Sunday, April 29, 2007

அசுரனும் அழகுதான்

அழகுகளை பார்த்து, ரசித்து,உள்வாங்கி,அனுபவித்து அதனை அழகாய் எழுதியும் காண்பித்த பிரியா அழகாக இரண்டு நபர்களை (பொற்கொடியையும்,
சத்யபிரியனையும்) எழுத சொல்லிட்டு கடைசியில் இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.அதான் என் மேல ஒரு அதீத நம்பிக்கையில் அசுரனும் அழகுதான் தலைப்பு வைச்சுட்டு நானும் அழகுனு(நீயே சொல்லிகிட்டாத்தான் உண்டுனு நீங்க சொல்றது எல்லாம் கேட்குது கேட்குது) சொல்லி இந்த உரையினை ஆரம்பிக்கிறேன்(இந்த கார்த்தி நம்பள அமைச்சரா அறிவித்ததில் இருந்து இப்படியே ஆயிடுச்சி. ஸ்ஸ்ஸ்ச்ச்ப்பா சோடா பிளீஸ்)

இந்த உலகத்தில் எல்லாமே அழகுதான்.உலகின் எல்லா பகுதிகளிலும்,எங்கேனும், எதோ ஒன்றாய் அழகு ஒளிந்தே உள்ளது. அது அஃறினையோ அல்லது உயர்தினையோ, இயற்கையோ அல்லது செயற்கையோ இல்லை வேறேதேனும் நிகழ்வுகளாகவோ இந்த பிரபஞ்சம் அழகாகத்தான் விரிகிறது.ஆனால் அதனை அனுபவிப்பதும்,அதன் அழகை உணர்வதும் ஒரு வகை கலை.அந்த உணர்வு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.ஆம், அதனால்தான் அசுரனும் என் கண்ணிற்கு அழகாய் தெரிகிறான்.

என் வீட்டு தொட்டிச்செடியினை
கடந்து சென்றபோது
எதிர் வீட்டுக்காரனின்
குரல் சொல்லியது
செடியில் பூத்த மொட்டுகள் அழகாம்..
செடியில் பூ இருந்ததா?
திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்

சன நெரிசலில் கரைந்து போகிறேன்...

இப்படி அழகை தவற விடுபவர்களின் கண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களை என்ன செய்வது?.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது? அவர்கள் சொன்ன அழகினில் சில நானும் அனுபவித்ததுண்டு.இன்னும் சில இனிமேல் அனுபவிக்கும் போது அழகாய் தெரியும்.அவர்கள் விட்டுவிட்ட நான் பார்த்திட்ட,அனுபவித்த அழகினை இங்கு தொட நினைக்கின்றேன்.

என் புலன்கள் உணர்ந்த பல அழகில் சில (ஆறு)


1. "ழ":

தமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து. பார்க்க மட்டும் அல்ல சரியாய் பேசும்போதும்,
அதன் உச்சரிப்பை கேட்கும் போதும் "ழ" அழகுதான்."ழ" என்ற ஒற்றெழுத்துவை மட்டும் இந்த வகைக்குள் அடக்க விரும்பவில்லை. "ழ" வை நான் பேச்சுத்தமிழோடு இணைத்தே பார்க்கிறேன்.கரகர குரலில் அழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுதல் அழகு. அது யாராக இருப்பினும்.(உ.ம்) கலைஞர்,வைகோ,பாரதிராஜா,வைரமுத்து,
பட்டிமன்ற பெண் பேச்சாளர் பாரதி(சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் வரும் பெண் பேச்சாளர். பெயர் சரியா? ஒருவர் காந்திமதி.இவர் இன்னொருவர்) வின் பேச்சுகள் அழகு.
யாழ் தமிழும் ,பிழை இல்லா கேரள தமிழும் மிக அழகுதான்.

