Wednesday, July 25, 2007

சின்சினாட்டியில் என்ன நடந்தது?

சின்சினாட்டியில் நடந்தது என்ன அப்படினு இதற்கு முந்தைய பதிவில் கேட்டதற்கான விடை இதோ.. எல்லாரும் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்த பதில் இதோ... ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாதுதான் என்ன பண்றது..அப்படியே பழகியாச்சு...நான் குப்பை கொட்டும் (அ) பொட்டி தட்டும் எனது தாய் அலுவலகம் இங்கு சின்சினாட்டியில் தனது வருடாந்திர விழா (சின்ஸேசன்-2007 )வினை கொண்டாட பல ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாட முடிவு எடுத்து இருந்தது. அதுக்குனு ஒரு குழுவ போட்டு நீ பாட்டு பாடுவியா. நீ டான்ஸ் ஆடுவியா. நீ மீயுசிக் பண்ணுவியா னு கிளையண்ட் ஆப்பிஸில் வேலை பார்த்துகிட்டு இருக்கும் போது(யாரு அது... தமிழ் மணம்,வலைப் பக்கம் படிக்கிறதா அப்படினு கேட்கிறது. நான் என்ன பொற்கொடியா.பாயிண்டர்ஸ் படிக்கிறேனு சொல்லிட்டு தேடித்தேடி பிளாக் படிக்க..)வெறும் மெயிலா அனுபிச்சாய்ங்க.. நாமளும் எத்தன நாள்தான் பொறுத்துப் பார்க்கிறது. (விதி வலியது சொன்னா யார் நம்புறா?). ம்ம்..ஐ யாம் ரெடி ஃபார் டான்ஸ் னு சொல்லிட்டேன்... சொன்ன உடனெ ஆகா வந்துட்டாண்டா ஒரு நல்ல டான்சர் அப்படினு நினைச்சுகிட்டு உடனே கூட்டத்த கூட்டிட்டாங்க.. அங்க போனத்தான் தெரிஞ்சது இருக்கிறதே ஒருவாரம்தான் அதுல நீ பிராக்டீஸ் பண்ணி ஆடனும் அதுவும் குழுவாய்..இதுல என்ன பாட்டுக்கு ஆடலாம் னு கேட்டா ஹே மெரி தில்...னு ஒருபாட்டு,,தஸ் பகானெ கர் கே மே தில் தில்ல்...அப்படினு இன்னும் ரெண்டு ஹிருத்திக் பாட்ட எடுத்து வைச்சுகிட்டு ஒரு குருப் உக்காந்து இருக்காங்க. டேய் என்னடா விளையாடுறீங்களா, இது எல்லாம் நியாயமா?ஹிருத்திக் பாட்டுக்கு ஆடுர உடம்பாட என்னோடது .. எதோ. கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா அப்படினு ஒரு பாட்டோ, இல்ல டான்ஸ் ஆடத் தெரியா அபிஷேக் பச்சன் பாட்டோ போட்டீங்க அப்படினா நான் ஆடலாம்னு வந்தேன்..நீங்க என்னடான விவரம் புரியாமல்,அதுவும் ஒரே வாரத்தில் .. சாமி ஆள விடுங்கடானு ஸ்கேப் ஆனா , என் அலுவலக தோழி ரம்யா டேய் மணி நம்ப தமிழ் பாட்டு போடலாம்..என்ன சொல்ற அப்படினு கேட்க ஆஹா இது நல்லா இருக்கேனு சொல்லி பாட்டு தேட ஆரம்பிச்சோம்... கடைசியில் எல்லாரையும் அதிர வைக்கனும்..ஆட வைக்கனும் னு நினைச்சு எல்லாரையும் ஆட வைக்கிற " மன்மத ராசா மன்மத ராசா" வ தேர்ந்தெடுத்தோம்.. (அம்பி, இந்த பாட்டுல சாய "சிங்" வர்ரதா பார்த்துட்டு நீங்க ஆசையில இன்னும் அய்ய்ய்ய்ய்னு எல்லாம் சொல்லாதீங்க..அப்புறம் தங்க்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா ஒரு பூரிக்கட்டை த்ரோ கிடைக்க போகுது).

ஒகேனு நான், ரம்யாகோபால், விஜய் பரமார் மற்றும் சிமந்தனி வான்கடே னு நாலு பேர் பிராக்டிஸ் பண்ணினொம்.ஆனா நம்ப மத்த குரூப்ல இருந்து கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம் அப்படினு சொல்லி பாட்டு முடியறப்ப நம்ப தலையோட வசனத்த சொல்லாம்னு நானூம் விஜய்யும் முடிவு பண்ணினோம்.. அவனுக்கு தமிழே தெரியாட்டினாலும் சிவாஜி படத்த எனக்கு முன்னாடி முதல் ஷோ பார்த்திட்டு வந்தவன். நல்ல கிடாரிஸ்ட்.. (வெள்ளை பூக்கள் பாட்ட அருமையா பிளே பண்ணினான். எனக்காக தனியா அவ்ன் வீட்ல.. ) சோ அவனுக்கு தமிழ் உச்சரிக்க சொல்லிகொடுத்துட்டு டான்ஸ் கத்துகிட்டோம்.. இனிமையான அனுபவம்...

