். நல்லா எழுதிருக்கீங்க.

//அவர் கப்பல் தான் அனுப்புவார்.... //
//ஆட்டோ வந்தாலே தாங்காது இந்த உடம்பு...//
இதைப் படிச்சு சிரி சிரின்னு சிரிச்சிகிட்டுருக்கேன்!

கோபிநாத் said...

கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி'

மணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

மணி...கலக்கிட்டீங்க...

Priya said...

aha.. ippa dhan thriyudhu கலை, விளம்பரத் துறை minister post ungalukku evlo poruthamnu..

Kalakittinga ponga..

Naanum konja naal கற்றது கடலளவு padichen. appuram eppadiyo discontinue ayiduchu. Time kidaikkum podhu fulla padikkanum.

மணி ப்ரகாஷ் said...

//திடீர்னு இன்னைக்கு எனக்கு கணேசன் பதிவு நண்பர்கள் தேடி சும்மா அங்க போய் பாத்தேன். ஏதோ பழைய கல்லூரி நண்பர்களை தேடி போற மாதிரி. நீங்க எதோ சும்மா லிங்க் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன், எதோ ஒரு ஆர்வத்தில வந்து பாத்தேன் இங்க.
//

வணக்கம் மதுரா மேடம்.வருகைக்கு நன்றி. முதல் முறையா என் மணிவிலாஸிற்கு வந்து இருக்கீங்க.. இந்தாங்க தண்ணீர்.


//எதோ ஒரு ஆர்வத்தில வந்து பாத்தேன் இங்க//

அது வேறெ எதுவும் இல்ல மேடம்.. கடல் தண்ணியோட காத்து.. உங்கள அப்படியே இந்த பக்கம் வரவைச்சுடுச்சு...

//நல்லா எழுதிருக்கீங்க//

தாங்க்ஸ்,தாங்க்ஸ்.. ஆனா மத்தது எல்லாம் படிச்சுட்டு பீல் ஆயிடுதிங்க.. ஏண்டா இப்படி சோன்னோம்னு..

நம் மக்கள் எல்லாம் நல்லவர்கள். நான் என்ன எழுதுனாலும் நல்லா இருக்குனு சொல்லி சொல்லிடுவாங்க...


//இதைப் படிச்சு சிரி சிரின்னு சிரிச்சிகிட்டுருக்கேன்//

:). நான் அடிவாங்கிட்டு இருக்கிறது உங்களுக்கு சிரிப்பா..ம்ம் சிரிங்க ..சிரிங்க...

மணி ப்ரகாஷ் said...

//கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி'

மணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

மணி...கலக்கிட்டீங்க//

நன்றி கோபி..

உங்கள பத்தியும் சீக்கிரமா ஒரு விளம்பரத்த போட்டுரேன்....
:)

மணி ப்ரகாஷ் said...

//aha.. ippa dhan thriyudhu கலை, விளம்பரத் துறை minister post ungalukku evlo poruthamnu..

//

ஆமாம் சக மந்திரியாரே,, என்ன ரோம்ப பிசியா இருக்கீங்கனு கேள்வி பட்டேன்..சிங்குலர் சர்வீஸ்ல இருந்து சொன்னாங்க.. னெட் ஒர்க் பிசியாமா...:)

என்சாய்...

அப்புறம் க.க தொடர் மெதுவா படிக்கலாம்.. நீங்க போனுங்க..இந்த டைம் பொன்னானதாம்...

ambi said...

//பகிர்தல் எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வளவு அழகானது என்பது அதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் அமைகிறது //

100% true.
Mani, its a great tribute to Ganesan's writing. superb! :)

//இப்போல்லாம படிச்சிட்டு பின்னூட்டம் கூட போடாம போய்டுறேன்னு எனக்குள்ளயும் ஒரு உறுத்தல் இருந்திட்டே இருக்கு//
@syam, LOL. romba nallaaavvvaaan pa neey!

Arunkumar said...

மணி
உங்க அடுத்த போஸ்டுக்கு கமெண்ட் போல முடியல.. என்னன்னு பாருங்க.. சூப்பரா எழுதிட்டு கமெண்ட் டிசேபில் பண்ணிட்டீங்க... :(