2.கிராமத்து திருவிழா:


சண்டை போட்டவன் சமாதானமாகிப் போவதும், சமாதானமாய் இருந்தவன் சண்டையிட்டுக் கொள்வதும், மாமன், மச்சான்,அத்தை,சித்தப்பு,பெரியப்பு, அண்ணன்,தங்ககைகள்,அக்கா,தம்பிகள்,முறைப் பெண் என உறவுகளே ஊராய் திரியும் கிராமத்தின் திருவிழா அழகு. அந்தத் திருவிழா நாட்களில் கவலை மறந்து,வேலை மறந்து களிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கும் கிராமத்து திருவிழா அழகு.ஊர் முழுவதும் குழாய் மைக்குகள், தெருவெங்கும் தோரணங்கள், பெருசுகளின் அரட்டைகள், பறையாட்டம்,கரகாட்டம்,நாடகம்,கறிச்சோறு,மதுநெடி,மாமன்களின் கேலிப் பேச்சு, தாவனி கட்டிய முறைப் பெண்ணின் மஞ்சள் தண்ணி, என கிராமத்து திருவிழா அழகோ அழகு.

3.தீப ஒளி:

சூரிய ஒளி,நிலவின் ஒளி, மின்சார விளக்கின் ஒளி என எல்லா ஒளிகளும் வெளிச்சத்தினை கொடுத்தாலும்,பிரகாசத்தினை தந்தாலும் மிக அழகாய் தெரிவது தீப ஒளியே. என் தோழியின் மூலமாய் நான் உருவ வழிபாடுகளை விட்டு விலகி இருந்த காலங்களில் ஒளியின் மீது இன்னமும் காதல் பிறந்தது. சிலைகளற்ற இடத்தில் வெறும் விளக்கினை மற்றி ஏற்றி ,அதன் சுடர் பிரகாசம் மனதுக்குள் என்னவோ செய்யும் ஒன்று.கார்த்திகை மாதங்களில் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் விளக்கினை ஏற்றி வைக்கும்போது அது நின்று எரியும் அழகினை நானும் நின்று ரசித்திருக்கிறேன்.அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு. மாதா கோயிலின் மெழுவர்த்தி உருகி கரைந்திடுகையில் அதன் அழகு இன்னமும் கூடும்.

4.போராளிகள்:


தனக்கு பின்னால் தன் சமூகம் நலம் பெற வேண்டும்,தான் அனுபவித்த நச்சுக் காற்று மறைந்து தன் சந்ததியினர் நல்ல காற்று சுவாசிக்க வேண்டும் என்பதற்காக போராடும் எல்லா போராளிகளும் அழகானவர்கள்.தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.

5.வெள்ளை வேட்டி/சட்டை/மீசை:

அது என்னமோ தமிழனுக்கு ஒரு கர்வத்தினையும்,அழகினையும் தருவதில் இவைகளே முதலிடம் என்று சின்ன வயதிலிருந்தே ஒரு அழமான நம்பிக்கை.எனக்கு வேட்டி கட்ட சரியாக தெரியாவிட்டாலும் ஒவ்வோரு பண்டிகையின் போதும் நானும் விடா முயற்சியாய் வேட்டி அணிந்துகொள்வேன்.எஜமான்,நாட்டாமை(சியாம் நீங்களும் இப்படித்தான் முறுக்கு மீசை வச்சு,வெள்ளை வேட்டி எல்லாம் கட்டி இருப்பீங்களா?),கிழக்கு சீமையிலே மாதிரியான படங்களை பலமுற நான் பார்த்ததுக்கு இந்த வேட்டி சட்டையும் மீசையும்தான் காரணம். அப்புறம் மீசை. என் அரும்பு மீசை வளரத்தொடங்கியதில் இருந்தே என்னில் அழகாய் நான் கானுவது என் மீசையினைத்தான். பாரதியின் மீசை, எனது அப்பாவின் மீசை என அழகாய் தெரியும் மீசைகள் ஏராளம்.அதே மாதிரி உல்லாசம் படத்தில் விக்ரமின் மீசைக்காகவே "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா "பாடலை பலமுறை பார்த்துள்ளேன். காதல் மன்னன்,உயிரோடு உயிராக படக் காலத்தில் வரும் அஜித்தின் மீசை அழகானது.


