Wednesday, March 21, 2007

வழிந்தோடுகிறது வாழ்க்கை பிடித்தமற்று...

நீண்ட(2++++வாரம் ) இடைவெளிக்கு பிறகு திரும்பவும் வலைபக்கங்களில் மணி.மணி.மணி(எக்கோ)...
மக்களே எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளா நான் இந்த பக்கம் வருவது கிடையாது.வேலைப் பளுனு சொன்ன நீங்க நம்பவா போறீங்க. எல்லாரும் நிறைய எழுதி இருப்பீங்க.. எப்ப படிக்கறது????? எப்படி பின்னுட்டம் இடுறது?????
உளறல்(கவித கவித...) ரிலே என்ன ஆச்சுனு தெரியல..யாரு இப்ப உளறிகிட்டு சீசீ ஓடிக்கிட்டு இருக்காங்களோ? இப்ப கவித மாதிரி சொல்லி இருக்கிறது தான் என் கடந்த வார வாழ்க்கை.. அப்புறம் பாசக்கார கோபிநாத் எனக்கொரு ஹோம் ஒர்க் கொடுத்து இருக்காரு.அத ஆராய்ச்சி பண்ணி எழுதனும். சோ, கோபி சாமி எனக்கு கொஞ்சம் டைம் கோடு சாமி..


இயக்கிவிடப் பட்ட
மின்விசிறியாய் சுழலுகிறது
வாழ்க்கை...

கழட்டி எறியப்பட்ட ஆடைகள்
அதனதன் வியர்வை வாசங்களை சுமந்துகொண்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
என் கலைந்துபோன அறையில் ...

மூன்று முறை புதுப்பிக்கப்பட்டும்
படிக்க முடியாமல் போவதை
நினைவுறுத்தியது
நூலக புத்தகத்தின்
முனைமடங்கிய பக்கம்..

எப்போதோ எழுதி வைத்த தலைப்பு
தானாய் கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறது
காற்று வெளிகளில்
விரல்களில்லாமல்...

இருக்கையே படுக்கையாகி அதில்
உறங்கிப்போன பொழுதில்
முகத்தில் அறையும் சூரியனை
காண்பிக்க மறுத்துவிட்டது
என் கைபேசியின் அலாரம்...

உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...55 comments:

Arunkumar said...

வாவ் மணி. ரொம்ப ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க. இங்கயும் அதே நிலமை தாங்கறதால இன்னும் ரசிச்சேன் இந்த கவிதைய...

//
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...
//
எதார்த்தம்.. என்னத்த சொல்ல இத விட... என் இப்போதைய வாழ்க்கையும் இப்பிடித்தான் இருக்கிறது :(

மு.கார்த்திகேயன் said...

எங்கப்பா போன இவ்வளவு நாளா.. பயங்கர ஆணி போல.. மெதுவா வந்து படிக்கிறேன் மணி

Arunkumar said...

//
இயக்கிவிடப் பட்ட
மின்விசிறியாய் சுழலுகிறது
வாழ்க்கை...
//
வாவ்

//
உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...
//
மறுபடியும் வாவ் !!

Arunkumar said...

//
இருக்கையே படுக்கையாகி அதில்
உறங்கிப்போன பொழுதில்
முகத்தில் அறையும் சூரியனை
காண்பிக்க மறுத்துவிட்டது
என் கைபேசியின் அலாரம்...
//
என்னமா யோசிக்கிறீங்க போங்க...

பூச்சி said...

கவிதை ரொம்ப அருமை.

மணி ப்ரகாஷ் said...

//எதார்த்தம்.. என்னத்த சொல்ல இத விட... என் இப்போதைய வாழ்க்கையும் இப்பிடித்தான் இருக்கிறது :( //

ஆமாம்.அப்படித்தான் சரியாய் போய்விடும் இன்னும் சில நாட்களில்......

மணி ப்ரகாஷ் said...

//எங்கப்பா போன இவ்வளவு நாளா.. பயங்கர ஆணி போல.. மெதுவா வந்து படிக்கிறேன் மணி //


ஆமா கார்த்தி.சீக்கிரமா வா..உன் பக்கத்துக்கு வரேன். எழுதி குவிச்சு இருப்பியே,, ...

