Sunday, November 26, 2006

உன்னிலும் என்னிலும்

உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்
என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

@@ குறிப்பு: இந்த வாரம் எதுவும் எழுத தோணவில்லை .ஆதலால் ஒரு மீள் பதிவு. கூளத்தில் டிசம்பர் மாதம் 2005-ல் வெளியிடப் பட்ட என் ஒரே, முதல் பதிவு

22 comments:

Syam said...

கவித கவித...கலக்கறீங்க மணி :-)

கடல்கணேசன் said...

மணி,
என்ன இது.. எங்கே ஒளிந்திருந்தது இந்த கவிதை?.. டிசம்பர் 2005 ல் இப்படி எழுதிவிட்டு எப்படி சும்மா இருக்க முடிந்தது..

வேறொரு தளத்தில் முத்திரை பதித்து இருக்கிறீர்கள்.. நெருக்கத்தின் அழகு வார்த்தைகளில்..

//உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?//

எல்லாவற்றையும் தெரிந்து விடத் துடிக்கும் ஆர்வம்.. ஆனால், மிச்சம் இருந்தால் தானே நாளை என்பதற்கு எதிர்பார்ப்பு வரும்?.. இது ஒருபக்கம்..

/உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்//
இதைக்கூட சொல்ல முடிகிறது.. ஆனால் எல்லா அந்தரங்கத்தையும் எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியுமா?..

எப்படி எடுத்துக் கொள்வாள்/ன் என்ற பயம் இருக்கும் வரை..

//உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...//

இருக்கத்தான் செய்யும் இல்லையா?..

அழகு கவிதை மணி.. இன்னும் இது போன்ற பல கவிதைகள் கொண்டு வாருங்கள்.. தேடுங்கள், உங்களுக்குள்ளேயே இருக்கும்..

(இன்னும் இரண்டு வாரத்துக்கு உங்கள் பக்கம் வந்து பார்க்க நேரம் இருக்காது.. பின்பு வருகிறேன்)

EarthlyTraveler said...

SIMPLE but BEAUTIFUL.
Ungal indha kavidhai enakku piditha best. simple words but andha unarvu,...miga arumai.
Kavidhai mattumdhan ezhdhuveengala?
--SKM

Arunkumar said...

engaeyo padicha maathiri irukkenu paathen :)

but as usual kavithai super :)

மணி ப்ரகாஷ் said...

@syam

thanks syam

மணி ப்ரகாஷ் said...

//ஆனால் எல்லா அந்தரங்கத்தையும் எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியுமா?..//

ஆம் KG,

எனது வட்டம் சுருங்க சுருங்க என்னில்
சொல்லப் படா உண்மைகள் எனையும் முழுங்கி கொண்டு இருக்கத்தான் செய்கின்றன..

//இன்னும் இரண்டு வாரத்துக்கு உங்கள் பக்கம் வந்து பார்க்க நேரம் இருக்காது.. பின்பு வருகிறேன்//

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வந்து விடுங்கள்

மணி ப்ரகாஷ் said...

@SKM
வாழ்த்துகளுக்கு நன்றி

//Kavidhai mattumdhan ezhdhuveengala?// இல்ல SKM .வேற எதாவதும் எழுதலாம்னு தான் பார்க்கிறேன்.. ஆனா நீங்களும் வராமல் போய்விட்டீங்கினா?

மணி ப்ரகாஷ் said...

@Arun
//engaeyo padicha maathiri irukkenu paathen :)
but as usual kavithai super :)//

yes. arun.. ennoda palya postuthan.... thnks.. arun.. onnum elutha thona mattenkithupa.. unnoda rasam saapidama... :(

வேதா said...

/உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்.../

உண்மை தான் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லாமல் எத்தனையோ:) ரொம்ப அருமையான கவிதை ப்ரகாஷ்:)

கடல்கணேசன் said...

//yes. arun.. ennoda palya postuthan.... thnks.. arun.. onnum elutha thona mattenkithupa.. unnoda rasam saapidama... //

இது எனக்கு தெரியாதே, அருண்.. எனக்கும் ஒருநாள் ரசம் வேணும்.. சீக்கிரம் மணிக்காவது செஞ்சு கொடுங்க.. கவிதை வேணும் இன்னும்..

G3 said...

superb kavithai.. Padikkum bodhey over feelings :) Innum neraya ezhudhunga.. padikka thaan naanga irukkomae :)

Deekshanya said...

chancey illa mani.. nalla kavithai. romba pudichirunthathu!
excellent.. keep writing.
- Deeksh

மணி ப்ரகாஷ் said...

@KG,
Arun ippa pakkathu cityku move aaitaru.. so inimel avar inga weekend vantha than.. :((

Arun:

seekram vaapa...

EarthlyTraveler said...

//எனது வட்டம் சுருங்க சுருங்க என்னில்
சொல்லப் படா உண்மைகள் எனையும் முழுங்கி கொண்டு இருக்கத்தான் செய்கின்றன..//
mmmmm.....sogama olikudhu.
Never allow that to happen,appuram veliyil kodu vara muyarsikkum bodhu varavae varama poidum.

Cheer up.Pakkathu oorukuthanae poi irukkar Dhosth ARUN.

//வேற எதாவதும் எழுதலாம்னு தான் பார்க்கிறேன்.. ஆனா நீங்களும் வராமல் போய்விட்டீங்கினா?//
nanthan varuven.:)
vazhkai oru payanam,povor,varuvor pala.oru uravu thalli pona nallu uravu pakkam varathan saiyum--SKM

மு.கார்த்திகேயன் said...

/உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....//

//உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

//

varave vaa.. super kavithai mani.. kalakureenga ponga

மணி ப்ரகாஷ் said...

@SKM

//vazhkai oru payanam,povor,varuvor pala.oru uravu thalli pona nallu uravu pakkam varathan saiyum
//

thnks SKM..neenga varama ponalum nan vidaratha illa..

i ll do


@karthi

thnks karthi.. apprum trip kalippu innum pogalaiya?

வேதா said...

/உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்.../

உண்மை தான் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லாமல் எத்தனையோ:) ரொம்ப அருமையான கவிதை ப்ரகாஷ்:)

Anonymous said...

super mani

மணி ப்ரகாஷ் said...

வேதா.

நன்றி வேதா..

இராம. வயிரவன் said...

மணி உங்க கவிதை நல்லாருக்கு. ஒவ்வருவருக்குள்ளும் சொல்லப்படாத ஒரு அந்தரங்கம் இருக்கத்தான் செய்கிறது. நிறையப் படித்தால் நிறைய எழுதலாம்.

மணி ப்ரகாஷ் said...

வயிரவன்,,

//ஒவ்வருவருக்குள்ளும் சொல்லப்படாத ஒரு அந்தரங்கம் இருக்கத்தான் செய்கிறது//
ஆம். வயிரவன்.

Divya said...

வாவ் மணி ப்ரகாஷ்! இவ்வளவு சூப்பரா கவிதை எழுதுவீங்களா நீங்க,

உணர்வுகளை மிகவும் யதார்த்தமாக வெளிபடுத்துகின்றன உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளும்! அருமை !!!