Wednesday, March 07, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்

வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் காதல்.

அதன் காரணமாய்
விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு
மெளனமாய் உன் பெயர் சொல்லி..

என் இமைமூடிய பொழுதுகளில்
உந்தன் பெயரை உரக்கச் சொல்லியதற்கு
ஊர் சொல்லுகிறது நான் உளறுகிறேனாம்
ஊருக்கு எப்படி தெரியும்?
இது உள்ளத்தின் வேலை என்று.

ஆம் மரபுகாரர்களுக்கு எப்படித் தெரியும்
புதுக்கவிதை?

என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து

என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே

உன்னை உள் வாங்கி
என்னை விடுத்து
சுவாசம் செய்கிறேன்
உயிரும் வாழுகிறேன்உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
விழி விழுந்து என் விதி பார்த்து
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....

குறிப்பு

கடைசி பாரா வின் ஓவ்வோரு வரிகளையும் கிளிக் செய்தால் தொடர் ஓட்டத்தினை பார்க்கலாம்.


தொடர் ஒட்டத்தில்
---------------------------------
தலைவர் :
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
நிதியமைச்சர் :
விழி விழுந்து என் விதி பார்த்து
து.முதல்வர் :
உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
நான் :
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
72 comments:

கீதா சாம்பசிவம் said...

அருமையான கவிதை, தொடரச் சொன்னவங்களும் நல்லாவே எழுதுவாங்க. நிதி அமைச்சர் பத்தித் தெரியாது. பார்க்கலாம்.

கீதா சாம்பசிவம் said...

நல்ல உளறல். யாரு அந்தப் பொண்ணு? எல்லாம் எழுதறீங்க, கேட்டால் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைன்னு சொல்லிடறீங்க! :p வீட்டிலே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா?

ambi said...

//என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து
//
superrrrrrrr! குத்த வெச்சு உக்காந்து இருந்தீங்களா துணி காய போடும் போது? :)

மணி, வழக்கம் போல கலக்கிட்ட பா!

மு.கார்த்திகேயன் said...

நல்ல உளறல் மணி.. அழகாய் தொடர்ந்திருக்கிறீர்கள்.. இது வருகை பதிவு.. அப்பால வர்றேன். இது பற்றிய நமது பதிவை பாருங்க மணி

ஜி said...

தலைவா....

அசத்திட்டீங்க....

நானும் இந்தத் தொடர்ல துண்டப் போட்டுக்கிறேன் :)))))

SKM said...

//என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து// good.yethanai naal ippditae parpeengapa.

//என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே

உன்னை உள் வாங்கி
என்னை விடுத்து
சுவாசம் செய்கிறேன்
உயிரும் வாழுகிறேன்//

Nice words .unga kavidhaiyil calender varumo nu ninachen.adhu illama azhagana kavidhai.

Syam said...

அசால்டா கவித எழுதறீங்க எல்லோரும்...எப்படி எப்படி...டியூசன் படிச்சீங்களோ :-)

Syam said...

//என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே//

அடேங்கப்பா...கெமிஸ்ட்ரிய கவிதைல மிக்ஸ் பண்ணி பிண்ணிட்டீங்க....எனக்கு எல்லாம் ரெண்டும் தனி தனியா சொல்ல சொன்னா கூட வராது :-)

Syam said...

//ஊர் சொல்லுகிறது நான் உளறுகிறெனாம்//

இதுக்கு அம்மணி என்ன சொல்லுச்சு..கெடக்கறாய்ங்க கேன பசங்க அப்படின்னா :-)

Syam said...

//நானும் இந்தத் தொடர்ல துண்டப் போட்டுக்கிறேன்//

@ஜி,

கலக்குங்க :-)

Arunkumar said...

சூப்பர் கவிதை வழக்கம்போல
மணி :-)

Arunkumar said...

//
மெளணமாய் உன் பெயர் சொல்லி..
//
உந்தன் பெயரை உரக்கச் சொல்லியதற்கு
//

உரக்கச் சொன்னாலும் மெளணமாச் சொன்னாலும் அவ பேரு தானா? ஆமா என்ன பேரு????

Arunkumar said...

//
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....
//
நல்லா இருங்கப்பூ :-)

நல்ல கவிதை மணி. சங்கிலி தொடரட்டும் :-)

Arunkumar said...