மணி ப்ரகாஷ் said...

//என்னமா யோசிக்கிறீங்க போங்க//

அருண், என்ன பண்றது அப்படி பண்ணிடுச்சு வாழ்க்கைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

அப்புறம் ஆணி எல்லாம் எப்படி இருக்கு...

வாவ் கு நன்றிபா.. ரொம்ப ரசிச்சு இருப்ப போல....

மணி ப்ரகாஷ் said...

//கவிதை ரொம்ப அருமை. //

ஆகா ,

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி...

ஆமா நீங்க என்ன பூச்சி? பட்டாம் பூச்சியா?

மு.கார்த்திகேயன் said...

ஒவ்வொரு வரியும் அருண் சொன்ன மாதிரி இயல்பானவை.. கல்யாணத்திற்கு முன் பிரமச்சரிய வாழ்கையின் சிதறல்கள்.. கவிதை கலக்கல் மணி.. லேட்டா வந்தாலும் சூப்பரா ஒரு கவிதையோடத் தான் வர்ற மணி

மு.கார்த்திகேயன் said...

//ஆமா கார்த்தி.சீக்கிரமா வா..உன் பக்கத்துக்கு வரேன். எழுதி குவிச்சு இருப்பியே,, //

மணி.. இந்த கிண்டல் தானே வேண்டாம்ங்கிறது :-)

உனக்கென்னப்பா, ஒரு பந்தை அடிச்சாலும் சிக்ஸர் தான் அடிப்பேன்னு அடம்பிடிக்கிற

Syam said...

இந்த ஆணி கஷ்டத்துலயும் ஆணி புடுங்கரது பத்தி கவித எழுதின மணி வாழ்க வாழ்க...:-)

Syam said...

கவிதய பத்தி...அருண் சொன்னதே தான்...வாவ் வாவ் வாவ் :-)

மணி ப்ரகாஷ் said...

@ ஆல்

அலாரம்: தமிழாக்கம் என்ன?

யாரவது சொல்லுங்கப்பா

மணி ப்ரகாஷ் said...

//இந்த ஆணி கஷ்டத்துலயும் ஆணி புடுங்கரது பத்தி கவித எழுதின மணி வாழ்க வாழ்க...:-) //


"முதலைமச்சரின் வாழ்த்து பெற்ற ஒரே அமைச்சர் மணி"னு நான் இனிமே என்னுடைய புரோபைல்ல சேர்த்துக்க போறேன்

Bharani said...

kavidhai super annathe...//உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...
//....my fav lines...enjoyed reading it....

மணி ப்ரகாஷ் said...

//கவிதய பத்தி...அருண் சொன்னதே தான்...வாவ் வாவ் வாவ் :-) //

டாங்க்ஸ்..டாங்க்ஸ்.. இருந்தாலும் உங்க பாணில எதாச்சும் சொல்லுங்க நாட்டாமை


இங்க ஆபீசுல எவ்ள ஆணி பிடுங்கினாலும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறாங்க...

நீங்களாவது பார்த்து ஏதாவது போட்டு குடுங்க...

மழை said...

/கழட்டி எறியப்பட்ட ஆடைகள்/
/நூலக புத்தகத்தின்
முனைமடங்கிய பக்கம்../
/எப்போதோ எழுதி வைத்த தலைப்பு/
/் கைபேசியின் அலாரம்.../
/வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று.../
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.. ஆனாலும் ரொம்ப அழகா சலிச்சுக்கிறீங்க! வாழ்த்துக்கள்!!

Priya said...

Busyngaradha kooda ivlo azhagana kavidhaila solla mudiyuma?? Kalakkitinga Mani..

//உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...
//
Beautiful. Yosichu patha ippa lifela ellarukkum ippadi dhanonu thonudhu.

கோபிநாத் said...

அப்பா!!!! எவ்வளவு நாள் ஆச்சு உங்க்கிட்ட இருந்து இப்படி ஒரு அழகான கவிதையை பார்த்து ;-)))

கோபிநாத் said...

\\ கழட்டி எறியப்பட்ட ஆடைகள்
அதனதன் வியர்வை வாசங்களை சுமந்துகொண்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
என் கலைந்துபோன அறையில் ...\\

இந்த வரிகள் போதும் நீங்க எவ்வளவு ஆணி புடுங்குனிங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு

கோபிநாத் said...

