Thursday, May 17, 2007

எனக்கு இப்பொழுதுதான் தெரியும்


"பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிறவிச்சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தமானது. அதில் ஒரு எண்ணம் உதிக்குமானால், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்"

சி. கணபதிப்பிள்ளை,யாழ்பாணம்


பாரதி பற்றிய ஒரு புத்தக உரையில் இவ்வாறே எழுதி இருக்கிறார்.அது எத்துனை உண்மையென்பது அவரது கவிதையின் வாசிப்பினில் புரியவரும். பாரதியின் பல்வேறு பாடல்களை வாசித்து கேட்டு இருந்தாலும் அவரது இந்த பாடலை பற்றிய சிறப்பு எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.மதுரையிலிருந்து வெளிவந்த விவேகபானு என்னும் இதழில் 1904 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வெளி வந்த இந்த பாடலே மகாகவியின் அச்சேறிய முதற்கவிதை.


தனிமை இரக்கம்


குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி

பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்து பின்

இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்

குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்

மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்

பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ?

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா

மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்

முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

வளியெனப் பறந்த நீர் மற்றியான் எனாது

கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்

செயலையென் இயம்புவல் சிவனே!

மயிலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?டிஸ்கி1:


இது பாரதி பற்றிய எனது தேடலின் பகுதி.எனக்கு தெரியாததினை அறியும் பகுதி என்பதால் இதில் ஏதேனும் தவறு இருப்பின் என் தவறினை சரிசெய்யவும்.


டிஸ்கி2:

இன்று திருமண நாள் கொண்டாடும் தலைவி கீதாமேடம் அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்து பரிசாய் இந்த பதிவு.ஆம் அவர்களுக்கு திருமண நாள் மே-17 (வருசம் எல்லாம் கேட்க கூடாதுனு சொல்லிட்டாங்க)என்று எனக்கு இன்றுதான் தெரியும்.அதற்கும் சேர்த்துதான் இந்த தலைப்பு.
-----

29 comments:

பொற்கொடி said...

avanga thirumana naal seri unga pirandha naalame!! vazhthukkal :-) many more happy returns mani :-)

பொற்கொடி said...

photova satunu paatha yaaru idhu sambu maama geetha paatiya nu thoniduchu! (avar maama ana avanga paati nijamave koduma thaan!) nalla poruthama irukku ille? :-)

மணி ப்ரகாஷ் said...

@கொடி ..

இவ்வளவு ஃபாஸ்டா...

//pirandha naalame!! vazhthukkal :-) many more happy returns mani :-) //

தாங்க்ஸ் பொற்கொடி...

மணி ப்ரகாஷ் said...

//photova satunu paatha yaaru idhu sambu maama geetha paatiya nu thoniduchu! (avar maama ana avanga paati nijamave koduma thaan!) nalla poruthama irukku ille? :-) //

தேடிக் கண்டு பிடிச்சது போட்ட போட்டா இல்ல... :))

//avar maama ana avanga paati nijamave koduma thaan!) //

என்ன கொடுமை (சாம்பு)சார் இது னு சொன்ன கரேக்டா இருக்குமா??

SKM said...

Happy Birthday manninMaidharae.

KK said...

Mani saar Happy B'day!!!

SKM said...

@Porkodi:
//photova satunu paatha yaaru idhu sambu maama geetha paatiya nu thoniduchu! //
unakku ??!!:D LOL!

வேதா said...

பாரதியின் தேடலில் இது போல பல புதிய செய்திகள் நமக்கு கிடைக்கும் பொக்கிஷமே. பகிர்ந்தமைக்கு நன்றி ப்ரகாஷ் :) பாடலில் சில வரிகள் புரியவில்லை கொஞ்சம் விளக்கமும் கொடுக்கலாம் அல்லவா :)

வேதா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரகாஷ் :) காபி மட்டும் போதாது விருந்தும் வேண்டும் :)

Naren's said...

Hi i am a regular reader of your blog. You got some nice postings and a great gang. Jus wanted to share my blogspace http://narenmuse.blogspot.com with you. keep blogging. Have anice day.

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி,அ.வ.சி. ரொம்பவே நல்ல போஸ்ட். எனக்குத் தான் கொஞ்சம் வேலை அதிகம்னு வரவே முடியலை. இதை விட அதிகமாய் என்னைப் பெருமைப் படுத்தி இருக்க முடியாது.இதுக்கு நன்றியெல்லாம் கிடையாது.