ROTFL @ Ambis comment :-)

Ambi,
thangamani post podumbodhu neengalum ippidi thaan kutha vachi ukkandingala gamputer pakkathula?

illa, chumma General Knowledge develop panradhukaga ketten :-)

Arunkumar said...

@syam
கரெக்டா சொன்னீங்க... நமக்கு கவிதைக்கு கமெண்ட் மட்டும்தான் போட வரும்போல :(

நானும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகும்னு கெமிஸ்ட்ரி லேப்ல கடல போட்டா கப்பு குடுத்துருவேன்னு மெரட்டிட்டாய்ங்க வீனாப்போனவிங்க :(

கோபிநாத் said...

அன்பு மணி...

பின்னிட்டீங்க...என்ன தொடரா??? சொல்லவேல்ல !!!

கவிதை எல்லாம் தூள்....

ramya said...

woowwwww....superungooo..really romba nanna irukku..

//விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு
மெளணமாய் உன் பெயர் சொல்லி..//azhaga solirukeenga....

//என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே//

chemistry combination ellam pottu dhool panirukeenga...kalakunga ponga..

first sorry pa, romba naal aachi inga vandhu, as naney ippo thana vandhen..ini comment vaetai nadathidalam..

மணி ப்ரகாஷ் said...

//அருமையான கவிதை//

நன்றி எங்க தப்பு சொல்லிடுவிங்களோனு பயந்துட்டேன்..

//தொடரச் சொன்னவங்களும் நல்லாவே எழுதுவாங்க. நிதி அமைச்சர் பத்தித் தெரியாது. பார்க்கலாம். //

மேடம் அவங்க தொடர்ந்தது தான், நான் தொடருகிறேன்...

நீங்க கடைசி வரிகள பார்த்தீங்க அப்படினா அது அவங்கள் கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்....

< பட் அத யாருமே நோட் பண்ணல,..

:(>

மணி ப்ரகாஷ் said...

//
யாரு அந்தப் பொண்ணு
கேட்டால் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைன்னு சொல்லிடறீங்க! //

மேடம் நாங்க எல்லாம் பாரதியின் வழித் தோன்றல்..

கண்ணம்மா என் காதலி அவர் எழுதலியா அது மாதிரி தான்...

மணி ப்ரகாஷ் said...

//superrrrrrrr! குத்த வெச்சு உக்காந்து இருந்தீங்களா துணி காய போடும் போது?//

ஆமா அம்பி. குத்த வைச்சு, நின்னு, அப்புறம் மொட்ட மாடில படுத்துகிட்டு
இப்படி எல்லாம் பார்த்தேன்..

வேற எதுக்கு கலர தெரிஞ்சுக்கத்தான்

நான் சொல்றது தாவணியோட கலரா...


அப்புறம் கீதா மேடம் இதுக்கும் திட்டுவாங்க...

மணி ப்ரகாஷ் said...

//நல்ல உளறல் மணி.. அழகாய் தொடர்ந்திருக்கிறீர்கள்.. இது வருகை பதிவு.. அப்பால வர்றேன். இது பற்றிய நமது பதிவை பாருங்க மணி //

நீங்க நல்லாதான் தொடங்கி வைச்சீங்க..என்ன பன்றது விதி வலியது..

என் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது...

அப்புறம் உங்க பதிவ பார்த்தேன்..

தலைவரா என்ன செய்யனுமோ அத செஞ்சுட்டிங்க....

மணி ப்ரகாஷ் said...

//தலைவா....//

அப்பாடா . ஒரு அமைச்சரா கணக்கு பன்னியாச்சு...//அசத்திட்டீங்க....//


தாங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


//நானும் இந்தத் தொடர்ல துண்டப் போட்டுக்கிறேன் :))))) //
மக்கா, நான் போர்வை விரிச்சு வைச்சு இருக்கேன்,

நீர் உமது வாளை எடுத்து கொண்டு வாரும்ம்ம்...

மணி ப்ரகாஷ் said...

//good//

நாம எல்லாம் எப்ப v.v.good வாங்கிறது??????????????????

வெறும் கனவா போய்டுமோ..


//Nice words .unga kavidhaiyil calender varumo nu ninachen.adhu illama azhagana kavidhai//

அக்கா, நான் தான்

.\///உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
விழி விழுந்து என் விதி பார்த்து
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....//

எல்லா நாட்காட்டினு சொன்னேனே..