\\உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...\\

என்னாத்த சொல்லறது எல்லாம் HEAD LETTER

கோபிநாத் said...

\\ கோபி சாமி எனக்கு கொஞ்சம் டைம் கோடு சாமி..\\

என்னாது சாமியா???? நான் ஆசாமிங்க ;-))
டைம் தானே எடுத்துக்கங்க ஆனா மறக்கமா பதிவை போடுங்க ஓகே வா ;-)))

ராஜி said...

Ahaha aani pidungura tension laiyum azhaga yosichurukeenga...
Really nice:)
//இருக்கையே படுக்கையாகி அதில்
உறங்கிப்போன பொழுதில்
முகத்தில் அறையும் சூரியனை
காண்பிக்க மறுத்துவிட்டது
என் கைபேசியின் அலாரம்//

Rasicha varigal...Yena namba seyura velai...

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், நல்லாவே எழுதி இருக்கீங்க, உங்களோட வேலைச்சுமையைப் பத்தி. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க புதுசா! என்ன சொல்றது? இன்றைய நாட்களில் அப்படித்தான் இருக்காங்க எல்லாருமே? வாழ்க்கையை எப்போ அனுபவிப்பாங்களோ? தெரியலை எனக்கு!!!!!

மணி ப்ரகாஷ் said...

//Busyngaradha kooda ivlo azhagana kavidhaila solla mudiyuma?? //

Enna panrathu priya, nan solratha kekarathukku enndo blogum nama blog nanbaragalum than thavira vera yarum illa...so kavithai..

athuvum nama anbuvikaratha ezuthrappa ...


ana azagunu sollrenga..ketka santosama irukku

SKM said...

//இயக்கிவிடப் பட்ட
மின்விசிறியாய் சுழலுகிறது
வாழ்க்கை...வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று...//

adhudhan s/w velai.
24/7 mooLaiku velai
adhanal 35 vayadhl vazhukaiyanadhu thalai.
sari sari othukirom yellorum romba velai saireenga endru.Relax.Ingae yarum ungalai marakalai, kovichukali.

மணி ப்ரகாஷ் said...

//அப்பா!!!! எவ்வளவு நாள் ஆச்சு உங்க்கிட்ட இருந்து இப்படி ஒரு அழகான கவிதையை பார்த்து //


thanks Gopinath,

//azakana kavitai... //

appadiya

மணி ப்ரகாஷ் said...

//என்னாத்த சொல்லறது எல்லாம் HEAD LETTER .//

ஆமாம். கோபிநாத்...


//என்னாது சாமியா???? நான் ஆசாமிங்க ;-))
டைம் தானே எடுத்துக்கங்க ஆனா மறக்கமா பதிவை போடுங்க ஓகே வா ;-))) //

கட்டாயம் போட்டுடரேன்

மணி ப்ரகாஷ் said...

//Ahaha aani pidungura tension laiyum azhaga yosichurukeenga...
Really nice:)///


நன்றி ராஜி..நான் இன்னமும் உங்க பக்கத்துக்கு வர முடியல.. வரனும்

//Rasicha varigal...Yena namba seyura velai//

மீண்டும் நன்றி.

மணி ப்ரகாஷ் said...

//ம்ம்ம்ம், நல்லாவே எழுதி இருக்கீங்க, உங்களோட வேலைச்சுமையைப் பத்தி. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க புதுசா! என்ன சொல்றது? இன்றைய நாட்களில் அப்படித்தான் இருக்காங்க எல்லாருமே? வாழ்க்கையை எப்போ அனுபவிப்பாங்களோ? தெரியலை எனக்கு!!!!!

//

நன்றி மேடம். திரும்பி வரென்..ஆமா நீங்க எப்ப இங்க வர்ரீங்க..

/? இன்றைய நாட்களில் அப்படித்தான் இருக்காங்க எல்லாருமே? வாழ்க்கையை எப்போ அனுபவிப்பாங்களோ? தெரியலை எனக்கு!!!!!
//


ம்ம்.இதுதான் வாழ்க்கைனு ஆயிடுச்சு மேடம்...