6.

என் அன்றாட பொழுது:

அதிகாலை காபி,
அந்திமச் சூரியன்,
அம்மாவின் புண்ணகையினில் மறையும் அவள் கண்ணத்து கோடு,
சாய்வு நாற்காலியில் செய்திகளுடன் உறங்கும் அப்பா,
பழசாகிப் போன பைக்,
இரைச்சலாய் இயங்கும் நகரம்,
டிராஃபிக் சிக்னலில் காணும்
சேலை கட்டிய தேவதைகள்,
எதிர்பாரமல் சந்திக்கும் பள்ளிக் கால நண்பன்,
சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா,
காதில் கரையும் இனியே மெல்லிசை,
உறங்குவதற்கு முன் ஒருமுறையேனும்
நினைத்துவிடும் முதற்காதல்
என இவற்றில் ஏதேனும் ஒன்று
கூடியோ அல்லது குறைந்தோ
அழகாய்த்தான் இருக்கிறது

என் அன்றாடப் பொழுது

சாலையோரக் குழந்தையின்
புண்ணகையினை சுமந்து கொண்டு....

பிரியா, எதோ எனக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு பட்ட ,அனுபவித்த, நம் நண்பர்கள் எழுதாத அழகினை எழுதியுள்ளேன். அதுவும் மிகவும் தாமதமாக.இதற்கு அப்பாலும் இதைப் பத்தி எழுத நம்ப நட்பில யாரும் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியாரவது இருந்தீங்க அப்படினா நான் டேக் பண்ணினதா நினைச்சு எழுதிடுங்க.

'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்"னு நான் எங்கேயோ கேட்டது. அது அப்படியே எல்லாருக்கும் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...


58 comments:

SathyaPriyan said...

//
சேலை கட்டிய தேவதைகள்,
//
ஏங்க ஜீன்ஸ், சுடிதார் எல்லாம் பாக்க மாட்டீங்களா?

//
அழகாய்த்தான் இருக்கிறது
என் அன்றாடப் பொழுது
//
நீங்கள் சொன்ன பிறகு சற்றே மாறுபட்டாலும், எனது பொழுதும் அழகாய் தான் தெரிகிறது.

வேதா said...

ரொம்ப நாளா காணாம போன ப்ரகாஷ் வீடு தான இது? :)
இப்போதைக்கு வருகை பதிவு மட்டுமே மீதி நாளைக்கு வர்ட்டா?:)

மணி ப்ரகாஷ் said...

வாங்க சத்யா,
//ஏங்க ஜீன்ஸ், சுடிதார் எல்லாம் பாக்க மாட்டீங்களா//

எல்லாம் பார்ப்போம்.ஆனா சேலைதான் பெஸ்ட் .. :)

//நீங்கள் சொன்ன பிறகு சற்றே மாறுபட்டாலும், எனது பொழுதும் அழகாய் தான் தெரிகிறது//

இன்னும் அழகாய் இருக்க வாழ்த்துகிறேன்

மணி ப்ரகாஷ் said...

//ரொம்ப நாளா காணாம போன ப்ரகாஷ் வீடு தான இது? :)
இப்போதைக்கு வருகை பதிவு மட்டுமே மீதி நாளைக்கு வர்ட்டா/

எஸ்.அதெ மணிவிலாஸ்- பிரகாஷ் வீடுதான் இது..

நாளைக்கு வாங்க..

Arunkumar said...

மணி
வழக்கம்போல லேட்டா போஸ்ட் போட்டாலும் நச்சுனு போட்டுர்க்கீங்க..

//
அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்
//
இது சூப்பர்.

Priya said...

மணி, சூப்பரா எழுதியிருக்கிங்க..

Priya said...

//இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.//
இதெல்லாம் ரொம்ப ஓவரா உங்களுக்கே தெரியலயா??