காலண்டர் வந்து இருக்கு,,நீங்க தான்

கிழிக்க மறந்துட்டீங்க...

னெக்ஸ்ட் டைம் கரெக்டா காலண்டர வச்சிடுரேன்...

மணி ப்ரகாஷ் said...

//அசால்டா கவித எழுதறீங்க எல்லோரும்...எப்படி எப்படி...டியூசன் படிச்சீங்களோ :-) //

நீங்க எல்லாம் நயன ஒரு பார்வை பார்த்தே கவுத்துடிரீங்க..

என்ன பன்றது ,.நாங்க உளறித்தான் பார்க்கலாமேனு டிரை பன்றோம்..

போடா லூசு பையானு சொல்லாம இருக்கனும்னு வேண்டிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மணி ப்ரகாஷ் said...

//அடேங்கப்பா...கெமிஸ்ட்ரிய கவிதைல மிக்ஸ் பண்ணி பிண்ணிட்டீங்க....எனக்கு எல்லாம் ரெண்டும் தனி தனியா சொல்ல சொன்னா கூட வராது :-) //

நமக்கு கவிதைல மட்டும்தான் மிக்ஸ் பன்ன தெரியும்ம்

பேப்பர்ல எல்லாம் ஒழுங்கா எழுதி யிருந்தா

இந்த HzO+CzO+Oz+C6H5.????.. நான் ஏன் இப்பவும் எழுதரேன்

மணி ப்ரகாஷ் said...

//இதுக்கு அம்மணி என்ன சொல்லுச்சு..கெடக்கறாய்ங்க கேன பசங்க அப்படின்னா :-) //

இல்ல நாட்டாமை. இப்படியும் ஒரு கேனபயலா இருக்கியேயேயேனு

ஒரு பரிதாப லுக்க்க்க்க்க்க் தான் விட்டுச்சு...

மணி ப்ரகாஷ் said...

////நானும் இந்தத் தொடர்ல துண்டப் போட்டுக்கிறேன்//

@ஜி,

கலக்குங்க :-) //


ஆமேன்..

break the rules..

மணி ப்ரகாஷ் said...

//சூப்பர் கவிதை வழக்கம்போல
மணி :-)//

வழக்கம்போல் உன் கமெண்ட் எனக்கு
காஃபி மோக்கா(இப்ப எல்லாம் cold coffee than namathu energy )

//உரக்கச் சொன்னாலும் மெளணமாச் சொன்னாலும் அவ பேரு தானா? ஆமா என்ன பேரு???//

ரகசியமாய்..ரகசியமாய்...

மணி ப்ரகாஷ் said...

////
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....
//
நல்லா இருங்கப்பூ :-)//

நன்றிப்பூ

//நல்ல கவிதை மணி. சங்கிலி தொடரட்டும் :-) //

ஓகே.. பார்க்கலாம் அடுத்து யாருனு?

மணி ப்ரகாஷ் said...

//Ambi,
thangamani post podumbodhu neengalum ippidi thaan kutha vachi ukkandingala gamputer pakkathula?
//

அருண். அம்பி சொன்னா எனக்கும் சொல்லுப்பா

knowlege is powrfulllllllllllll.

அத உன்கிட்டவே வச்சுக்க கூடாது, என்ன ஓகே.வா/..

மணி ப்ரகாஷ் said...

//கரெக்டா சொன்னீங்க... நமக்கு கவிதைக்கு கமெண்ட் மட்டும்தான் போட வரும்போல :(//

அதுதான் காமேடில பின்னி பேடல எடுத்து
அதுல கப்பலையும் தரையில விடுரீங்களேப்பு..

நமக்குதான் கமேடியும் வரல
கவிதையும் வரல..

படிச்ச புரிய மாட்டேன்கீதாம்பா.. என்ன பன்றது..............

மணி ப்ரகாஷ் said...

//பின்னிட்டீங்க...என்ன தொடரா??? சொல்லவேல்ல !!!

கவிதை எல்லாம் தூள்//

அவர் சொன்னார்...

இவன் செய்றான்.. வேறோன்றும் இல்லை....

மணி ப்ரகாஷ் said...

//woowwwww....superungooo..really romba nanna irukku..//

danQQQQ. danQQQQ..

//first sorry pa, romba naal aachi inga vandhu, as naney ippo thana vandhen..ini comment vaetai nadathidalam//

aamam..enga aala kanomnu pathen..

love all serve all pottu medala vanga saniyavuku pottiya kilambiyaachoo nu nenichuten...