கீதா சாம்பசிவம் said...

தேடுங்கள், கிடைக்கும். வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

//Happy Birthday manninMaidharae//

உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்Kம்.

@KK
//Mani saar Happy B'day!!! //

மணி சாரா?? KK நான் ரொம்ப சின்ன பையன், மணி என்றே கூப்பிடலாம்..

அப்புறம் இப்பத்தான் first vist panrenga.. thanks

thnks for ur wishes...

மணி ப்ரகாஷ் said...

//unakku ??!!:D LOL! //

athu than பொற்kodiyen Style..


//பாரதியின் தேடலில் இது போல பல புதிய செய்திகள் நமக்கு கிடைக்கும் பொக்கிஷமே. பகிர்ந்தமைக்கு நன்றி ப்ரகாஷ் :) பாடலில் சில வரிகள் புரியவில்லை கொஞ்சம் விளக்கமும் கொடுக்கலாம் அல்லவா :)//

எனக்கும் சில வரிகள் புரியவில்லை..திரும்ப திரும்ப படிக்கிறேன்... :(


கோனார் உரை வைத்தே படித்து பழகியாச்சா? அதான் எனக்கும் தெரியல..


தலைவிகிட்டத்தான் கேட்கலாம் என்று இருக்கிறேன்...அவங்க ஃபிரியா ஆகட்டும்னு வெயிட்டிங்....

மணி ப்ரகாஷ் said...

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரகாஷ் :) காபி மட்டும் போதாது விருந்தும் வேண்டும் :) //

கண்டிப்பாக விருந்தும் உண்டு..என்ன நான் சமைக்கிற உணவுதான் ..அட்ஜஸ்ட்ட்ட் பண்ணிகங்கோ....

மணி ப்ரகாஷ் said...

//Hi i am a regular reader of your blog. You got some nice postings and a great gang. Jus wanted to share my blogspace/


thaks 4 comnt and your info.

மணி ப்ரகாஷ் said...

//இதை விட அதிகமாய் என்னைப் பெருமைப் படுத்தி இருக்க முடியாது///


தலைவியின் புகழ் பாடுதலே இந்த தொண்டனின் வேலை..

:))

மணி ப்ரகாஷ் said...

//தேடுங்கள், கிடைக்கும். வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி...

SathyaPriyan said...

My best wishes Mani.

மு.கார்த்திகேயன் said...

கீதா மேடம் பற்றவைத்த பாரதி தீ இப்போ மெல்ல இங்கே வரை பரவிடுச்சு போல மணி

மு.கார்த்திகேயன் said...

தேடல் அருமை, மணி.. இப்படி புதியதொரு புதையலே கிடைத்திருக்கிறது.. நான் சேமித்த பாரதி புத்தகங்கள் எல்லாம் எனது வீட்டு அலமரிகளில் கிடக்கின்றன..

அதனால் இந்தியா தொடும் வரை இப்படி பாரதியை பார்த்தால் உண்டு.. நடக்கட்டும் நடக்கட்டும் மணி

மணி ப்ரகாஷ் said...

thanks sathya,

மணி ப்ரகாஷ் said...

thala kaarthi ennapa aalave kanom..?

busy,,too busya?


un alamariyala ivlo book irukka,,iru oorukku varen

Dreamzz said...

வாவ்! அடுத்த பகுதி எப்போ? Thanks for the info

பொற்கொடி said...

knock knock! yaarupa inga aala kaanom??

கீதா சாம்பசிவம் said...

இன்னுமா பாரதியைத் தேடிட்டு இருக்கீங்க? எங்கே உங்களை எல்லாம் ஆளே காணோம்னு பார்த்தால், ப்ளாக் யூனியனில் பதிவு போட்டுட்டு இருக்கீங்க? :P

கீதா சாம்பசிவம் said...

எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :)))))))))

கீதா சாம்பசிவம் said...

ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசி போல் வருவேன்
நாளைக்கு நீ வந்து "எட்டு" பதிவு போடும்வரை விட மாட்டேன்." :)))))))
எம்.எஸ்.வி. குரலிலே பாடிக்கிட்டே எல்லாரும் எட்டு போடுங்க!

மணி ப்ரகாஷ் said...

தாமதங்களுக்கு அனைவரும் மன்னியுங்கள்...


தாமத காரணங்களை விரைவில் அறிவீர்கள்.....