//செடியில் பூ இருந்ததா?
திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்
சன நெரிசலில் கரைந்து போகிறேன்...//
கரெக்ட். சின்ன வயசுல எல்லாத்தையும் ஆழ்ந்து ரசிப்பேன். இப்பலாம் நிறைய அழகான விஷயங்களை கவனிக்கறதில்லயோனு எப்பவாவது ரிலாக்ஸ்டா இருக்கும் போது தோணும்.

Priya said...

//ழ":

தமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து//

ஆமா. ஆனா அத சரியா சொல்ல சின்ன வயசுல பெண்ட் எடுத்துட்டாங்க.

//கிராமத்து திருவிழா//
சினிமால ரசிச்சது தான். நேர ரசிக்கற பாக்கியம் கிடைச்சதில்ல.

//அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு.//
ஆமா. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

Priya said...

//தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.//
ஆமா. இந்த தன்னலமில்லாத குணம் ரொம்ப அபூர்வம்.

//என் அன்றாட பொழுது//
கேக்கும் போது தான் தெரியுது. அன்றாட பொழுது எவ்ளோ அழகுனு. எந்த கெட்ட நிகழ்க்கியும் நடக்காத சாதாரண நாள் அழகானது தானே?

மணி ப்ரகாஷ் said...

//மணி
வழக்கம்போல லேட்டா போஸ்ட் போட்டாலும் நச்சுனு போட்டுர்க்கீங்க//

thanks arun.apprum vera enna visesam..busyyyyyaa?

nw post?

மணி ப்ரகாஷ் said...

//இதெல்லாம் ரொம்ப ஓவரா உங்களுக்கே தெரியலயா??//

ha ha ..amam ehtanavathu over?//


//கரெக்ட். சின்ன வயசுல எல்லாத்தையும் ஆழ்ந்து ரசிப்பேன். இப்பலாம் நிறைய அழகான விஷயங்களை கவனிக்கறதில்லயோனு எப்பவாவது ரிலாக்ஸ்டா இருக்கும் போது தோணும்//

ungalukavathau athukku neram irukku..

nama athyyum nenaichu pakrathu illa..

velayum panrathu illa..

ennmo nadakkathu..

மணி ப்ரகாஷ் said...

//சினிமால ரசிச்சது தான். நேர ரசிக்கற பாக்கியம் கிடைச்சதில்ல//

i guess i m lucky.nan athu ellam racichu irukken.anapavichu irukken.

//ஆமா. இந்த தன்னலமில்லாத குணம் ரொம்ப அபூர்வம்.//

yes.ella poraligalum potra pada vendiyavargal...

//எந்த கெட்ட நிகழ்க்கியும் நடக்காத சாதாரண நாள் அழகானது தானே?
//

yes.really , every day is beautiful..

மணி ப்ரகாஷ் said...

naattamai enga poonenga?

nan ungaluka nayan tharava vaichu ellam kavithai eluthinen...

neenga vathu padipeenga appadinu..

neenga innum varala.. :(

மு.கார்த்திகேயன் said...

//"ழ":
//

இது தான் உன் டச் மணி

மு.கார்த்திகேயன் said...

//2.கிராமத்து திருவிழா://

படித்தவுடன் ஒரு கூடை ஏக்கங்கள் மணி.. இன்னும் இரண்டு வாரங்களில் ஊரில் திருவிழா :)

மு.கார்த்திகேயன் said...

/திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்
சன நெரிசலில் கரைந்து போகிறேன்...//

உன் கவிதை படித்து பாக்காத அந்த செடியை பார்க்க முயல்கிறேன் மணி

SathyaPriyan said...

//
naattamai enga poonenga?

nan ungaluka nayan tharava vaichu ellam kavithai eluthinen...

neenga vathu padipeenga appadinu..

neenga innum varala.. :(
//
mantira bedi patam kattinathukke varatha alu, ithukku vanthuduvara?

puthusa yethavathu kaatungka appu :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்

அது மணிப்ரகாஷின் அழகு பதிவாகக் கூட இருக்கலாம்.இருந்தது

மணி ப்ரகாஷ் said...