அப்புறம் சொர்க்கமே என்றாலும் அது நம்ப ஊர போல வருமா..

எப்படி இருக்கு ஊரு...

வாங்க வந்து உங்க வேட்டைய ஆரம்பியுங்க....

வேதா said...

/ஆம் மரபுகாரர்களுக்கு எப்படித் தெரியும்
புதுக்கவிதை?/
இது சரியான உள்குத்து:)ஆனாலும் சூப்பர்:)

/என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து/
எனக்கு இந்த வரிகள் புரியவில்லை ப்ரகாஷ்,விழிகளுக்கு என்றும் வண்ணம் தெரியும்தானே?

/உன்னை உள் வாங்கி
என்னை விடுத்து
சுவாசம் செய்கிறேன்
உயிரும் வாழுகிறேன்/
இது அல்டிமேட் நல்லா கலக்கிட்டீங்க காலண்டர் கவிஞரே:)

வேதா said...

@கீதா,
/தொடரச் சொன்னவங்களும் நல்லாவே எழுதுவாங்க./
இதுக்கு தான ஒழுங்கா படிச்சுட்டு கமெண்டனும், நாங்க எழுதினதுக்கு அப்புறம் தான் ப்ரகாஷ் எழுதியிருக்காரு:)முதல்ல நாங்க எழுதினதை படிங்க:)

ramya said...

//aamam..enga aala kanomnu pathen..// adhan vandhuten thirumba...

//love all serve all pottu medala vanga saniyavuku pottiya kilambiyaachoo nu nenichuten...//
yen, yen indha velai ungalukku, enna saaniya kooda ellam poi compare panitu, avala venumna en kooda compare panikonga, enna yedho avlo periyavangala illama chinna rangea sharapova kooda compare panirukalam..

//எப்படி இருக்கு ஊரு...
வாங்க வந்து உங்க வேட்டைய ஆரம்பியுங்க.... // superunngooo..yedho thanga vaetaiku koopidara maadhiri irukku mani..

Priya said...

wow.. kalakkal Mani.

ovvoru variyum arumai.

//கடைசி பரா வின் ஓவ்வோரு வரிகளையும் கிளிக் செய்தால் தொடர் ஓட்டத்தினை பார்க்கலாம்.//
indha technique superb.

Bharani said...

calender pathiye kavidhai pota ungaluku kaadhal kavidai pathi sollitharanuma enna :)

Bharani said...

//என் இமைமூடிய பொழுதுகளில்
உந்தன் பெயரை உரக்கச் சொல்லியதற்கு
ஊர் சொல்லுகிறது நான் உளறுகிறெனாம்
ஊருக்கு எப்படி தெரியும்?
இது உள்ளத்தின் வேலை என்று//...enna kudutheenga oru title explanation...

Bharani said...

//என் உயிர் வேதியல் நிகழ்வுகளின்
எல்லா மூல காரணியும்
நீ மட்டுமே
//...idhai sonna nammala payithiyakaaranu solranungo :)

Bharani said...

//உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்
விழி விழுந்து என் விதி பார்த்து
கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்
என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
காதலுடன் ....//....aana kadaisiya sonnega...adhuve oru thani kavidhai maadhiri iruku :)

adhula link vera kuduthu...kalaasal...

மணி ப்ரகாஷ் said...

//ஆம் மரபுகாரர்களுக்கு எப்படித் தெரியும்
புதுக்கவிதை?/
இது சரியான உள்குத்து:)ஆனாலும் சூப்பர்:)

நன்றிங்கோவ்வ்வ்வ்வ்.


/என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து/
எனக்கு இந்த வரிகள் புரியவில்லை ப்ரகாஷ்,விழிகளுக்கு என்றும் வண்ணம் தெரியும்தானே?


ஆம், வேதா. வண்ணம் என்றும் விழிகளுக்கு தெரியும்தான்...

ஆனால் அதை அவள் காண்பித்த பிறகே உணர்ந்தேன்

எல்லாம் உளறலே..

/உன்னை உள் வாங்கி
என்னை விடுத்து
சுவாசம் செய்கிறேன்
உயிரும் வாழுகிறேன்/
இது அல்டிமேட் நல்லா கலக்கிட்டீங்க காலண்டர் கவிஞரே:) //

நன்றி.. நன்றி.. நன்றி..

