Monday, July 23, 2007

சின்சினாட்டியில் வலைப் பதிவர்கள் சந்திப்பு

என் இனிய பி.மு கழக மக்களே,
இந்த பிரியத்திற்குரிய பிரகாஷ் உங்களுக்காக நமது கழகத்தின் காலத்தில் அழியா நிழற் படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதில் பெருமை அடைகிறேன்..







சந்திப்பு ஏற்பாடு செய்த "கிளிவ்லேண்ட் ஹீரோ,வலைஉலகத்தின் காமடி புயல்,மதுரை மாப்பிள்ளே, ருண்..





சந்திப்பை சிறப்பாக்கிய பி.மு.க நிறுவனர் ,
கொலம்பஸ் கதாநாயகன், கனவுலக கார்த்தி








அரங்கம் தேவையில்லை ,வாயிலே போதும் என்று கூட்டத்தை தொடங்க உத்தேசித்த கட்சிக்குழு!!!! (கார்த்தி,அருண்,நான்)



கரைவேட்டி இல்லை, காலில் விழும் கலாச்சாரம் இல்லை... கொள்கையே முக்கியம்...
சந்திப்புக்கு பின் உறவினை மேம்படுத்த நடந்த சமபோஜன பந்தி... !!!


இது முற்றிலும் வித்தியாசமான வலைபதிவர்கள் சந்திப்பு. என்ன நடந்தது,என்ன பேசினோம் என்பதை நான் சொல்லுவதனை விட உடன் பங்குகொண்ட நமது கழக தலைகள் சொன்னால்தான் அதில் மிகுந்த சுவராசியம் இருக்கும் என்பதால் அதனை அவர்களிடம் விட்டு விடுகிறேன்...
குறிப்பு: இதுக்கு முன்னாடி போடுவதாய் இருந்த சின்சினாட்டியில் நடந்தது என்ன? என்ற பதிவு அடுத்த பதிவாய்....

21 comments:

வேதா said...

/உங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதில் பெருமை அடைகிறேன்.. /
அதெல்லாம் நீங்க முடிவு பண்ணக்கூடாது அது விருந்தா இல்லையான்னு நாங்க தான் சொல்லணும் :)

வேதா said...

/கிளிவ்லேண்ட் ஹீரோ,வலைஉலகத்தின் காமடி புயல்,மதுரை மாப்பிள்ளே, அருண்../
அருண் உங்க பிறந்தநாளுக்கு நீங்க இன்னும் ட்ரீட்டே தரல அதுக்குள்ள் என்ன கட்சி மீட்டிங் வேண்டிக்கிடக்கு? :)

வேதா said...

/பி.மு.க நிறுவனர் ,கொலம்பஸ் கதாநாயகன், கனவுலக கார்த்தி/
தலைவரே நீண்ட நாட்களாக தங்களை காணாததால் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று கட்சியை மேம்படுத்தியிருப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன் :)

வேதா said...

/வாயிலே போதும் என்று கூட்டத்தை தொடங்க உத்தேசித்த கட்சிக்குழு!!!!/
யார் வீட்டு வாயில் இது?

வேதா said...

/இது முற்றிலும் வித்தியாசமான வலைபதிவர்கள் சந்திப்பு. /
இதிலென்ன வித்தியாசம்? :)

/என்ன பேசினோம் என்பதை நான் சொல்லுவதனை விட உடன் பங்குகொண்ட நமது கழக தலைகள் சொன்னால்தான் அதில் மிகுந்த சுவராசியம் இருக்கும் என்பதால் அதனை அவர்களிடம் விட்டு விடுகிறேன்... /
சீக்கிரம் வந்து சொல்லுங்கப்பா :)

Arunkumar said...

First aa?

irundhaalum ivalo hype-u thevaya ? :)

பொற்கொடி said...

aha kolgaila pidiya thaan irukinga!! :-)

கீதா சாம்பசிவம் said...

அட, சொல்லவே இல்லையே, என்ன என்னமோ நடக்குது? என்னையும் கூப்பிட்டிருந்தா வந்திருப்பேனே? :P

கோபிநாத் said...

\\ு!!!! (கார்த்தி,அருண்,நான்)\\

.ஆமா...அது என்ன நீங்க இருக்குற படம் மட்டும் பெருச இல்லையே....இதுல ஏதே உள்குத்து இருக்கு ;-)

கோபிநாத் said...