அமெரிக்காவில் , அதுவும் கிட்டத்தட்ட 100 நபர்களில் ஒரு பத்து,பதினைந்து நபர்களைத் தவிர தமிழ் தெரியாத இடத்தில் ,அதற்கு முன்னமே பல்வேறு நிகழ்வுகளை பார்த்துட்டு உணவுக்காக காத்திருந்த வேளையில் மன்மத ராசா ... மன்மத ராசா அரங்கேறியது... நிஜமாகவே சொல்லுகிறேன். இசைக்கு மொழி தேவையில்லை... கேட்கும் திறனும், ரசிக்கும் திறனும் இருந்தால் போதுமானது.மொழிகள் பேச்சு இழந்து போயின..ஆம் எல்லாராலும் திரும்பவும் ஒன்ஸ் மோர் கேட்கும் அளவிற்கு எல்லாரையும் கவர்ந்தது. திரும்பவும் ஆடினோம். ஆட்டுவித்தோம் உடன் இருந்த பார்வையாளர்களையும் சேர்த்து.

ஆம். இசை வரைகளற்றது.
இதுதான்பா சின்சினாட்டியில் நடந்தது..அப்பாடி ஒருவழியா முடிச்சாச்சு... ச்சோடா பிளிஸ்..


இன்னும் சில தகவல்கள்:

1. ஒருவேளை நாங்கள் வேறு வைகையான பாட்டினை( தமிழ் டிஸ்கோ, பரத நாட்டியம் ,,)தேர்ந்து எடுத்து இருந்தோம் என்றால் இந்த வகையான வரவேற்பினை பெற்று இருந்து இருக்க மாட்டோம். கிராமிய மணம் தனி மனம்தான்.
2. பார்க்க எளிமையாக இருந்தாலும் ஒவ்வோரு வார்த்தைகளுக்கும் நடன அமைப்பு இருந்த பாடல்.தனுஸ்,சாயசிங் உண்மையிலேய சாவலை சந்த்திது சிறப்பாக செய்த நடனம் இது.

3. இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக நான் நடனம் ஆடி இருப்பேன்.. ஆம். இன்னும் கொஞ்சம் திருத்திய முகபாவணைகளுடன்.
4. இந்த பாட்டினை தேர்தெடுத்த ரம்யா, ரம்யாவின் கணவர் கோபால் பட், மற்றும் என்னுடன் நடனம் ஆடிய விஜய் பரமார், சிமந்தனி வான்கடே(தமிழ் தெரியாமல் ) ஆகிய நண்பர்களுக்கு நன்றி. அதிலும் விஜயின் பணி சிறப்பானது.

ரொம்ப பெரிய பதிவா போயிடுச்சே.. ஆமாம் ஆமாம் சுயவிளம்பரம் என்றால்..அப்படித்தான்.(பிழைகளுக்கு வருந்துகிறேன்.அவசர கதியில் இட்டது)
போட்டாக்களை இங்கே பார்க்கலாம்(போட்டா எண் 95லிருந்து நம்பது தான்)சாம்பிளுக்கு சில
(விஜய், சிமந்தனி, ரம்யா, நான்)

12 comments:

Arunkumar said...

chumma adhurudille :)

கோபிநாத் said...

நான் தான் பர்ஸ்ட் :)))))

கோபிநாத் said...

\மன்மத ராசா ... மன்மத ராசா அரங்கேறியது... \\

அப்படி போடு தல....அட அட என்ன பாட்டு என்ன டான்ஸ் ;-))))

கலக்கியிருக்கிங்க ;-)))

கோபிநாத் said...

\\போட்டாக்களை இங்கே பார்க்கலாம்(போட்டா எண் 95லிருந்து நம்பது தான்)\\

தல...படத்தை பார்க முடியல...Shared pictures not available இப்படி வருது ;-(((((

கோபிநாத் said...

\\(விஜய், சிமந்தனி, ரம்யா, நான்)

உங்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகள் ;-)))

மணி ப்ரகாஷ் said...

@Arun

//chumma adhurudille :) //

mmm. ne than miss pannita pakkama.

மணி ப்ரகாஷ் said...

//நான் தான் பர்ஸ்ட் :))))) //

கோபி, அருண் முந்தியாச்சு..

//அப்படி போடு தல....அட அட என்ன பாட்டு என்ன டான்ஸ் ;-))))

கலக்கியிருக்கிங்க ;-))) //

என்னோட டான்ஸா இல்ல ஒரிஜினலுக்கான கமேண்டா?

///தல...படத்தை பார்க முடியல...Shared pictures not available இப்படி வருது ;-((((( ///

மாத்திட்டேன்..இப்ப பார்க்கலாம்...

மணி ப்ரகாஷ் said...

//உங்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகள் ;-)))
/

DanQ

வேதா said...

நேத்தே வந்து பார்த்தேன் ஆனா கமெண்ட் போடல அதனால் நாந்தான் பர்ஸ்ட் :)

வேதா said...

சூப்பர் மன்மத ராசா பாட்டுக்கு டான்ஸ் ஆடி நம்ம தமிழ்நாட்டு பெருமையை காப்பாத்திட்டீங்க :) ஆனா இந்த மாதிரி கும்பலில் டான்ஸ் ஆடும் போது இந்த மாதிரி குத்து பாட்டு தான் நல்லா வொர்க் ஒவுட் ஆகும் :)

ambi said...

superrrrrrrr. naan kooda antha paatuku munthina companyla aadi irukken.

(kooda yaaru aadinaa?nu solla maattten) :p

//அப்புறம் தங்க்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா ஒரு பூரிக்கட்டை த்ரோ கிடைக்க போகுது//

avvvvvvvvvvvvvvvvvvv unmai unmai! :)

U pple had done a good job. congrats to entire team. :)

கீதா சாம்பசிவம் said...

mmmmmm nalla irukku, ellaame, athan cincinaattiya vitutu udane odaringala?:p