உங்க அளவுக்கு எழுதறது எல்லாம் கஷ்டமுங்கோ....

மணி ப்ரகாஷ் said...

//இதுக்கு தான ஒழுங்கா படிச்சுட்டு கமெண்டனும், நாங்க எழுதினதுக்கு அப்புறம் தான் ப்ரகாஷ் எழுதியிருக்காரு:)முதல்ல நாங்க எழுதினதை படிங்க//

வேதா முன்னால் நான் சரியாக லிங்க் கொடுக்கவும் இல்லை அந்த குறிப்பையும் தாமதமாகத் தான் சேர்த்தேன்..

ஒரு வேளை அதுவும் காரணமாக இருக்கலாம்...

மணி ப்ரகாஷ் said...

//yen, yen indha velai ungalukku, enna saaniya kooda ellam poi compare panitu, avala venumna en kooda compare panikonga, enna yedho avlo periyavangala illama chinna rangea sharapova kooda compare panirukalam//

இதுக்கு பேருதான் நம்ம ஊரு குசும்புனு சொல்லுவாங்களோ...

ஆனாலும் இம்புட்டு தன்னடக்கம் கூடாது தாயி....

இனிமேல் கரேக்டா காம்பேர் பன்னிடுரேன்ன்..


//superunngooo..yedho thanga vaetaiku koopidara maadhiri irukku mani//

ஆமாங்கோ... ஆனா என்ன ஒரு வித்தியாசம்னா..

நீங்க மத்த எடத்தில இருந்து எடுத்துட்டு வந்து

மணி விலாஸ நிரப்பனும்..அம்புட்டுதான்..

மணி ப்ரகாஷ் said...

wow.. kalakkal Mani.

ovvoru variyum arumai.

//கடைசி பரா வின் ஓவ்வோரு வரிகளையும் கிளிக் செய்தால் தொடர் ஓட்டத்தினை பார்க்கலாம்.//
indha technique superb.

நன்றி.. பிரியா.. இவ்ளவு பிஸியிலயும்

கமெண்டினதுக்கு..

மணி ப்ரகாஷ் said...

//nder pathiye kavidhai pota ungaluku kaadhal kavidai pathi sollitharanuma enna :) //

ஆனாலும் உங்க ரேஞ்சுக்கு வர முடியவில்லை. பரணி


//idhai sonna nammala payithiyakaaranu solranungo :) //
ஆமாம் அவங்க கிடக்கிறாங்கோ லூஸு பசங்க..

வாங்க நம்ப உளரலாம்...


//adhula link vera kuduthu...kalaasal//

நன்றி பரணி...

Arunkumar said...

மணி
அம்பி ரெம்ப பிசி. இப்போதைக்கு அவர புடிச்சு கேட்டுக்க முடியாது. அப்பறமா கேட்டுச் சொல்றேன் :-)

மு.கார்த்திகேயன் said...

//என் இமைமூடிய பொழுதுகளில்
உந்தன் பெயரை உரக்கச் சொல்லியதற்கு
ஊர் சொல்லுகிறது நான் உளறுகிறெனாம்
ஊருக்கு எப்படி தெரியும்?
இது உள்ளத்தின் வேலை என்று.
//

உறங்கிடக்கும் விழிகளில் அவள் நடமாடுகிறாள்..
கவிழ்ந்துகிடக்கும் முன்னிரவுகளில்
எனக்கும் அவளுக்கும் ஒரு உளறல் போராட்டம்..
அவள் இதயம் என்னை பற்றியும்
என்னது அவளை பற்றியும்
குறைகளை சொல்லுகிறது..

ஆரம்பித்த இடத்தில்
எதற்கும் மவுசு இல்லியாம்..
புத்தன் சொன்னது
நமக்கு தெரிந்ததை விட
சிங்களனுக்கும் சீனருக்கும்
தெரிகிறது..
என் இதயமும் அது போல
உன்னையே..

மு.கார்த்திகேயன் said...

அதுவும் அந்த கடைசி பாரா, எங்களது வரிகளை வைத்து, அமர்க்களமா எழுதுயிருக்கிறப்பா மணி

ramya said...

//நீங்க மத்த எடத்தில இருந்து எடுத்துட்டு வந்து

மணி விலாஸ நிரப்பனும்..அம்புட்டுதான்.. //

idhu nalla irukkey...ivlo pasama ungalukku, vilayadamaley enakku unga mani vilasla nirapi vachadha en kitta tharadhukku....romba periya manasu ungalukku mani..