மணி ப்ரகாஷ் said...

//வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.. ஆனாலும் ரொம்ப அழகா சலிச்சுக்கிறீங்க! வாழ்த்துக்கள்!! //

நன்றி மழை..நீங்க சிறு சிறு துளியா????
இல்லை பெரு மழையா?

ஆமா வாழ்த்துகளா? எதுக்குங்க வாழ்த்துகள்/; புரியலலலலலலலல

மழை said...

//நீங்க சிறு சிறு துளியா????
இல்லை பெரு மழையா?//
சாரல், தூறல், பெரு மழை எல்லாம் தாங்க நான்..
//ஆமா வாழ்த்துகளா? எதுக்குங்க வாழ்த்துகள்/;//
அழகான கவிதை எழுதியதற்கு வாழ்த்துக்கள்!
புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்!
என்னைப்போல அருமையான நண்பர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!(அப்போதான் வாழ்க்கை பிடித்த மற்று வழிந்து ஓடாது.)

ambi said...

excellant mani. me also telling wow! wow! wow!
same blood here! two monthsla nilamai maarum!nu nambaren. let me see. :)

ராஜி said...

//நான் இன்னமும் உங்க பக்கத்துக்கு வர முடியல..//

Paravala porumaya aani yellam pidingi mudichuttu vaanga..

// வரனும்//
Vandhu comments pottu irundheengalae...
Thanks nga comments potathukku in the midst of ur busy schedule...

வேதா said...

/இயக்கிவிடப் பட்ட
மின்விசிறியாய் சுழலுகிறது
வாழ்க்கை.../
அப்பப்ப மின் தடை ஆகிடுது:)(உங்க வலைப்பக்கத்தை தான் சொல்றேன்)

/எப்போதோ எழுதி வைத்த தலைப்பு
தானாய் கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறது
காற்று வெளிகளில்
விரல்களில்லாமல்.../
அருமையான வரிகள் எழுதப்படாத கவிதையை இப்படியும் சொல்லலாமா?:)

/உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று.../
விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்:)

SKM said...

I remember giving a comment for this earlier.Varalaiya?
ippo yenna sollradhu? yellorum sonndhaedhan.velai irupadhai kooda yeppdi ippdi yellam kavidhaiya yosika thonumo? Well done.

வேதா said...

நான் அனுப்பின பின்னூட்டம் எங்க?

மணி ப்ரகாஷ் said...

makkals, innaikuthan nan comment publish panninen.. sorry..

ellathukkum reply panren porumaiya..


skm akka, unga pakkathukku varave illa..sorry

மணி ப்ரகாஷ் said...

//சாரல், தூறல், பெரு மழை எல்லாம் தாங்க நான்//

எனக்கு என்னவாய் இருந்தாலும் மழை பிடிக்கும்..

//என்னைப்போல அருமையான நண்பர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!(அப்போதான் வாழ்க்கை பிடித்த மற்று வழிந்து ஓடாது.) //

நன்றி. வாழ்த்துகளுக்கும் உங்களது நட்புக்கும்.

ஆனா இதுக்கு முன்னாடியே நான் மழை சிநேகத்த பத்தி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் .. பாருங்க. முடிந்தால்..

மணி ப்ரகாஷ் said...

//excellant mani. me also telling wow! wow! wow!
same blood here! two monthsla nilamai maarum!nu nambaren. let me see. :) //


நன்றி அம்பி. இரண்டு மாசத்தில உங்களுக்குதான் வேறு வேலை வந்திடுமே...

வெங்காயம் அறுக்கிறது, காய் கறி வாங்கிறதுனு....

நாட்டாமை வேற அப்ப அப்ப நீங்க பூரி கட்டைய தடுக்கிற மாதிரி கனவு கான்கிறாராம்....

:))))))))

மணி ப்ரகாஷ் said...

//Thanks nga comments potathukku in the midst of ur busy schedule... ///

தாங்க்ஸ் கு தாங்க்ஸ்.. அப்பாடா இப்பதான் நம்ப இமேஜ் கொஞ்சம் ஏறுது... ஹிஹிஹி.....

மணி ப்ரகாஷ் said...