\\மதுரை மாப்பிள்ளே, அருண்..\\

அப்ப பெண்ணு மதுரையா?....அருண் சொல்லவேல்ல பார்த்திங்களா ;-)

கோபிநாத் said...

\\சந்திப்பை சிறப்பாக்கிய பி.மு.க நிறுவனர் ,கொலம்பஸ் கதாநாயகன், கனவுலக கார்த்தி\\

தலைவர் வாழ்க...
தலைவா சீக்கிரம் சந்திப்பை பற்றிய பதிவை போடுங்க

கோபிநாத் said...

\குறிப்பு: இதுக்கு முன்னாடி போடுவதாய் இருந்த சின்சினாட்டியில் நடந்தது என்ன? என்ற பதிவு அடுத்த பதிவாய்....\\

ம்...வரும்...வரும்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கிங்க இதுவரை வரவில்லை....சீக்கிரம் வரவில்லைன்னா போராட்டம் வெடிக்கும் என்பதை கழக உறுப்பினார்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன். ;-)

மணி ப்ரகாஷ் said...

//அதெல்லாம் நீங்க முடிவு பண்ணக்கூடாது அது விருந்தா இல்லையான்னு நாங்க தான் சொல்லணும் :) //

மணிவிலாஸில் எப்பவும் விருந்துதான் அப்படினு (நீங்களாவது) சொல்லுவீங்க னு எதிர்பார்த்தல் தான்...

//அருண் உங்க பிறந்தநாளுக்கு நீங்க இன்னும் ட்ரீட்டே தரல அதுக்குள்ள் என்ன கட்சி மீட்டிங் வேண்டிக்கிடக்கு? :) /

ஆமா..அதானே..(அருண் நீ எனக்கு மட்டும் தந்தத இதுல கணக்குல எடுத்துக்க கூடாது தானே...)

மணி ப்ரகாஷ் said...

///தலைவரே நீண்ட நாட்களாக தங்களை காணாததால் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று கட்சியை மேம்படுத்தியிருப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன் :)
//

தலைவரின் அறிக்கை விரைவில்..


//யார் வீட்டு வாயில் இது?
//

சின்சினாட்டியில் இப்போது நான் மட்டுமே.. இன்னும் கொஞ்ச நாளைக்கு நம்பதுதான்... :))

மணி ப்ரகாஷ் said...

//இதிலென்ன வித்தியாசம்? :)//

அதுவா..அருண் நான் சொல்லிடவா????

மணி ப்ரகாஷ் said...

//irundhaalum ivalo hype-u thevaya ? :)
///

என்னப்ப பண்றது..நம்ப பிறந்தப்பவே இப்படித்தான்..

மணி ப்ரகாஷ் said...

@கொடி,

//aha kolgaila pidiya thaan irukinga//

ஆமா.

கொள்கை இருக்கும்..ஆனா இருக்காது.. ஆனா பிடியா இருக்கும் :)

பின் முன் நடு நவீன தத்துவம்..(தமிழ் மணம் வாழ்க)

மணி ப்ரகாஷ் said...

//அட, சொல்லவே இல்லையே, என்ன என்னமோ நடக்குது? என்னையும் கூப்பிட்டிருந்தா வந்திருப்பேனே? :///

தலைவி நீங்க ஆணி ரொம்ப இருக்குதுனு சொன்னதால்.... உங்களது பணி நலனை கருதி... நாங்களாகவே..

மணி ப்ரகாஷ் said...

//ஆமா...அது என்ன நீங்க இருக்குற படம் மட்டும் பெருச இல்லையே....இதுல ஏதே உள்குத்து இருக்கு //

கோபி.. பெரியவங்க இருக்கிறப்ப சின்னவங்க எல்லாம் அப்படித்தான்..சின்னதா...

மணி ப்ரகாஷ் said...

//ம்...வரும்...வரும்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கிங்க இதுவரை வரவில்லை....சீக்கிரம் வரவில்லைன்னா போராட்டம் வெடிக்கும் என்பதை கழக உறுப்பினார்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன். ;-) ///

ஆகா..ஹைப்ப கிளப்பியாச்சு..ஆனா போடுரதுக்கு ஒன்னும் இல்லையே...

யாரவது உதவி பண்ணுங்களேன்ன்ன்

ambi said...

//வாயிலே போதும் என்று கூட்டத்தை தொடங்க உத்தேசித்த கட்சிக்குழு//

LOL :)))

டேபிளில் பகார்டி பாட்டில் மாதிரி இருக்கே! :)

அடுத்த பதிவு ஆவலாய் வெய்டிங்க். :)