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், இதுக்கு அப்புறம் இன்னும் உளறலியா? இல்லை, எனக்குத் தெரியலையா?

மணி ப்ரகாஷ் said...

//உறங்கிடக்கும் விழிகளில் அவள் நடமாடுகிறாள்..
கவிழ்ந்துகிடக்கும் முன்னிரவுகளில்
எனக்கும் அவளுக்கும் ஒரு உளறல் போராட்டம்..
அவள் இதயம் என்னை பற்றியும்
என்னது அவளை பற்றியும்
குறைகளை சொல்லுகிறது..

ஆரம்பித்த இடத்தில்
எதற்கும் மவுசு இல்லியாம்..
புத்தன் சொன்னது
நமக்கு தெரிந்ததை விட
சிங்களனுக்கும் சீனருக்கும்
தெரிகிறது..
என் இதயமும் அது போல
உன்னையே//

என்னப்பா கவிதயா கொட்டுது,, தல.. கலக்குறப்பா..

ஆனா இதுக்கு பதில நான் மெதுவா சொல்லுறேன்..

ஆணி பிடுங்கிட்டேடேடேடே இருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

மணி ப்ரகாஷ் said...

//idhu nalla irukkey...ivlo pasama ungalukku, vilayadamaley enakku unga mani vilasla nirapi vachadha en kitta tharadhukku....romba periya manasu ungalukku mani//

கொடுத்துட்டா போச்சு... அது தான் மணி விலாஸ் ஆச்சே....

மணி ப்ரகாஷ் said...

//ம்ம்ம்ம், இதுக்கு அப்புறம் இன்னும் உளறலியா? இல்லை, எனக்குத் தெரியலையா?//


ஆமாம் மேடம்.. இன்னும் உளறல...
கொஞ்சம் வேல இருக்கு...
உங்க பக்கத்துக்கு கூட வர முடியல...

சேதுக்கரசி said...

மு.கா பதிவிலிருந்து இங்கே வந்தேன்.

இதைப் பாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

மணி ப்ரகாஷ் said...

//மு.கா பதிவிலிருந்து இங்கே வந்தேன்.

இதைப் பாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் :-) //


ஒகே .சேதுக்கரசி. வாழ்த்துகளுக்கும் தகவலுக்கும் நன்றி..

முதல் முறையா வந்து இருக்கீங்க..

அப்படியே நம்ம உளரல பத்தி சொல்லி இருந்து இருக்கலாம்..

சொல்ர அளவுக்கு இல்லையா...

சேதுக்கரசி said...

அச்சோ அப்படியில்லீங்க.. (நான் முன்பே உங்க வலைப்பதிவுக்கு வந்திருக்கேன்னு நினைக்கிறேன்..) இப்ப அன்புடன் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் + கவிதைப் போட்டி வேலையா ரொம்ப பிசி அதனால நிறையப் பதிவுகள் சரிவரப் படிக்கிறதில்ல. அறிவிப்பு கொடுக்கிறதிலேயே பிசியா இருக்கேன் கடந்த 10 நாளா...

உங்க கவிதையில் எனக்குப் பிடித்த வரிகள்:

//ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்.

அதன் காரணமாய்
விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு//

மௌனமாய், உளறுகிறேனாம் - இந்த ரெண்டு எழுத்துப் பிழைகளையும் / தட்டச்சுப்பிழைகளையும் சரி பண்ணிடுங்க. அப்புறம்.. "வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்று சொல்லும்போது நடுவுல "க்" வராது.

சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில் உங்க பதிவுகளின் மறுமொழி நிலவரம் தெரியுமா? அப்படின்னா அடிக்கடி உங்க பக்கம் வந்து போக சுலபமா இருக்கும்.

மணி ப்ரகாஷ் said...

//நான் முன்பே உங்க வலைப்பதிவுக்கு வந்திருக்கேன்னு நினைக்கிறேன்..) //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

//இப்ப அன்புடன் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் + கவிதைப் போட்டி வேலையா ரொம்ப பிசி அதனால நிறையப் பதிவுகள் சரிவரப் படிக்கிறதில்ல. அறிவிப்பு கொடுக்கிறதிலேயே பிசியா இருக்கேன் கடந்த 10 நாளா...
//

கவிதை போட்டியினை பார்த்தேன். நானும் பங்கு பெறுவேன்.