//adhudhan s/w velai.
24/7 mooLaiku velai
adhanal 35 vayadhl vazhukaiyanadhu thalai.
sari sari othukirom yellorum romba velai saireenga endru.Relax.Ingae yarum ungalai marakalai, kovichukali. //


டி.ராஜேந்தர் படம் பார்த்துட்டு வந்தீங்களா?

வசனம் எல்லாம் அடுக்கு மொழியில பிச்சு உதறுது....


அப்பனா என் தலை வழுக்கை ஆவுறதுக்கும் இன்னும் நாள் இருக்கு


தாங்க்ஸ் skm.நீங்க மறக்காம இருக்கிறது மிகவும் நன்றிகள்..

மணி ப்ரகாஷ் said...

//அப்பப்ப மின் தடை ஆகிடுது:)(உங்க வலைப்பக்கத்தை தான் சொல்றேன்)//

மின்சார துறைக்கு மனு கொடுத்துட்டேன். இன்னும் கவனிக்கல.. நீங்க தான் ஆவன செய்யனும்..

//அருமையான வரிகள் எழுதப்படாத கவிதையை இப்படியும் சொல்லலாமா?:)//

:))

/உடம்பில் பட்ட ஷவரின்
நீர்திவலையைப் போல்
வழிந்தோடுகிறது வாழ்க்கை
பிடித்தமற்று.../
விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்:)

ம்ம். ஷவருக்கு பதிலா நீச்சல் குளத்திற்கு மாறிடலாம்னு நினைக்கிறேன்...

மணி ப்ரகாஷ் said...

//I remember giving a comment for this earlier.Varalaiya?
ippo yenna sollradhu? yellorum sonndhaedhan.velai irupadhai kooda yeppdi ippdi yellam kavidhaiya yosika thonumo? Well done.

///

யெஸ். நீங்க அனுபிசிங்க. நானும் அத பப்ளிஸ் செஞ்சேன்..ஆனா அது வரல..இப்பதான் பார்த்தேன்..

உடனே பதில் சொல்ல முடியல..
சாரி.
தாங்க்ஸ்.

மணி ப்ரகாஷ் said...

//நான் அனுப்பின பின்னூட்டம் எங்க? /

வேதா , மின் தடை.. :)

சுப.செந்தில் said...

டைட்டில்லயே அசத்தீட்டீங்ணா!!
பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு

மணி ப்ரகாஷ் said...

//டைட்டில்லயே அசத்தீட்டீங்ணா!!
பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு //

நன்றி செந்தில்.....

CVR said...

Beauty!! :-)

கீதா சாம்பசிவம் said...

saw your posts. cannot able to give comment to your weird post. It says new comments are not allowed by the blog administrator. Why? post is good and why not comments not allowed? anyhow after a long try today I am able to give comments in this page.

Dreamzz said...

50??

Dreamzz said...

//மூன்று முறை புதுப்பிக்கப்பட்டும்
படிக்க முடியாமல் போவதை
நினைவுறுத்தியது
நூலக புத்தகத்தின்
முனைமடங்கிய பக்கம்..//
ம்ம்..

//இருக்கையே படுக்கையாகி அதில்
உறங்கிப்போன பொழுதில்
முகத்தில் அறையும் சூரியனை
காண்பிக்க மறுத்துவிட்டது
என் கைபேசியின் அலாரம்...
//
நல்லா கவித எழுதற்றீங்க மணி சார் :)

Priya said...

என்னது உங்க வியர்டு போஸ்ட்டுக்கு காமெண்ட் போட முடியல? அதுவும் வியர்டா இருக்கட்டும்னு இப்படி பண்ணியிருக்கிங்களா?

Priya said...

என் blog பக்கம் நீங்க வரலனு நினைக்கறேன். உங்கள tag பண்ணியிருக்கேன்.

வரவனையான் said...

//மு.கார்த்திகேயன் said...
எங்கப்பா போன இவ்வளவு நாளா.. பயங்கர ஆணி போல.. மெதுவா வந்து படிக்கிறேன் மணி//ஆமாம், பெரியகடை வீதியில் கே.டி.ஓடி கடையில வாங்கின 4இன்ஞ் ஆணி

:)))))))))))


கார்த்தி நம்மூருகாரங்க நிறைய இருக்கோம் போல வலைபதிவர்களில்