//படித்தவுடன் ஒரு கூடை ஏக்கங்கள் மணி.. இன்னும் இரண்டு வாரங்களில் ஊரில் திருவிழா //

karthi.innaiku ammavukku phone panninen..annai/anna/appurm veetla ellarum narasingapurathula than irukkangalam..thiruviza nadakkutham karthi...


i m missingn.. enakkum ekkamthan.

மணி ப்ரகாஷ் said...

//உன் கவிதை படித்து பாக்காத அந்த செடியை பார்க்க முயல்கிறேன் மணி//

mmm .karthi athu un kannuku than terium..alaga nalla rasikaravangalukku..

மணி ப்ரகாஷ் said...

//puthusa yethavathu kaatungka appu :-)//

mm avarkku pedichathu ellam nayan than ...

mm vera pakkaanum.telugu la irunthu irakkumathi pannanum..

மணி ப்ரகாஷ் said...

//அது மணிப்ரகாஷின் அழகு பதிவாகக் கூட இருக்கலாம்.இருந்தது
//


thank you sir.

TRC sir..amam, ungal varugiyum ungal comentaiyum pola alagu illamal konjam kamiyaii...


:))

கீதா சாம்பசிவம் said...

mmmmm, oru masathuku oru post nithanama nalla anupavichu podaringa. Nalla post ithu. anal sariya thiraka mudiyalai, thiranathalum pinnutam koduka mudiyalai. ipo template mathi irukinga poliruku. innikku paravayillai. vanathuten. :)

கோபிநாத் said...

அருமை....அருமை...எல்லா அழகும் அருமை ;-)))

கோபிநாத் said...

\\என் அன்றாட பொழுது:\\

இதில் எல்லாமே அழகு ;-)

மணி ப்ரகாஷ் said...

//அருமை....அருமை...எல்லா அழகும் அருமை ;-)))

Sunday, May 06, 2007 8:47:00 AM


கோபிநாத் said...
\\என் அன்றாட பொழுது:\\

இதில் எல்லாமே அழகு ;-)
//

enna gopi, comment ellam comiiya aaiduchuuuuuu.

aaani athigama?

மணி ப்ரகாஷ் said...

//mmmmm, oru masathuku oru post nithanama nalla anupavichu podaringa. Nalla post ithu. anal sariya thiraka mudiyalai, thiranathalum pinnutam koduka mudiyalai. ipo template mathi irukinga poliruku. innikku paravayillai. vanathuten. :) //

madam nethu nan template mathikitu irunthen,athanal oruvela appai irukkalam..

amam medam neriya ezhuthanum appdinu than nenaikiern..but ezutha aarambikkum pothu somberithanam vanthuduthu...

maranum..

apprum thanks foru ur comments even in yur buzy aani pidungal

Anonymous said...

mudhal paraliye ullkuthaa esamaan?? meedhiya vandhu padikiren! kaila paint kaayudhu :D

-porkodi

Syam said...

template super mani :-)

Syam said...

//அதன் உச்சரிப்பை கேட்கும் போதும் "ழ" அழகுதான்//

ரொம்ப சரி....வாலபழம் னு கெக்கறதுக்கு பதிலா வாழைபழம் னு கேட்டா நல்லா இருக்கும் :-)

Syam said...

ஆறு அழகும் சூப்பர் மணி....அதிலும் போராளி, தினசரி அழகு ரொம்ப அருமை....:-)

Syam said...

//சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா//

தமிழகத்தின் விடிவெள்ளி, வருங்கால நிறந்தர முதல்வர்...எங்கள் தானை தலைவிய பத்தி சொல்லி அசத்திட்டீங்க :-)

Dreamzz said...

/'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்"//

நச்சென்று சொல்லி இருக்கீங்க! மிக உண்மை!

Dreamzz said...