//அன்புடன் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் //
இதனைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கு செல்வது?


அப்புறம் பிழைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திவிடுகிறேன்.


ஒரு கேள்வி நீங்கள் எப்போது மெளனம் கலைப்பீர்கள்?

மணி ப்ரகாஷ் said...

//உங்க கவிதையில் எனக்குப் பிடித்த வரிகள்:

//ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்.

அதன் காரணமாய்
விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு////

இதுல முதல் மூன்று வரிகள் கொ.ப.செ. வேதாவிடம் இருந்து சுட்டது. ரிலே அப்படிங்கிறதுனால அவங்க முடித்து வைத்த வரிகளை வைத்த நான் ஆரம்பித்தேன்... சோ கிரேடிட் கோஸ் டு வேதா....

மணி ப்ரகாஷ் said...

//தமிழ்மணத்தில் உங்க பதிவுகளின் மறுமொழி நிலவரம் தெரியுமா//

இல்ல சேதுக்கரசி, தமிழ் மணத்தில இப்ப நான் என் பதிவுகளை இடுவதில்லை..

பல நல்ல பதிவுகளை தமிழ் மணம் தந்தாலும் என் மனதிற்கு சில நிகழ்வுகள் ஒவ்வாத காரணத்தினால் நான் அதில் இடுவது இல்லை...

மணி ப்ரகாஷ் said...

பிழைகளை திருத்திவிட்டேன்.

நானும் காத்து இருக்கிறேன்
பல நாட்களாய்
என் பிழைகளற்ற கவிதையினை
படைக்க!


//அப்புறம் சின்னதா வேண்டுகோள். அப்ப அப்ப வந்து திருத்துங்க...

//

ராஜி said...

Ahaaha Superb kavidhai..
First time to ur blog through M.Karthik's....

Nice Kavidhai:)

ராஜி said...

En linkum add pannirukkeenga..
Thanks!!

சேதுக்கரசி said...

//நீங்கள் எப்போது மெளனம் கலைப்பீர்கள்?//

அநேகமே இந்த ஆண்டு(ன்னு நினைக்கிறேன் :-)) மௌனம் கலைக்கும்போது நிச்சயம் சொல்றேன்.

//அப்புறம் சின்னதா வேண்டுகோள். அப்ப அப்ப வந்து திருத்துங்க//

என்னாலான உதவியை செய்யறேன். நான் feed readers உபயோகப்படுத்தறதில்ல.. அப்ப உங்க பதிவு வரும்போது எப்படித் தெரியும்? மின்னஞ்சல் அனுப்புவீங்களா?

மணி ப்ரகாஷ் said...

//Ahaaha Superb kavidhai..
First time to ur blog through M.Karthik's....

Nice Kavidhai:)

//

thnks raji, first visiting to my blog.

thnks :)

மணி ப்ரகாஷ் said...

//அநேகமே இந்த ஆண்டு(ன்னு நினைக்கிறேன் :-)) மௌனம் கலைக்கும்போது நிச்சயம் சொல்றேன்//

kandipaa sollunga...

vasika kathu irukerom.

மணி ப்ரகாஷ் said...

//என்னாலான உதவியை செய்யறேன். நான் feed readers உபயோகப்படுத்தறதில்ல.. அப்ப உங்க பதிவு வரும்போது எப்படித் தெரியும்? மின்னஞ்சல் அனுப்புவீங்களா//


minnajgal kattayam anupuren..aana ID?

சேதுக்கரசி said...

என் மின்னஞ்சல் முகவரியை NOT TO PUBLISH னு போட்டு ஒரு பின்னூட்டத்தில் அனுப்பட்டுமா?

மணி ப்ரகாஷ் said...

anupunga..illati mine is

maniprakash.m@gmail.com

Dreamzz said...

ஆஹா!! நீங்களும் நம்ம ஆளா - அதாங்கா தமிழ்க்கவிதை எழுதரீங்களே அத சொன்னேன்!! :)

Dreamzz said...

//அதன் காரணமாய்
விழி திறந்து
உயிர்த்து கொண்டு இருக்கிறது
என் மூச்சு
மெளனமாய் உன் பெயர் சொல்லி..
//

அழகான வரிகள்!!

//என் வெள்ளைக் கருவிழி
வண்ணம் சொல்லுகிறது
நீ உலர்த்திப் போன உன் ஆடைபார்த்து
//
வாவ்!!