எல்லாரும் எல்லாரும் சொல்லுவதை சொல்லுகையில், வித்தியாசமா மட்டும் இல்லாமல், சிந்திக்க வைப்பதாகவும் சொன்னது அழகு தான்!

Dreamzz said...

துவும் முதல் அழகா ழ வ சொன்னீங்க பாருங்க! சூப்பர்!

Syam said...

//எங்கள் தானை தலைவிய பத்தி சொல்லி அசத்திட்டீங்க //

தப்பு நடந்து போச்சு மணி தப்பு நடந்து போச்சு...நம்ம தானை தலைவினு சொல்லி இருக்கனும்....:-)

ambi said...

யாருமே சொல்லாத அழக எல்லாம் சொல்லிய எங்கள் அமைச்சர் மணி வாழ்க! வாழ்க!
(இப்புடி தான் தொண்டர்கள் ஆரம்பிபாங்க) :)

ambi said...

அழகிய அசுரா! அழகிய அசுரா!னு யாரேனும் பாடுவாங்களா?னு வலைய விரிக்கிறான்! வலைய விரிக்கிறான். :)

Kavitha said...

"ழ", கிராமத்து திருவிழா, தீப ஒளி, போராளிகள், வெள்ளை வேட்டி/சட்டை/மீசை, அன்றாட பொழுது -- ellame azhagana vishayangal! adhai neenga sollirukka vidhamum arumai!

SKM said...

wow!Wow!a different azgagu."ழ" nijamavae your choice is unexpedted,But it is true.yenakku yaaravadhu ."ழ" vai kolai saidhu pesum bodhu udabellam goosebumps vandhudum.

SKM said...

your template is very nice Mani.

ராஜி said...

'//அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்//

Nice lines...

பொற்கொடி said...

ellame romba azhagu :-) azhagana raatchasiye nu valaiya virichadhu naan illai nee thaan nu ambiku thelivu paduthaliya?? enna neenga!

Abi said...

உங்களுடைய இந்தப் பதிவும் மிக அழகு.
உங்களுடைய அழகு வரிசையில் போராளிகளின் போர்க்குணமும் இருந்தது,சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாராவும் இருந்தது, திருவிழாவும் இருந்தது ,தீப ஒளியும் இருந்தது.எல்லா விதமான அழகும் சேர்ந்து இந்த பதிவு மிக அழகாக இருந்தது .

"அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்" :-அழகு...,

கீதா சாம்பசிவம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணிப்ரகாஷ், சொல்லவே இல்லையே?

மணி ப்ரகாஷ் said...

anaivarukkum nanri... nan ellarukkum pathil methuva ezuthuren.

மணி ப்ரகாஷ் said...

//mudhal paraliye ullkuthaa esamaan?? meedhiya vandhu padikiren! kaila paint kaayudhu :D

-porkodi //


அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், பொற்கொடி வந்துட்டாங்க..வாங்க.வாங்க..

உள்குத்தா? அப்படினா என்ன கொடி. i m innocent paa.... :D


puthu ooru., puthu vaalaki,puthu paintu... kodi kalakkeeernaga...

மணி ப்ரகாஷ் said...

//template super mani :-) //

danq naatamai

//ஆறு அழகும் சூப்பர் மணி....அதிலும் போராளி, தினசரி அழகு ரொம்ப அருமை/

நன்றி..

//தமிழகத்தின் விடிவெள்ளி, வருங்கால நிறந்தர முதல்வர்...எங்கள் தானை தலைவிய பத்தி சொல்லி அசத்திட்டீங்க :-) //

உங்களுக்காகவெ நான் எழுதிய வரிகள் அது.

உண்மை.உண்மை.. நேத்து " ஒரு வார்த்தை சொல்ல..." பாட்டு பார்த்தேன்.. ,என்ன அழகு..என்ன அழகு....

மணி ப்ரகாஷ் said...

//நச்சென்று சொல்லி இருக்கீங்க! மிக உண்மை!//

//துவும் முதல் அழகா ழ வ சொன்னீங்க பாருங்க! சூப்பர்!//


//எல்லாரும் எல்லாரும் சொல்லுவதை சொல்லுகையில், வித்தியாசமா மட்டும் இல்லாமல், சிந்திக்க வைப்பதாகவும் சொன்னது அழகு தான்! //


நன்றி டீரிம்ஸ்..ஆனாலும் நீங்க எழுதற கவிதையில வர்ர ஒவ்வொரு எழுத்தும் அழகுதான்..அதுக்குத்தான் இப்ப போட்டி போடுரேன்.

மணி ப்ரகாஷ் said...

//தப்பு நடந்து போச்சு மணி தப்பு நடந்து போச்சு...நம்ம தானை தலைவினு சொல்லி இருக்கனும்....:-)/

பல அரசியல் பணிகளுக்கு இடையில் கள உரை ஆற்றியதனால் வந்த களைப்பே இது...

மணி ப்ரகாஷ் said...

//யாருமே சொல்லாத அழக எல்லாம் சொல்லிய எங்கள் அமைச்சர் மணி வாழ்க! வாழ்க/

சக அமைச்சரை பாராட்டும் அம்பியின் அழகை பாருங்கள் எனதருமை தமிழ அரசு அமைச்சர்களே.. இதனை பார்த்தாவது திருந்துங்கள்...

மணி ப்ரகாஷ் said...

//அழகிய அசுரா! அழகிய அசுரா!னு யாரேனும் பாடுவாங்களா?னு வலைய விரிக்கிறான்! வலைய விரிக்கிறான். :)/


ஆமாம் அம்பி..கொஞ்சம் நெளிவு சுளிவு எல்லாம் சொல்லி குடுங்க ..நீங்க தான் இதுல எனக்கு குருஜி..

மணி ப்ரகாஷ் said...

//ellame azhagana vishayangal! adhai neenga sollirukka vidhamum arumai! //

நன்றி கவிதா..

மணி ப்ரகாஷ் said...

//wow!Wow!a different azgagu."ழ" nijamavae your choice is unexpedted,But it is true.yenakku yaaravadhu ."ழ" vai kolai saidhu pesum bodhu udabellam goosebumps vandhudum. //

தாங்க்யூ.தாங்க்யூ..உங்களுக்கும் ழ மேல இவ்வளவு காதலா...

//your template is very nice Mani. //

தாங்க்ஸ் ...

மணி ப்ரகாஷ் said...

//Nice lines... //

இரண்டே வார்த்தைகள் தானா?.. எம்பூட்டு எழுதி இருக்கேன்..கொஞ்சம் பார்த்து போட்டு குடுக்க கூடாதா?

மணி ப்ரகாஷ் said...

//ellame romba azhagu :-) //

தாங்க்ஸ் கொடி

//azhagana raatchasiye nu valaiya virichadhu naan illai nee thaan nu ambiku thelivu paduthaliya?? enna neenga! //

.. அதுதான் ஊரரிஞ்ச விசயமாச்சேனு விட்டுட்டேன்... :(

மணி ப்ரகாஷ் said...

//உங்களுடைய இந்தப் பதிவும் மிக அழகு.
உங்களுடைய அழகு வரிசையில் போராளிகளின் போர்க்குணமும் இருந்தது,சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாராவும் இருந்தது, திருவிழாவும் இருந்தது ,தீப ஒளியும் இருந்தது.எல்லா விதமான அழகும் சேர்ந்து இந்த பதிவு மிக அழகாக இருந்தது .

"அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்" :-அழகு..., //

நன்றி அபி..

வாழ்வு ல எல்லாமெ கலந்து சரிவிகிதமா அமைஞ்சுட்டா எப்படி இருக்கும்...

நன்றி அபி...

மணி ப்ரகாஷ் said...

//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணிப்ரகாஷ், சொல்லவே இல்லையே? /

நீங்க கேட்கவே இல்லையே.... :(

வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி தலைவி..